Thursday, April 27, 2023

உனக்கு 20 எனக்கு 20, திமுகவிற்கு அண்ணா நாமம்!

 பாஜக-அதிமுக கூட்டணியை உடைக்க திமுக, மீடியா, மற்றும் அரசின் மெஷினெரிகள் மூலம் தனது பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்பதும், அதன் மூலம் வாய்ப்பு கிடைத்தால் (துணை) பிரதமர் என்று கனவு கண்டிருந்தார் சுடலை. அல்லது குறைந்த பட்சம் பாஜகவிற்கு ஆதரவு கொடுத்து ஆட்சியை ஐந்து ஆண்டுகள் சமாளிப்பது என்பதும் Plan B ஆக இருந்தது.

அந்த கனவில் போட்ட மண் தான் அமித்ஷா- எடப்பாடி- அண்ணாமலை டெல்லி சந்திப்பின் மூலம் உறுதியான கூட்டணி. அந்த கனவை கலைத்தது மட்டுமல்ல, GSquare Raid முலம், சுடலையின் தூக்கத்தில் கல்லெரிந்து துக்கத்தில் மூழ்கடித்துள்ளார்.
ஆனால் இது நம்மில் பலருக்கு பெரிய இடியாகவும், வெறுப்பாகவும் கூட இருக்கிறது என்பதிலிருந்து, திமுகவின் சதிக்கு கிடைத்த மாபெறும் வெற்றி என்பதை இந்த பதிவை படித்தபின் உங்களுக்கு புரியும். எனவே எல்லா சங்கிகளுக்கு மட்டுமல்ல, கூட்டணி அன்பர்களுக்கு மறக்காமல் பகிருங்கள். என்னை விட கட்சி பெரிது, கட்சியைவிட நாடு பெரிது என்பது நமது உண்மையான் கொள்கை என்றால் இதை நம்மால் ஏற்க முடியும்.
எனவே சரண்டர் ஆனது அண்ணாமலையுமல்ல, எடப்பாடியும் அல்ல இன்று டெல்லி போகும் சுடலைதான்!
📌 அண்ணாமலையின் பெர்ஃபார்மென்ஸில் மோடி மிகவும் திருப்தி, மோடி விரும்பவதும் தனியாக நின்று பாஜக அரசு ஆட்சி அமைப்பதைதான். அதற்காக தாமதம் ஏற்பட்டால் பரவாயில்லை என்ற மனத்தோடு. ஆனால் அமித்ஷாவின் கணக்கு வேறு மாதிரியானது. அப்படிப்பட்ட அரசியலில் திமுக தற்காலிகமாக ஒரு வெற்றியை பெற வாய்ப்புண்டு, அதைக்கூட அனுமதிக்க கூடாது என்பதே அவரின் திட்டஙகளும், காய நகர்த்தலும். அதன் மூலம் Win for BjP - Win for ADMK -Win for India என்பது மட்டுமல்லா OPS வரை எல்லோருக்குமானதுதான் அந்த ஃபார்முலா!
அதிமுக-பாஜக பிளவால் திமுக 30 சீட்டுக்கள் பெற்றால் அது இரண்டு பேருக்குமான நஷ்டத்தின் மூலம் மட்டுமே. எனவே திமுக அந்த லாபத்தை அடையக்கூடாது, அதற்கான எந்த வாய்ப்பையும் கொடுத்துவிடக்கூடாது என்பதே அமித்ஷாவின் திட்டம். மேலும் பாஜகவின் 400+ டார்கெட் என்பது தேர்தலுக்கு முந்தைய கூட்டணியின் வெற்றியாக இருக்க வேண்டும் என்பதே அவரின் திட்டம். அது Pesimistic போல இருந்தாலும், அதில் ஒளிந்திருப்பது Optimism என்பது இந்த பதிவின் இறுதியில் புரியும்.
