Thursday, April 27, 2023

காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

 "நாங்கள் இருந்த இடம் மிகவும் மேசமான நிலையில் இருந்தது. அங்குதான் ராணுவத் தளங்கள் உள்ளது. அதைக் கைப்பற்ற கடும் சண்டை நடைபெறுகிறது. அங்கு போடப்படும் குண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். போர் தொடங்கிய முதல் நாளில் இருந்து மின்சாரம் இல்லை. முதல் 4 நாட்கள் இணைய இணைப்பு இருந்தது. அப்போது, இந்தியாவின் தூதர் எங்களைத் தொடர்பு கொண்டு பயப்பட வேண்டாம் என்று தெரிவித்தார்.

அதன்பிறகு நாங்கள் இருந்த இடத்தில் எங்களை மீட்டு பேருந்து மூலம் அருகில் இருந்த விமான நிலையத்துக்கு கொண்டு வந்தனர். விமான நிலையத்தில் ஒருநாள் தங்கி இருந்தோம். 26 மணி நேரம் பேருந்தில் பயணம் செய்து விமான நிலையம் சென்றோம். அங்கிருந்து விமானப் படையின் விமான நிலையம் மூலம் மற்றொரு விமானம் நிலையம் வந்தோம். அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி வந்து தற்போது சென்னை வந்து உள்ளோம்."
சூடானில் இருந்து மீட்கப்பட்டு இந்தியா திரும்பிய குழுவில் சில தமிழர்களும் இருந்தனர்.
மத்திய அரசு இவர்களை சூடானில் இருந்து போர் விமானங்கள் மூலமாக மீட்டு, சவூதி அரேபியாவிற்கு வந்து, அங்கிருந்து டெல்லிக்கு வந்தடைந்தது.
அங்கே இவர்களை வரவேற்ற தமிழக குழுவினர் சென்னைக்கு விமானம் மூலமாக அழைத்து வந்து சேர்த்துள்ளனர்.
இதுல சோகம் என்னன்னா,
'அந்த பெண்மனியை சூடானில் இருந்து மீட்டு கொண்டு வந்தது மத்திய அரசு. ஆனால் நன்றி தமிழக அரசுக்காம்.'
"கடந்த 15 நாட்கள் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. என்னுடைய கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் மீட்கப்பட்டு தமிழகம் வந்தது எனது வாழ்வின் பெரிய மாற்றமாக இருக்கும். தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்."
இது எப்படி இருக்கு?
இதைவிட இன்னொரு பிரமாதமான விஷயத்தை பாருங்க.
நான்கு பேர் கொண்ட தமிழக குடும்பம் ஒன்றினை மத்திய அரசு மீட்டு டெல்லி அழைத்து வந்தது. தமிழக அரசின் குழுவால் அங்கிருந்து அவர்கள் மதுரைக்கு விமானம் மூலமாக அனுப்பப்பட்டனர். அவர்கள் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்
"போர் குறித்து பத்திரிகை, ஊடகங்களில் செய்திகள் வந்ததால் தமிழக அரசு மீட்பு நடவடிக்கை எடுத்தது.
அங்கு இன்னும் மூன்றாயிரத்துக்கும் அதிகமான இந்தியர்கள் அங்குள்ளனர். அவர்களை வாட்ஸ்அப் குழு மூலம் மீட்க முயற்சிக்கிறோம்."
அடேங்கப்பான்னு சொல்ற மாதிரி இருக்குல்ல.
எல்லாம் திராவிட மாடல் ரகசியம்.
இந்த விஷயத்தில் ஸ்கோர் பண்ண வேண்டியது தமிழக பாஜக.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் பிசியாக இருக்கிறார்.
ஆனால் ஊருக்குள் இருக்கும்
'நாங்களும் தலைவர்கள் தான் என்று ஆளாளுக்கு பேட்டி கொடுக்கற ஒருத்தரையும்'
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காணவில்லை.
அண்ணாமலை ஏதாவது பேசினால், உடனே நொட்டை சொல்ல மட்டும் ஆளாளுக்கு பறந்து வருங்க. இப்ப எங்கே உட்கார்ந்து மிக்சர் சாப்பிட்டுகிட்டு இருக்குதுகன்னு தெரியலை...
நல்லா வருவீங்கய்யா நீங்க எல்லாம் ...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...