Friday, April 28, 2023

மைதா மாவு....

 உண்மையச் சொல்லப்போனால் மைதா மாவு கோதுமை மாவில் இருந்து தான் பெறப்படுகிறது.

நன்றாக அமைக்கப்பட்ட கோதுமை மாவு ஒரு மாதிரியான பழுப்பு நிறத்தில் இருக்கும்.
இந்த கோதுமை மாவில் பென்சோயில் பெராக்ஸைடு என்ற ரசாயன பொருளை கலந்து மாவை வெண்மையாக்கி விடுகின்றனர்.
இது தவிர மாவை மிருதுவாக்க ஒரு ரசாயனம், செயற்கை நிறமூட்டுகள், தனிம எண்ணெய்கள், சுவையூட்டுகள், பதப்படுத்தும் பொருட்கள், சர்க்கரை சத்து என ஏராளமான பொருட்களையும் சேர்த்து தானெ மைதா மாவை தயாரிக்கின்றனர்.
எனவே இந்த மாவில் ஒரு சத்தும் கிடையாது எல்லாமே ரசாயனம் தான் என்கிறார்கள்
கோதுமை மாவை முதலில் பதப்படுத்தி அதன் தவிடு மற்றும் என்டோஸ்பெர்ம் போன்ற பகுதிகளை எல்லாம் நீக்கி விடுகின்றனர். இதனால் கோதுமை மாவில் உள்ள முக்கியமான நார்ச்சத்துக்கள், ஊட்டச்சத்துக்கள் எல்லாம் நீக்கப்பட்டு விடுகிறது.
இதை சுத்திகரிக்கப்பட்ட மாவு என்று அழைக்கின்றனர். நாம் சாப்பிடும் ரொட்டி, கேக்குகள், பீட்சா , பர்கர்கள், நூடுல்ஸ் போன்ற எல்லா உணவுகளையும் மைதா மாவு கொண்டு தான் செய்கிறார்கள்.
இந்த மைதா மாவை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் நமக்கு ஆரோக்கிய கேடு தான் மிச்சம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
எனவே தான் மைதாவால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை நீண்ட காலம் வைத்திருக்க முடியாது. சீக்கிரமே அதன் சுவையை இழந்து விடும்.
எல்லா சத்துக்களும் நீக்கப்பட்ட பிறகு கிடைக்கும் மைதாவில் பூஜ்ய ஊட்டச்சத்துக்கள் தான் இருக்கின்றன.
எனவே இந்த மைதா உணவுகளை மட்டும் உட்கொண்டு வந்தால் உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் எதுவும் கிடைக்காது. வயிறு நிரம்பும் ஆனால் ஊட்டச்சத்துக்கள் பற்றாக்குறை தான் மிச்சமாகும்.
சிலர் இதை வணிக ரீதியாக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மைதா என்றும் விற்பனை செய்வது உண்டு. எனவே மக்களே எதையும் அறிந்து வாங்கி உண்ணுங்கள்.
நம்மைச் சுற்றி செய்கின்ற பெரும்பாலான இனிப்பு வகைகள், கார வகைகள் எல்லாமே மைதா மாவால் தான் செய்யப்படுகிறது.
ஏன் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கும் பிஸ்கட்டுகளில் கூட மைதா மாவு தான்.
நிறைய பேர் ஹோட்டலுக்கு போனால் கூட புரோட்டோ தான் ஆர்டர் செய்து சாப்பிடுவார்கள். இப்படி எல்லா வகை உணவுகளிலும் மைதா மாவு என்பது அவசியமாக விட்டது.
உண்மையில் இந்த மைதா மாவினால் ஆன பொருட்களை நாம் வாங்கி சாப்பிடலாமா? இதனால் நமக்கு நன்மையா? இல்லை தீமையா ?இது போன்ற கேள்விகள் இன்றளவும் மக்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கின்றன.
சமோசாக்கள், குஜியா, ஹல்வா, குலாப் ஜமுன் போன்ற மைதாவால் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் தவிர்க்கமுடியாததாக இருந்தாலும், அவை பல உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகின்றன.
​இரத்த சர்க்கரை அளவு அதிகம்
இதன் மாவுச்சத்து, கிளைசெமிக் குறியீடு அதிகம் என்பதால் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. இதன் கிளைசெமிக் அளவு அதிகமாக இருப்பதால் சர்க்கரை அதிகமாகிறது. அதற்கு தகுந்தாற் போல் இன்சுலின் சுரக்க கணையத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டியுள்ளது.
எனவே அதிகமாக மைதா உணவை எடுத்துக் கொள்வது இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்தும். மைதா உணவில் அதிகளவு எண்ணெய் பயன்படுத்தப்படுவதால் கொழுப்பு அதிகமாகி உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
இதனால் உடல் பருமன் அதிகரிக்கும். நீரிழிவு நோயாளிகள் இதை சாப்பிடக் கூடாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மைதாவில் அனைத்து ஊட்டச்சத்துக்களும் இழக்கப்பட்டு அமிலத்தன்மை மட்டும் காணப்படுகிறது. இதனால் அமிலத்தன்மை உணவுகள் உங்கள் எலும்புகளுக்கு தீங்கு விளைவிக்கும்.
இவை கால்சியம் சத்தை அகற்றி எலும்பின் அடர்த்தியை குறைத்து விடும் என்கிறார்கள் மருத்துவர்கள். கீல் வாதத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இதை சாப்பிடக் கூடாது.
மைதா மாவு நம் குடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது கிடையாது. இது இயற்கையிலேயே ஒட்டும் தன்மை கொண்டு இருப்பதால் உங்க செரிமான குடல் உறுப்புகளிலும் ஒட்டிக் கொள்ளும்.
இதை செரிக்க இரைப்பை அதிக வேலை செய்ய வேண்டியிருக்கும். இரைப்பை பிரச்சனைகள் தவிர கல்லீரலுடன் வினைபுரிந்து கொழுப்பை பெற காரணமாக அமைகிறது.
பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. எடை அதிகரிப்பு போன்றவற்றை யும் வழங்குகிறது.
இப்படி ஆரோக்கியமற்ற உணவான மைதாவை எடுத்துக் கொள்வதற்கு பதிலாக பாதாம், ஓட்ஸ், தேங்காய், குயினோவா, ராகி, தாடை, ஜவார் போன்ற முழு தானிய மாவிற்கு உங்கள் தேர்வை மாற்றலாம்.
மைதாவுடன் ஒப்பிடும் போது இந்த உணவுகளில் நிறைய நார்ச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன.
இது உங்கள் இதயம் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கும் உதவும். எனவே மைதாவை பயன்படுத்துவதற்கு பதில் முழு தானிய உணவுகளை பயன்படுத்தி சமைத்து சாப்பிடுங்கள். சுவையுடன் உங்கள் ஆரோக்கியத்தையும் பேணலாம் .
.
மைதாவும் கோதுமையில இருந்துதான் வருது... ஆனா அதுமட்டும் ஏன் கெட்டது? இதுதான் காரணம்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...