அதனால், உங்கள் எதிர்ப்பை தற்போது ஒதுக்கி வைத்துவிட்டு, உங்களின் அடுத்த தேர்தலுக்கான டார்கெட் என்ன என்பதே அமித்ஷாவின் கேள்வியாக இருந்தது. அதில்
1) இரு கட்சி தலைமையுமே திமுகவை தோற்கடிப்பது என்பது ஒன்றுபட்ட நோக்கமாக இருந்தது.
2) அதற்கு மேலாக அதிமுகவின் நோக்கம் அடுத்த சட்டசபையில் எடப்பாடி முதல்வராவது.
3) பாஜகவின் நோக்கம் எதிர்கட்சியாவது மட்டுமல்ல, அதற்கு முன்பு பாரளுமன்றத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்று தமிழகத்தின் பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்புவது.
ஆனால் அமித்ஷா அப்படியா என்று கேட்டுக்கொள்பவர் அல்ல. எத்தனை தொகுதிகள் அதிகபட்சம் தனித்து நின்று உங்களால் அதை செய்ய முடியும் என்று அண்ணாமலையிடம் கேட்க, பாஜகவின் எண்கள் ஒற்றை இழக்கமாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால் அமித்ஷா கொடுத்த தலவல்கள், பாஜக அதிகபட்சம் 5 இடங்களை மட்டுமே வெற்றிபெற முடியும் என்பது பற்றிய முழு விபரங்கள், அதில் எந்த தொகுதி என்பது மட்டுமல்ல, நூலிலையில் தவற விடுவதற்கான தொகுதிகளையும், டெபாஸிட் பெறக்கூட போட்டி போடவேண்டியுள்ள பலவீனமான தொகுதிகளையும், இன்னும் வீக்காக இருக்கும் ஏரியாக்களையும் புள்ளி விபரங்களுடன் தெரிவித்திருக்கிறார்.
அப்படியெனில் கூட்டணி சேர்ந்து இரட்டை இழக்கத்தை அடைய முடியும் என்றால் உங்களுக்கு பிரச்சினையா? என்ர அந்த கேள்விக்கு ஆமோதிப்பதைவிட அண்ணாமலையிடம் வேறு பதில் இருக்கவில்லை.
எடப்பாடியின் பிரதிநிதியிடம், பாஜக இல்லாமல் உங்களால் அதிக பட்சம் எத்தனை இடம் வெற்றிபெருவீர்கள் என்று கேட்டதுக்கு, பதில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியாக இருந்தது. மேலும் அமித்ஷாவிடம் இருந்த விபரங்களின்படி, அதிமுக இரட்டை இலக்கத்தைக்கூட தொட முடியாது என்பது தற்போதைய நிலை என்பதை புள்ளி விபரங்களுடன் புட்டு, புட்டு விவரித்துள்ளார்.
மேலும் அந்த தொகுதிகள் கூட உங்களின் கொங்கு மண்டலத்தில் இருந்தல்ல, வட தமிழகத்தில் இருந்து மட்டுமே என்றால், அதன் பின்னர் கட்சியில் யார் கை ஓங்கும்? திமுகவுடன் நெருக்கமாக உள்ள அதிமுகவில் உள்ள வட தமிழ்கத்து தலைவர்கள் பற்றிய விபரம் எடப்பாடிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதற்காக திமுக மிகப்பெரிய அளவில் திட்டங்களையும், அதை மீடியாவின் மூலமாக முன்னெடுப்பதை விவரித்துள்ளார்கள்.
அப்படியெனில் அந்த வெற்றியை நீங்கால் சொந்தம் கொண்டாட முடியாத சூழலில் மீண்டும் உங்கள் கட்சியை கைப்பற்றவதற்காக இன்னொருமுறை போராட வேண்டும்? அப்போது அடுத்த சட்டசபை தேர்தலுக்கான அதிமுகவின் வாய்ப்பு மேலும் வலுவிழக்காதா?
அதற்கு பின்பு, எடப்பாடியின் பக்கத்தில் பெரிய மாற்றம். அதை செய்து முடித்தவர்கள் கொங்கு மண்டல மணிகள் என்கிறார்கள்.
