மிகப் பெரிய கோபக்காரங்களை பார்த்துருக்கீங்களா?
அவங்களை நல்லா கவனிச்சுப் பாருங்களேன்.
எதுக்கெடுத்தாலும் காட்டுக் கத்தலா கத்துவாங்க,
அழுவாங்க. சீக்கிரம் உடைஞ்சும் போவாங்க, தனியாக பேசுவாங்க, அவசரப்படுவாங்க. தன் பக்கத்து நியாயத்தை எப்படி வெளிப் படுத்தனும் னு தெரியாமல், தான் பேச வந்ததைக் கோபத்தால் மாத்தி கெட்ட பேரு வாங்கிட்டுப் போவாங்க.
ரொம்ப நல்லவங்களா இருப்பாங்க. முக்கியமா நடிக்க மாட்டாங்க.
யாருக்கும் ஒரு உதவி னா கூட உடனே ஓடிப் போய் உதவுவாங்க.
ரோட்ல வண்டியில் போகும் போது யாராவது பின்னாடி இருந்து வேகமா ஹாரன் அடிச்சா கையசைச்சு போக விடுவாங்க.
ரோட்ல ஒரு நாயோ, அணிலோ, பறவையோ அடிப்பட்டுக் கிடந்தால் கூட என்னாச்சோ னு பதறித் துடிப்பாங்க.
லைன்ல நிக்கும் போது யாராவது பின்னாடி இருந்து அவசரப்படுத்தினால் உடனே வழி விடுவாங்க.
யாராவது எங்கேயோ கஷ்டபட்டால் யாராவது எங்கேயோ வலிச்சால் , டிவியில சீரியல்ல யாராவது வேதனைப் பட்டா இங்கே இவங்களுக்கு வலிக்கும்.
துடிச்சுப் போவாங்க..
பாவம் இல்ல னு தனக்குள்ளே பேசி முனங்குவாங்க.
வளர்ந்த குழந்தைப் போல இருப்பாங்க.
ரொம்ப அமைதியாக இருப்பாங்க, அதிகமாக தனிமையை நாடுவாங்க,
எல்லோரையும் நேசிப்பாங்க.
தனக்கு னு இருக்கிற உயிரை 'தனக்கு மட்டும் தான்' னு நினைச்சு உருகிடுவாங்க. இது தான் இவங்ககிட்ட பெரிய பிரச்சனையே.
எத்தனையோ நெகட்டீவ் அவங்க மேலே இருந்தாலும் ஒரேயொரு விஷயம் அவங்களை முன்னிருப்பு செய்யும்.
ஆம் அது
அடுத்தவர்களுக்கு துரோகம் செய்ய மாட்டாங்க எப்போதும் யார் முதுகிலும் குத்தவே மாட்டாங்க உயிரே போனாலும் கூட இது தான் உண்மை...
ஆனால் இப்படிப்பட்ட ஆட்களைச் சுற்றி எந்த உறவுமே இருக்காது இருக்கவும் மாட்டார்கள். ஏனென்றால் ஏமாற்றுபவர்களுக்கும், நம்பிக்கை துரோகிகளுக்கும் தான் இது காலம் √
No comments:
Post a Comment