Friday, April 21, 2023

​இன்று நாம் எல்லோரும் மதம், மொழி, சாதியால் பிரிந்து கிடக்கிறோம்.

பள்ளிப் பருவத்தில், எனக்கும் இஸ்லாமிய நண்பர்கள் நிறையப் பேர் இருந்தனர். அவர்கள் வேற்று மதத்தவர் என்று நாங்கள் யாரும் எண்ணியதில்லை. அவர்களும் அந்த எண்ணத்தோடு எங்களுடன் பழகவில்லை. அண்ணன், தம்பியாகத் தான் எல்லோரும் ஒற்றுமையாக இருந்தோம். எல்லோரும், ஒருவர் வீட்டுக்கு மற்றவர்கள் போய் வருவது மிக இயல்பாக நடந்து வந்தது.

ஆனால், அதெல்லாம் கடந்த 30 ஆண்டுகளில் மாறி விட்டது. அதற்குக் காரணங்கள் இவை:

1. மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை செய்யச் சென்ற நம் முந்தைய தலைமுறை இஸ்லாமியர்கள், கைநிறையப் பணம் சேர்ந்தவுடன், இங்கே வந்து பல்லாயிரக் கணக்கில் மசூதிகளையும், மதரஸா பள்ளிகளையும் திறந்தனர்.

2. அதைத் தொடர்ந்து, உருது, அரேபிய, பாரசீக மொழிகள் கற்பிக்கும் பள்ளிகளும் பல்கிப் பெருகின. 1990 வரை தம் வீட்டிலேயே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகள் பேசிக் கொண்டிருந்த முஸ்லிம்கள் எண்ணற்றோர் தம் வீட்டிலும், பொது வெளியிலும், உருதுவில் பேசத் தலைப்பட்டனர். பின் எழுதவும் தொடங்கினர்.

3. 1970-களில் அகதிகளாகவும், சட்ட விரோதமாகவும் ஊடுருவிய லட்சக் கணக்கான வங்கதேச முஸ்லிம்கள், நாடெங்கும் பெரு நகரங்களுக்கும், தொழில் மையங்களுக்கும் பரவினர். இவர்களை எல்லாம் 1975-க்குப் பிறகு, வங்க தேசத்துக்கு மீள் குடியேற்றம் (Repatriation) செய்யக் காங்கிரஸ் அரசு தவறி விட்டது. 1. இது வருங்காலத்தில் எவ்வளவு பெரிய ஆபத்தில் கொண்டு போய் விடப் போகிறது என்பதை இங்கிருப்போர் அப்போது உணரவில்லை.

4. 1980-களின் பின்பகுதியில் தோன்றிய காஷ்மீர்த் தீவிரவாதம், நாடெங்கும் கிளைபரப்பத் தொடங்கியது.

5. டிசம்பர், 1992-ல் நடந்த பாப்ரி மசூதி இடிப்பு, நிலைமையை இன்னும் மோசமாக்கியது.

6. அதைத் தொடர்ந்து 1993-ல் மும்பையில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புகள் தீவிரவாதத்தின் புதிய பரிமாணத்தைத் தோற்றுவித்தது.

7. பின்னர், பெங்களூரிலும், பூனாவிலும், ஹைதராபாத்திலும், டெல்லியிலும், கோவையிலும், சென்னையிலும், உத்தரப் பிரதேசத்தில் பல ஊர்களிலும், இன்னும் எண்ணற்ற இடங்களிலும் தொடர்ந்து பல குண்டு வெடிப்புகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. பல ரயில்களிலும், சக்தி மிக்க குண்டுகள் வெடித்தன. அவற்றால், நூற்றுக் கணக்கான உயிர்கள் பலி ஆயின. ஏராளமாகப் பொருள் சேதம் உண்டாயிற்று. அப்பாவி மக்களிடையே பெருத்த பீதி உண்டாகியது.