மேலும் திமுகவை தேர்தலுக்கு முன்பாக மத்திய அரசு பார்த்துக்கொள்ளும். அப்படி செய்தால் கூட, தொண்டர்கள் அளவில் பரவியுள்ள வெறுப்பு, அதை கட்டமைத்தது திமுக என்பதை விலாவாரியாக உளவுத்துறை மூலம் கிடைத்த தகவல்களை, பகிர்ந்து, விவரித்து, திமுகவிற்கு கிடைத்தது போக மீதி இருப்பதை பகிர்ந்து கொள்வதைவிட, மொத்தமாக எல்லா சீட்டுக்களை வென்று அதை பகிர்ந்து கொள்வதுதான் புத்திசாலித்தனம் என்பதை விளக்கி இருக்கிறார்கள்.
எனவே அந்த பிரச்சினையை உடனே தீர்த்து, தொண்டர்களிடம் இணக்கத்தை கொண்டு வராவிட்டால். கடைசி நேரத்தில் கூட்டணி அமைப்பது முற்றிலும் வீண் என்பதையும் விளக்கி இருக்கிறார்கள். மேலும் ஊழல்களால் நிறைந்த திமுகவை சேர்ந்து தீவிரமாக தாக்கினால, அடுத்து வரும் தேர்தலே திமுகவிற்கு கடைசி தேர்தலாக இருக்கும் என்றும், அப்போது அதிமுகவின் கனவான அடுத்த முதல்வராக எடபாடி ஆவதும், பாஜகவின் எதிர்கட்சியாவதும் எளிதாக அடைய முடியும்.என்பதை விவரித்துள்ளார்கள். மேலும், மீண்டும் தமிழ்கத்தில் முன்கூட்டிய தேர்தலுக்கு கூட வாய்ப்பு இருப்பதையும் சொல்லப்பட்டிருக்கிறது.
அதே சமயம், அண்ணாமலையின் கருத்தை கேட்காமல் எந்த முடிவையும் பாஜக எடுக்காது என்பதன் மூலம், அவரின் தலைமைக்கானதோ, அல்லது மரியாதைக்கானதோ எந்த காம்ப்ரமைஸும் இல்லை என்பதை உறுதிபடுத்தியது மட்டுமல்ல, அதை அதிமுகவிற்கு தெரிவிக்க, அந்த கூட்டத்தில் அவரும் இருந்தார். அந்த சமிஞ்ஞை என்பது அதிமுகவிற்கு மட்டுமல்ல, பாஜகவில் உள்ள கூட்டணிக்கும், கட்சிக்குள்ளேயே இருக்கிற எதிர்ப்பாளர்களுக்கு மானதே!
அதன்படி அமித்ஷா முன்வைத்த தீர்வு, உனக்கு 20, எனக்கு 20 ஃபார்முலாத்தான். அந்த ஃபார்முலாப்படி சில யூகங்களாக சொல்லப்படும் விஷயங்கள்.
அதாவது பாஜக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம், OPS, TTV, SRM பச்சைமுத்து, விசி சண்முகம் புதுச்சேரி காங்கிரஸ் என எல்லா கூட்டணி கட்சிகளுக்கும் சேர்த்து 20 தொகுதி. அதிமுகவிற்கு மட்டும் 20 தொகுதி. இதுதான் அமித்ஷாவின் உனக்கு பத்து, எனக்கு பத்து என்ற புதிய ஃபார்முலா. பாஜக:10, OPS+TTV:4, தேமுதிக:2, தமாகா:1, பச்சைமுத்து:1, சண்முகம்:1, புதுச்சேரி காங்கிரஸ்:1. இதில் பாஜக தனக்கு வெற்றி பெரும் 8 தொகுதிகளை எடுத்துக்கொள்ளும் என்பது புரிதல்.
இதை செய்தால் அண்ணாமலை கோரிக்கையான விடை அதிகம் கிடைத்துவிட்டதல்லவா?
