Saturday, April 22, 2023

மொத்தத்தில் கோமாளிகள்....................

 விளையாட்டுத்துறை அமைச்சர் முழு நேரம் சினிமாத்துறையும் ஐபிஎல் துறையும் தான் பார்க்கிறார்.

நிதியமைச்சர் தன் குடும்பத்தை விட அவர்களுக்கு சொத்து அதிகமாகி விட்டது என பொறாமையில் ஏதேதோ உளறிக் கொண்டிருக்கிறார்.
சுற்றுலாத்துறை அமைச்சரின் மருமகன் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் சொந்த தோட்டத்திற்கு அனுமதியின்றி ரோடு போட்டு கொண்டு இருக்கிறார்.
பத்திர பதிவுத்துறை அமைச்சர் மகன் கல்யாணத்திற்கு இன்னமும் மொய் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.
மின்சாரத்துறை அமைச்சர் எந்தவித புது திட்டங்களும் இல்லாமல் சாராயத்துறையை மட்டுமே பார்த்து கொண்டு இருக்கிறார்.
தொழில்துறை அமைச்சர் மனிதவள சுரண்டலுக்கு 12 மணி நேரமாக்கி மகிழ்கிறார்.
நீர்வளத்துறை அமைச்சர் பாலாற்றில் மணல் அள்ளிக்கொண்டு அடிமை என கல்லறையில் எழுதுங்கள் என எம்எஸ் பாஸ்கருக்கு டப் குடுத்து நடிக்கிறார்.
நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருக்கு இன்னமும் மாவட்ட அரசியல் பிரச்சனைகள் ஓய்ந்தபாடில்லை.
உயர்கல்வித்துறை அமைச்சரோ அவர் துறைக்கு எதிராக முழு நேரமும் ஓசி ஓசி என பேசிக்கொண்டு இருக்கிறார்.
உணவுத்துறை அமைச்சரோ ரியல் எஸ்ட்டேட்டில் மட்டுமே முழு நேரம் இருக்கிறார்.
பிற்படுத்தோர் நலத்துறை அமைச்சர் எங்கே பிறப்படுத்தப் பட்டு இருக்கிறார் என தெரியவில்லை.
மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வோ முதல்வருக்கு முன்னால் கூட சூட்டிங் மட்டுமே நடத்துகிறார்.
போக்குவரத்து துறை அமைச்சர் எந்த பக்கம் போய்க்கொண்டு இருக்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நாளொரு அறிவிப்பும், திரும்ப பெருதலுமாய் இருக்கிறார்.
இத்தனையும் ஏனென்று கேட்க வேண்டிய முதல்வரோ, அனைத்து மக்களுக்குமான முதல்வர் செய்ய வேண்டிய தலையாய கடைமையாம், கிரிக்கெட்டை ஐபிஎல் ஜெர்சியை அணிந்து கொண்டு பார்க்கிறார். பொம்மை கூட சற்று மாறுபட்டு நடக்கும், இவர் பொம்மைக்கே டப் குடுப்பார் போல.
மொத்தத்தில் கோமாளிகள் ஆண்டால், கோவணம் கூட மிஞ்சாது என்பது நிரூபணமாகி வருகிறது.
May be an image of 1 person and skateboard
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...