8. 1999 மே முதல் காஷ்மீரில் ஊடுருவிய பாகிஸ்தானிய தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் துணையுடன் கார்கில் யுத்தம் மூண்டது. இதில் இந்தியா வென்றது.

9. டிசம்பர் 1999-ல், இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 176 பயணிகளுடன் ஆஃப்கானிஸ்தானில் உள்ள கந்தஹார் நகருக்குக் கடத்தப்பட்டது. அப்போது, அப்பாவிப் பயணிகளை மீட்பதற்காக, இந்திய அரசு படு பயங்கரமான தீவிரவாதிகள் பலரைச் சிறையில் இருந்து விடுவிக்க வேண்டி வந்தது.

10. 2001-ல் இந்தியப் பாராளுமன்றம், பாகிஸ்தானிய தீவிரவாதிகளால் தாக்குதலுக்குள்ளானது.

11.இதற்கிடையே பர்மாவில் இருந்து, வங்கதேசம் வழியாக, லட்சக் கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் இந்தியாவுக்குள் குடியேறினர். அவர்களுக்கு, கம்யூனிச அரசு வழி விட்டது; மமதா அரசு துணை நின்றது.

12. குஜராத்தில் 2002-ல் கோத்ரா ரயில் நிலையத்தில் இந்து கர சேவகர்கள் உயிரோடு கொளுத்தப்பட்டனர்.

13. அதைத் தொடர்ந்து, குஜராத் மாநிலம் முழுவதும் பெரும் கலவரம் வெடித்தது.

14. மும்பையில், 2008-ல் 30 நிமிடங்களுக்குள் பல இடங்களில் லஷ்கர்-ஈ-தொய்பா நடத்திய துப்பாக்கிச் சூடும், குண்டு வெடிப்பும் அதுவரை பாரதம் கண்டிராதவை.

15. அன்றைய நாள் தொட்டு, முஸ்லிம்களிடம் 1990-க்கு முன்பு இருந்த அமைதியான குணமும், சகோதர பாசத்துடன் பழகும் தன்மையும் அவர்களிடம் இருந்து நிரந்தரமாக விடைபெற்றுக் கொண்டது. தேசமெங்கும், மத ரீதியில் பெரும் பிளவு உண்டானது.

16. இவை ஒரு புறம் இருக்க, இந்தியாவுக்குள் கட்டுப்பாடின்றி வெள்ளமெனப் பாய்ந்த வெளிநாட்டுப் பணத்தின் துணையுடன், கிறிஸ்துவ மதமாற்றமும் இந்துக்களைப் பிரித்தது. பணத்துக்கும், பிற சலுகைகளுக்கும் ஆசைப்பட்டு கடலோரச் சிற்றூர்களிலும், மலைப் பிரதேசங்களிலும், காடுகளிலும் வாழும் படிப்பறிவில்லா மக்களும், ஏழைகளும் அவர்களுக்கு முதல் இலக்காயினர்.

17. பின்னர், இந்த மதமாற்றம் நகரங்களுக்கும் மெல்ல, மெல்லப் பரவியது.

18. விழிப்புணர்வு கொண்ட இந்துக்களைத் தங்கள் பொது எதிரியாகக் கருதிய முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும், இந்துக்களை ஒன்று சேர்ந்து எதிர்க்க ஆரம்பித்தனர்.

19. பல அரசியல் கட்சிகளும், நாத்திக இயக்கங்களும், பல சாதிச் சங்கங்களும் அவர்களுக்குப் பின் நின்றன; நிற்கின்றன.

20. சமுதாயத்தில் அன்பும், நட்புறவும், அமைதியும், நல்லிணக்கமும் தகர்ந்து போய் விட்டன.

21. இன்றைய சூழலில், பாரத சமுதாயம் இப்படி மத ரீதியிலும், சாதி ரீதியிலும் பிளவுபட்டிருப்பதைக் கண்டு உண்மையான தேச பக்தர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...