இதில் பாமக, விசிக வந்தால் அதிமுக பார்த்துக்கொள்ள வேண்டுமா, இல்லையா என்பது தெரியவில்லை.
ஆனால் விசிக வந்தால் அது நேரடியாக அதிமுகவுடன் பேரம் பேசிக்கொள்வதன் மூலம் எங்களுக்கும் பாஜகவிற்கும் நேரடி தொட்ர்பு இல்லை என்பது அவர்களின் பொதுவெளிவாதமாக இருக்கும். இங்கே அவர்கள் கேட்பது சிதம்பரம் தொகுதி, ஆனால் பாஜகவில் தடா பெரியசாமிக்கு அது கொடுக்கப்படும் என்கிறார்கள்.
அவருக்கு மாற்று தொகுதியான வேலூர் மாவட்டத்தில் கேட்பதாக செய்தி. அதே தொகுதியை ஆண்டிமுத்து ராசா திமுகவிலிருந்து போட்டியிடக்கூடும் என்பதால் வெற்றி எளிதாகும் என்பது கணக்கு. அதன் காரணமாகவே திருமாவின் சமீபத்திய பாஜக சம்பந்தப்பட்ட மாற்றம் என்று நம்பலாம்.
பேச்சுவார்த்தைகள் எல்லாம் ஏற்கனவே முடிந்துவிட்டது, இதற்கு ஒத்துக்கொண்ட பின்னர்தான் டெல்லி போயிருக்கார்கள்.
அண்ணாமலையின் சந்தேகமான, அதிமுகவின் ஓட்டுக்கள் பாஜகவிற்கு விழ வேண்டும் என்பது அதிமுகவின் பொறுப்பு.
அதே போல அதிமுகவின் சந்தேகமான சிறுபானமையினரின் ஓட்டு பற்றி, திருச்சபை மூலம் நடந்த முன்னேற்றம் பற்றி பாஸிட்டிவான தகவல் கொடுத்துள்ளார்கள். ஆம், மோடி அவர்கள் வாடிகன் போனபோது 15 நிமிடம் மட்டுமே போப் நேரம் ஒதுக்கி இருந்தார், ஆனால் அந்த மீட்டிங் 1:20 மணி நேரம் போனதையும், அதன் பின்னர் திருச்சபைகளில் ஏற்பட்ட மாற்றங்களையும் விவரித்துள்ளார்கள்.
அதை சமீபத்தில் கேரளாவின் மோடி விஜயத்தின் போது 9 ஆர்ச் பிஷப்கள், வாடிகனின் உத்தரவிற்கு ஏற்ப சந்தித்ததையும், ரோமன் கத்தோலிக்க சபைகளின் வாக்குகளின் மாற்றங்களால், பாஜக கேரளாவில் நல்ல வெற்றியை பாராளு.மன்ற தேர்தலில் பெரும் என்பதும் கூட விளக்கப்பட்டுள்ளதும் ஆனால் பெந்தகொஸ்து போன்றவை இதில் இன்னும் அடங்கவில்லை என்பதும் கூட தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களில் ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்கள் பற்றியும், ஒன்று பட்ட இந்தியாவை உருவாக்க தேசிய சிந்தனை கொண்டவர்கள் மதம், ஜாதி, மொழி வேற்றுமைகளை கடந்து இணைய வேண்டிய தேவையையும், அதன் மூலம் அடுத்த ஐந்தண்டுகளில் செய்ய வேண்டிய மாற்றங்கள், உலகளவில் இந்தியாவின் நிலைகள் என்பது பற்றியும் பேசி இருக்கிறார்கள்.
பொதுவாக டெல்லியில் நடந்தது என்ன என்று வெளிப்படையாக சொல்லப்போனால் NDA கூட்டணிக்கு போட்ட அச்சதை மட்டுமல்ல, திமுகவிற்கு போட்ட வாக்கரிசி எனபது புரிகிறதா?
என்னை விட கட்சி பெரிது, கட்சியை விட நாடு பெரிது! இணைவோம், வெல்வோம்!
🐶

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...