Saturday, July 8, 2023

பிராமணர்களை_கேலி_செய்பவர்களே_உங்களுக்காக...

 

பிராமணர்கள் இன்று ஒதுக்கப்படுபவர்கள் மட்டுமல்ல மக்களிடையே ஒரு கேலிப் பொருளாகவும் உள்ளனர். அதிலும் குறிப்பாக வைணவ பிராமணர்கள் மிகவும் கேலிக்கு உள்ளாகிறார்கள். ஏன் என்றால் அவர்கள் நெற்றியில் அணிவது நாமம். இன்று ஒருவர் மற்றொறுவரை இழிவு படுத்தவும், தன்னிடமோ வேறொறுவரிடமிருந்தோ ஒரு பொருள் தொலைந்தாலோ அல்லது பரிபோனாலோ அதற்கு அவர்கள் கூறி கேலி செய்வது நாமம் என்றும் கோவிந்தா என்றும். கோவிந்தன் என்ற பெருமாள் தன் நெற்றியில் சூட்டிக்கொண்டதால் கோவிந்தா என்ற பெயரோடு நாமமும் கேலியின் வடிவமாக வந்துவிட்டது. சரி... கேலி செய்பவர்களே உங்களுக்காகச் சொல்லுகிறேன் கேளுங்கள்...நாமத்திற்கு "திருமண்காப்பு" என்ற பெயரும் உண்ட. இந்த நாமத்தை நெற்றியில் அணிவதால் மகாவிஷ்ணுவான பெருமாளின் நேரடி பாதுகாப்பிற்கு நாம் ஆளாகிறோம்.
அதனாலேயே அதற்கு திருமண்"காப்பு" என்று பெயர் வந்தது. அந்த திருமண்காப்பின் வடிவம் உயர்ந்த வசமாக மூன்று கோடுகள் மற்றும் கீழே சிறிய தாமரை போன்ற அமைப்புக்கோடு... இதன் விளக்கம் என்னவென்றால் மூன்று கோடுகளில் வலது இடது கோடுகள் வெள்ளை நிறத்தில் இருக்கும் அவை விஷ்ணுவின் இரண்டு பாதங்கள் ஆகும். நடுவில் இருக்கும் கோடு சிகப்பு நிறத்திலோ அல்லது மஞ்சள் நிறத்திலோ இருக்கும் அது ஸ்ரீமகாலட்சுமி ஆவாள், இவர்களை தாங்கியபடி கீழே வெள்ளை நிறத்திலிருக்கும் சிறு கோடு தாமரைப்பூ ஆகும். அதாவது விஷ்ணுவின் பாதங்களும் தாமரைப்பூவில் மகாலட்சுமியும் ஒரு சேர நெற்றியில் இருக்கும்படி அணிந்துகொள்வது திருமண்காப்பு(நாமம்) இவ்வளவு பெருமை வாய்ந்த நாமத்தை இன்று கேலிப் பொருளாக ஆக்கிவிட்டார்கள்... கஷ்டம் தீரவும் செல்வம் பெருகவும் பெருமாளை வணங்குகிறோம், ஆனால் அவர் நெற்றியில் இருக்கும் நாமத்தை கேலி செய்கிறோம்...என்ன முட்டாள்தனமான சிந்தனை நமக்கு. நாமத்தை கேலி செய்தால் அது விஷ்ணுவையும் மகாலட்சுமியையும் சேர்த்து கேலி செய்ததற்கு சமம். நாமம் நெற்றியில் அணிவது நமக்கு நல்லதே தவிர கெட்டது இல்லை. இதை புரிந்துகொள்ள நமக்கு சரியான அறிவு இல்லை. அப்படியே இருந்தாலும் பொது ஊடகங்கள், பத்திரிகைகள், சினிமாக்கள் போன்ற பெரிய மீடியாக்களில் பிரதானமாக நாமமும் கோவிந்தா என்ற பெயரும் கேலிப் பொருளாக ஆகிவிட்டது. ஏன் பல பிராமணர்கள் கூட இதை கேலி செய்கிறார்களே அதுதான் வேதனை.
ஊடகங்கள், பத்திரிகைகள், சினிமாக்கள் இவைகளில் ஒரு மத கோட்பாடுகளை கேலி கிண்டல் செய்யக்கூடாது என்று சட்டம் உள்ளது. அது அரசின் சட்ட புத்தகத்தில் எழுத்தாகமட்டுமே இருக்கிறது. நாம் நன்றாக கவனிக்க வேண்டும், சினிமாக்கள் மற்றும் பத்திரிக்கைகளில் ஒரு இஸ்லாமிய அல்லது கிருஸ்துவ கோட்பாடுகளையோ, அவர்கள் நடைமுறைகளையோ இவர்கள் கேலி கிண்டல் செய்வது இல்லை. அப்படியே ஏதோ ஒரு இடத்தில் இருந்தாலும் மிகுந்த பிரச்சனைக்குப் பிறகு அது நீக்கப்படுகிறது. நான் அவர்களையும் கேலி செய்யவேண்டும் என்று சொல்லவில்லை. அவர்களுக்கு இருக்கும் ஒரு ஒற்றுமை இந்துக்களாகிய நமக்கு ஏன் இல்லை?. நாமம் என்பது வைணவ, பிராமணீயச் சின்னம் மட்டுமல்ல அது இந்துக்களின் சின்னமாகும். அதை நாமே கேலி செய்தால் நம் தாயை நாமே கேலி செய்வதுபோல் ஆகும்.
அதே போலத்தான் கோவிந்தா என்ற பெயரும். அந்த பெயருக்குள்ள மகத்துவம் தெரிந்தால் இப்படி கேலி செய்ய மாட்டார்கள். ஆதரவற்ற அனாதைகளுக்கு இருக்கும் ஒரே சொந்தம் மகாவிஷ்ணு ஆவார். அந்த விஷ்ணுவின் பெயர் தான் கோவிந்தன். ஒருவர் அனாதையாக இறந்தால் அவருக்கு கோவிந்தா கொள்ளி போடு என்று சொல்லுவார்கள். காரணம் , இறந்தவர் அனாதையல்ல கோவிந்தன் என்ற பெயருள்ள விஷ்ணு இவருக்கு தந்தையாகவும் அனைத்து சொந்தமாகவும் இருக்கிறார், அதனால் இறந்தவருக்கு அந்த விஷ்ணுவே கொள்ளி இடுவதற்கு சமம் என்ற பெரிய பெருமை உடையது இந்த கோவிந்தா என்ற பெயர்.
ஆனால் இப்பொழுது இந்த விஷயத்தை சொல்லுவாரும் இல்லை கேட்பாரும் இல்லை. நாம் அனைவரும் கேலி மட்டும் நன்றாகச் செய்கிறோம். உலகத்தில் வாழும் மக்களை திருமண்காப்பு (நாமம்)என்ற நெற்றிப்பொட்டின் மூலமாக காத்து கோவிந்தா என்ற பெயரினால் ஆதரவளிக்கிறார் பெருமாள்(விஷ்ணு). இதையும் தாண்டி ஊடகங்கள், பத்திரிகைகள், சினிமாத்துறையினர்கள் கேலி செய்வார்களேயானால் அவர்களுக்கு பெருமாள் விதித்த விதி என்னவொ.....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...