தமிழக அரசை அடிக்கடி சீண்டி அவர்கள் உண்மை முகத்தை காட்ட வைப்பதில் ஆளுநருக்கும் அண்ணாமலைக்கும் ஆர்வம் அதிகம்
அப்படி இது ஆளுநருக்கான நேரம்,அவரும் மிக நுணுக்கமாக அடித்து ஆடிவிட்டார்
ஐந்துநாட்கள் அவர் சென்னையில் இல்லாததால் கொஞ்சம் மூச்சுவிட்ட தமிழக அரசு காவல் மற்ற்ம் உளவுதுறையில் சில மாற்றங்களை செய்து ஆசுவாசபடுத்தி செந்தில்பாலாஜி விவகாரத்தில் கவனமானது
விடுவாரா ஆளுநர்?
ஐந்து நாட்களுக்கும் சேர்ந்து பந்தை அடிக்கவேண்டும் அல்லவா? அதனால் நுணுக்கமான திட்டமிட்டார், அவர் ஒன்றும் தமிழகத்தை ஆள்பவர் அல்ல ஆனால் தமிழகத்தை கண்காணிக்கும் பொறுப்பு அவருக்குத்தான் உண்டு
உளவுதுறையில் சில மாற்றங்களை செய்த அரசு, டேவிட் ஆசீர்வாதம் போன்றோரை விசாரணைக்கு கொடுத்த அரசு செந்தில் பாலாஜியினை மட்டும் காக்கதுடிப்பதேன் என்பதை மக்களுக்கு காட்ட விரும்பியிருக்கலாம்
ஆம், அதனை முன்பே அவர்கள் செய்வது அறிந்தாலும் இந்த நிகழ்வுக்கு பின் காட்ட நினைத்திருக்கலாம்
அந்த அடிப்படையில்தான் செந்தில்பாலாஜி வழக்கில் சிக்கிவிட்டார் அதனால் அவர் அமைச்சரவையில் நீடிப்பதை அனுமதிக்கமுடியாது என ஆளுநர் மாளிகை ஒரு அறிக்கைவிட்டது, அப்படித்தான் நடந்திருக்க வேண்டும்
அவர் எதிர்பார்த்தபடியே முதல்வர் பொங்கினார் இன்னும் திமுகவின் வாக்னர் குரூப்பெல்லாம் பொங்கிற்று
இப்படி பொங்குவார்கள் என ஆளுநருக்கு தெரியுமா என்றால் தெரியும், பின்னும் ஏன் செய்தார் என்றால் அதுதான் வியூகம்
ஆளாளுக்கு செந்தில்பாலாஜி நீக்கபட கூடாது என குரலெழுப்ப, "அப்படியா.." என தான் அறிவித்ததை திரும்ப பெற்றுவிட்டார் ஆளுநர்
இதனால் அவர் மக்களுக்கு தெரியபடுத்தும் விஷயம் என்னவென்றால் "தமிழக மக்களே , அமலாக்கதுறையால் கைது செய்யபட்டிருக்கும் ஒருவரை பெரும் விசாரணை வளையத்தில் இருக்கும் ஒருவரை இன்னும் அமைச்சராக வைத்திருப்பேன் என உங்கள் முதல்வர் சொல்கின்றார்
அதனால் இந்த மாகாண நிலமையினை நீங்களே உணர்வீர்களாக"
அதை அழகாக செய்துவிட்டார் ஆளுநர், சர்சைகுரிய டேவிட் ஆசீர்வாதம் நீக்கம் ஆனால் செந்தில் பாலாஜிக்கு ஏன் அமைச்சராக இவ்வளவு கரிசனை எனும் கேள்வி ஆங்காங்கே எழுகின்றது
மிக நுணுக்கமான நடவடிக்கையால் மறுபடியும் மக்கள் ஏன் செந்தில் பாலாஜிக்கு திமுக தலமை இவ்வளவு ஆதர்வு அளிக்கவேண்டும் எனும் கேள்வி திரும்பவும் எழுகின்றது
அதை எழுப்ப வைத்துவிட்டு அவர்போக்கில் இருக்கின்றார் ஆளுநர், என்ன இருந்தாலும் ஐ.பி.எஸ் அல்லவா? கொஞ்சம் பயிற்சி அதிகமாகத்தான் இருக்கும்
திமுகவும் அதன் வாக்னர் குரூப்புகளும் செந்தில் பாலாஜிக்காக தங்கள் தலைவரின் உத்தரவுபடி போராட வந்திருப்பதை பார்த்து மக்கள் என்ன நினைப்பார்கள் என்பதெல்லாம் உங்கள் ஊகத்தை பொறுத்தது
அமலாக்கதுறையால் விசாரிக்கபடும் குற்றவாளி தொடர்ந்து அமைச்சராக நீடிக்கவேண்டும் என இப்படி ஒரு கூட்டம் கடுமையாக போராட வந்தால் தமிழக நிலை என்ன என்பது நிச்சயம் கவலைதர கூடியது
ஆளுநர் செய்தது அவர் சட்டத்துக்கு உட்பட்டதா இல்லையா என்பதல்ல விஷயம், செந்தில்பாலாஜியினை ஏன் காக்க இப்படி துடிக்கின்றார்கள், ஊழல் குற்றம் இருந்தாலும் அவர் அமைச்சராகத்தான் நீடிப்பார் என ஏன் மல்லுகட்டுகின்றார்கள் என்பதுதான் விஷயம்
ஆக குறைந்த பட்சம் வழக்கு முடியும் வரை அவர் அமைச்சராக நீடிக்க கூடாது என சொல்ல ஒருவருக்கும் தைரியமில்லை சிந்தனையுமில்லை என்பதுதான் நிஜம் அந்த அளவு அவர்கள் சிந்தனை மங்கிவிட்டது பெரும் சோகம்.
No comments:
Post a Comment