Saturday, April 22, 2023

மாடுகளுக்கும், மனிதர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

 12 மணி நேர வேலைத் திட்டத்தின் மசோதா கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி சட்டசபையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இது எல்லோருக்குமானதல்ல.. விரும்பும் தொழிற்சாலைகளில் மட்டும் என்கிறார் அமைச்சர். வாரத்திற்கு 4 நாள்கள்தான். மொத்தம் 48 மணி நேரம், மூன்று நாள்கள் விடுமுறை என்கிறார். கூடுதல் சம்பளம் நிர்ணயிக்கப் படும் என்கிறார்.
இதெல்லாம் முதலாளிகளுக்குச் சாதகமானவையே என்கிறார்கள் தொழிற்சங்கத் தலைவர்கள். உழைப்புச் சுரண்டல் என்கிறார்கள்.
ஏற்கெனவே 12 மணி நேர உழைப்பு இங்கே அறிவிக்கப்படாமல் பல இடங்களிலும் நடந்துகொண்டிருப்பதே நிஜம்.
உணவு விடுதிகள், மருத்துவ மனைகள், ஜவுளி வர்த்தகக் கடைகள், கட்டிடத் தொழிலில் என்று பல உதாரணங்கள் காட்ட இயலும். குறிப்பாக வட இந்தியத் தொழிலாளர்கள் எந்த நேரக் கட்டுப்பாட்டிலும் வர மாட்டார்கள்.
12 மணி நேர வேலைத் திட்டம் மெதுவாக மறைமுகக் கட்டாயத்திற்குத் தள்ளப்பட வாய்ப்பிருக்கிறது. பேருந்து, இருப்பூர்திகளில் வந்து போகிற பயண நேரமும் சேர்த்தால் 15 மணி நேரமாகிவிடும்.
ஒரு மனிதனுக்கு மீதியிருப்பது 9 மணி நேரம் மட்டுமே. இதில் காலைக் கடன், குளித்தல், உடுத்தல், உண்தல் இவற்றுக்கு மிகக் குறைவாக ஒரு மணி நேரம் வைத்துக்கொண்டாலும்..
எஞ்சிய எட்டு மணி நேரத்தில்தான் உறங்க வேண்டும். மனைவியைக் கொஞ்ச வேண்டும். பெற்றோரிடம், குழந்தைகளிடம் பேச வேண்டும். இதற்கு நடுவில் டாஸ்மாக் பழக்கம் இருப்போருக்கு அதற்கும் நேரம் வேண்டும்.
உடல், மன ஆரோக்கியம் சார்ந்து யோசித்தால் 12 மணி நேர வேலை என்பது நன்மை பயக்குமா, கெடுக்குமா என்பதை யோசிக்க ஒரு மருத்துவராக இருக்க அவசியமில்லை.
சம்பளத்துடன் மூன்று நாள் விடுமுறை இருக்கிறதே என்று யோசித்தால்.. மூன்று நாளும் டாஸ்மாக் கொண்டாட்டங்களில் திளைக்கவும் வாய்ப்பிருப்பதையும் சேர்த்து யோசிக்க வேண்டும்.( ஹய்யா! அரசுக்குக் கூடுதல் வருமானம்)
மேயாமல் நின்ற இடத்தில் உண்டு உறங்கி பால் கறக்கும் கிட்டத்தட்ட இயந்திர மாடுகள் கொண்ட பால் பண்ணை மாடுகளுக்கும், மனிதர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது.
சாதகங்களை விடவும்..
பாதகங்களே அதிகமாகத் தெரிகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...