Friday, April 21, 2023

மயக்கும், மந்திரக் குரல்!

 ஆயிரம் மலர்களே பாடகி ஜென்சி....

80-களில் நிகழ்த்திய இசை மேஜிக், இன்றளவும் இன்னிசை கீதங்கள்.
அதே காலகட்டத்தில், `தெய்வீக ராகம் தெவிட்டாத பாடலா'க ஒலித்த ஜென்ஸியின் தனித்துவமான குரலுக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம்
வாழ்வில் ரொம்பவும் நல்ல மனிதர்கள் மிக சாதாரணமாய் மிடில் கிளாஸ் மக்களாய், பலரும் அறியாத படி, எங்கோ ஒரு மூலையில் இருப்பதை காணலாம்
அதே போல் ஒரு நல்ல பாடகி நிறைய பாடல்கள் பாடா விடினும் என்றைக்கும் மனதில் நிறைகிறார்.
அவர் தான்ஜென்சி என்றொரு இனிய பாடகி
80 - களில் இளையராஜா இசையில் சில மறக்க முடியாத பாடல்களை தந்தவர் ஜென்சி.
தமிழில் முதன் முதலில் மகேந்திரனின் classic-கான
" முள்ளும் மலரும்" படத்தில்
🌹"அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும்" என்ற பாடலை பாடினார். இவரது எந்த பாடலை கேட்கும் போதும் மனம் பொன்னூஞ்சல் ஆடவே செய்கிறது.
"ப்ரியா"திரையில் ஜேசுதாசுடன் இணைந்து
🌹" என்னுயிர் நீதானே" பாடலை பாடினார். இந்த பாடலும் ஒரு அற்புதமான பாடல்; பல்லவியில் ஜேசுதாசும், இவரும் மாறி மாறி உடனுக்குடன் பாடுகிற மாதிரி மிக அழகாக இந்த பாடலை வடிவமைத்திருப்பார் இளைய ராஜா
பாரதி ராஜாவின் " புதிய வார்ப்புகளில்" இரண்டு பாடல்கள்..
🌹"தம்தன தம்தன தாளம் வரும்..
இது மிக வேகமாக செல்லும் பாடல். அனாயசமாக பாடியிருப்பார் ஜென்சி.
இன்னொரு பாடலான
🌹"இதயம் போகுதே.. எனையே பிரிந்தே" அந்த காலத்தில் காதலர்களின் தேசிய கீதமாக ரொம்ப காலம் இருந்தது!!
அடுத்து பாரதி ராஜாவின் நிறம் மாறாத பூக்களில் மீண்டும் இரு பாடல்கள்..
🌹"ஆயிரம் மலர்களே மலருங்கள்.. " What a song!!!
கோடையில் மழை வரும்.... வசந்த காலம் மாறலாம்;
எழுதி செல்லும் விதியின் கைகள் மாறுமோ?
கால தேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்...
நீ யாரோ? நான் யாரோ? யார் சேர்ப்பதோ"
என்ற வரிகளை ஜென்சி பாடுவதையும், அதன் இடையில் வரும் "ஹம்மிங்"கையும் ஒரு முறை கேட்டு பாருங்கள்.
இதே படத்தில் இன்னொரு பாடலான
🌹 "இரு பறவைகள். மலை முழுவதும் இங்கே அங்கே பறந்தன.." என்ற பாட்டும் அதிகம் வெளியே தெரியா விடினும் கூட ஒரு அற்புதமான மெலடி,
அடிக்கடி கேட்டு ரசிக்கும் பாடல்களில் ஒன்று! மெலடி மட்டுமில்லாமல்,இனிமை
🌹தோட்டம் கொண்ட ராசாவே (பகலில் ஒரு இரவு)
🌹ஹே மஸ்தானா ( அழகே உன்னை ஆராதிக்கிறேன்)
போன்ற fast beat பாடல்களும் கூட அவர் பாடியிருக்கிறார். ஆனால் அவர் இன்றும் நினைவு கொள்ள படுவது அவரது மெலடிக்காக தான்.
1978 முதல் 1982 வரை நான்கே ஆண்டுகள் தான் தமிழ் சினிமாவில் பாடியிருக்கிறார். திருமணத்திற்கு பிறகு ஜென்சி பாடுவதை நிறுத்தி விட்டார்
என்று தகவல்
ஒரு முறை Super Singer Junior-ல் Judge ஆக வந்திருந்தார். ஒரு பாடகி போல் இல்லாமல் மிகவும் வெள்ளந்தியாய் பேசினார்!
எந்த குழந்தையையும் எந்த குறையும் சொல்ல வில்லை. வெறும் பாராட்டுக்களால் அவர்களை நனைத்தார். ரொம்ப innocent-ஆன சிரிப்பு!! அவரது குழந்தை உள்ளம் பார்க்க முடிந்தது
🌹மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் (கரும்பு வில்) ;
🌹பூ மலர்ந்திட நடமிடும் பொன் மயிலே (டிக் டிக் டிக் );
🌹காதல் ஓவியம் பாடும் காவியம் (அலைகள் ஓய்வதில்லை) ;
🌹தெய்வீக ராகம்.. தெவிட்டாத பாடல்.. (உல்லாச பறவைகள்)
போன்ற எத்தனையோ பாடல்கள் என்றும் கேட்டு ரசிக்க தக்கவை.
கடவுள் அமைத்த மேடை என்ற படத்திலிருந்து
🌹 மயிலே மயிலே" என்ற ஒரு பாட்டு ஜென்சி கொஞ்சி கொஞ்சி பாடியிருப்பார். கூடவே SPB-யும். ரொம்ப அசத்தலான பாட்டு இது!!
ஜானி படத்தில்,
🌹" என் வானிலே ஒரே வெண்ணிலா" என்ற பாட்டு.. இதில்,
🌹"சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே..... வார்த்தைகள் தேவையா?? "
என்று பாடி விட்டு ஒரு ஹம்மிங் செய்வார் பாருங்கள்..
ஆஹா.. இதனை பாராட்ட ..வார்த்தைகள் தேவையா??
வேலை பளு காரணமாக, பாடுவதும் மெல்ல குறைந்துவிட்டது.. ஆனால், இறுதிவரை இவர் வாய்ப்பு கேட்டும் யாரிடமும் செல்லவில்லை.. ஒரு பேட்டியில் சொல்கிறார்,
'எனக்கு தானா போய் வாய்ப்பு கேட்கிற நுணுக்கம் தெரியல... உதவவும் எனக்கு யாரும் இல்லை... ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் டீச்சரா வேலை கிடைச்சது. முழு மனசோட வேலை செய்தேன்..
ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு இசையை கற்று தந்தேன் அப்படிங்கிற திருப்தி இருக்கு' என்கிறார்.
இந்த மனநிறைவான வார்த்தைகளை எத்தனை பேரால் சொல்ல முடியும் என்பது தெரியவில்லை
இப்போது வரை ரசிகர்களால் ஜென்ஸியை மறக்க முடியவில்லை.. பாடல்களே அதிக தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில்,சன்னமான குரலில் இவர் பேச்சுக்களை கேட்டவர்களும் மிகக்குறைவுதான்..
எப்போது தன்னை பற்றி பேசினாலும் வாய்ப்பு தந்த இளையராஜாவை மறக்காமல் கண்ணீருடன் நினைவு கூறுவார்.....
May be an image of 1 person
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...