Sunday, April 23, 2023

நிலவரம் கொஞ்சம் மாறுது என்று சொன்னேன். குறிப்பாக வொக்கலிகா சமூக வாக்குகள்.

 கர்நாடகத்தில் கள நிலவரம் மாறுகிறது. வொக்கலிகா சமூகத்தினர் அதிகமாக இருக்கும் மைசூர் பகுதிகளில் இது கண்கூடாக தெரிகிறது.

இது நாள் வரை இந்த சமூகம் பெரும்பாலும் தேவேகௌடா கட்சியையும் காங்கிரஸ் கட்சியையும் மட்டுமே அதிகமாக ஆதரித்து வந்தது.
இப்பொழுது உள்ள கள நிலவரம் படி இந்த சமூகம் அதிகமாக வசிக்கும் மண்டியா பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் 70% க்கும் அதிகமாக இந்த சமூகத்தினர் பாஜகவை ஆதரிக்க முடிவு செய்துள்ளார்கள்.
காரணம்? சுமலதா!
சென்ற முறை தேவேகவுடாவின் பேரன் நிகில் கௌடாவை இரண்டு லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் பாராளுமன்றத் தேர்தலில் தோற்கடித்தவர். சுயேச்சையாக நின்று.
இந்த முறை சுமலதா தன் முழு பலத்தையும் பாஜகவுக்குக் கொடுத்திருக்கிறார்.
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...