Monday, July 10, 2023

ஏன் சமூக ஊடகங்களில் இந்த பித்தலாட்டம்.

 தமிழகத்தில் இந்து திருக்கோவில்கள் தொடர்பான பொது நல வழக்குகளை தாக்கல் செய்த ரங்கராஜன் நரசிம்மன் என்ற இந்துத்துவவாதியின் நேர்மை தன்மையை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக அவர் தாக்கல் செய்த 7 பொதுநல வழக்குகளுக்கும் தலா 50,000 வீதம் 3,50,000 ரூபாய் நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாக செலுத்த நீதிமன்றம் உத்தரவு.

இவ் வழக்கில் உண்மைத் தன்மை குற்றச்சாட்டுக்கான முகாந்திரம் உள்ளிட்டவை இருந்தால் மட்டுமே இந்த வைப்புத் தொகை வழக்கு முடியும் போது அவருக்கு திருப்பி தரப்படும். இல்லாத பட்சத்தில் இந்த வைப்புத் தொகையை அவருக்கான அபராதமாக அந்த தொகை முழுவதும் நீதிமன்றம் அபராதமாக வசூலிக்கும் என்றும் தெரிவித்திருக்கிறது.
எதுவாயினும் நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறேன். ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் என் ஆதங்கம் இது தான்.
பல ஆண்டுகளாக நரசிம்மன் என்பவர் ஆலயங்களில் விழாக்கள் உற்சவங்கள் என்ற பெயரில் வசூல் ஆகும் தொகைகளில் நடைபெறும் முறைகேடுகள் சொத்துக்கள் வணிக வளாகங்கள் மனைகள் உள்ளிட்டவைகளில் இருக்கும் முறைகேடு ஆக்கிரமிப்பு அபகரிப்பு என்று இந்து ஆலயங்களில் மட்டும் நடைபெறும் அரச பயங்கரவாதத்தை எதிர்த்து தனி மனிதராக சட்ட போராட்டம் நடத்தி வருபவர். நிச்சயம் அவருக்கு பல நல்ல உள்ளங்கள் துணை நிற்கும். சந்தேகமில்லை.
ஆனால் இந்து ஆலயங்களில் ஆலயத்தின் சொத்துக்கள் தொடங்கி ஆகம விதிகள் வரை அறநிலையத்துறை - மத சார்பின்மை என்ற பெயரில் அரசாங்கத்தின் மூலம் நிகழ்த்தப்படும் அநீதிகளையும் அதை எதிர்த்து ஆன்மீக வாதிகள் மற்றும் இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் செய்வதை தினந்தோறும் செய்திகளாக உலா வருவதை கண்ட பிறகும் இது போன்ற விஷயங்களை நீதிமன்றத்திற்கு வழக்காக தாக்கல் செய்ய வருபவரிடம் உங்கள் வழக்கின் உண்மை தன்மையை நிரூபிக்க வைப்புத் தொகையை செலுத்துங்கள். உண்மைத்தன்மை இல்லை என்றால் அந்தத் தொகை அபராதமாக மாறக்கூடும் என்று நிபந்தனை விதிப்பது. ஏன்?.
நீதிமன்றம் முன் வைக்கும் வழக்கின் முகாந்திரம் இல்லாத நீதிமன்றத்தை அலை கழிக்கும் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு முயற்சி என்று எடுத்துக் கொண்டால் கூட இது இந்த வழக்கிற்கு மட்டும் இந்த மனுதாரருக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம்? நீதியரசர்கள் ஏ!
அவர் வழக்கில் உண்மைத் தன்மையை நிரூபிக்கும் பட்சத்தில் வழக்கு செலவு உள்ளிட்ட அனைத்தும் நஷ்ட ஈடாக எதிர் தரப்பில் இருந்து வசூலித்து தருகிறோம் என்றும் உத்தரவாதம் கொடுத்திருக்கலாமே? . அப்படி எந்த உத்தரவாதமில்லை என்றால் நீதிமன்றம் அனைவருக்குமானது இல்லையா? .
அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் மருத்துவமனையில் இருக்கும் கணவரை பல்வேறு தொலைக்காட்சிகள் ஊடகங்கள் நேரலையில் ஒளிபரப்பும் போது எனது கணவரை காணவில்லை கண்டுபிடித்து தாருங்கள்! என்று ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்த ஒரு மனைவியை கையில் இருக்கும் செய்தித்தாளை கொண்டு உண்மை தன்மை பற்றி கேள்வி எழுப்பாத நீதிமன்றம் ஆலயங்களை பாதுகாக்க வேண்டும் என்று வருபவரிடம் உண்மை தன்மை நிரூபிக்க வைப்பு தொகை கேட்பது எப்படிப்பட்ட நீதி. ?
தேசத்தின் பாதுகாப்பிற்கு வெளிநாடுகளில் இருந்து தெரிவிக்கப்பட்ட ரஃபேல் விமானத்தில் ஊழல் என்று நீதிமன்றம் வரை போனவர்கள் உண்மைத் தன்மையை எப்படி ஏற்றது?
குடியுரிமை திருத்த சட்டம் அயோத்தி ராமஜன்ம பூமி என்று எத்தனையோ முக்கிய விஷயங்களில் எல்லாம் மத்திய அரசுக்கு எதிராகவும் இந்துத்துவ அமைப்புகளுக்கு எதிராகவும் எந்த விதமான முகாந்திரமும் இல்லாமல் தாக்கல் செய்த வழக்குகள் காரணமாக கால் நூற்றாண்டுகள் காலம் தாழ்த்திய வழக்குகளில் கூட இது போன்றதொரு நிபந்தனையோ வாய்ப்புத்தொகையோ கேட்கப்பட்டதாக செய்திகள் இல்லை. ஆனால் பெரும் சட்ட போராட்டம் கடந்து ஆன்மீகம் வென்றிருக்கிறது. அதை நீதிமன்றங்கள் மறந்ததா?.
போராட்டம் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் தலைநகரை ஸ்தம்பிக்க செய்தவர்கள் முதல் வன்முறைகளை நிகழ்த்தி சர்வதேச அளவில் தேசத்திற்கு அவமதிப்பை தேடித் தந்த அவர்களின் வழக்குகளில் கூட உங்களின் நிதர்சனமான யோக்யதை இப்படி இருக்கும் போது நீங்கள் தாக்கல் செய்யும் இந்த வழக்கை நாங்கள் எந்த அடிப்படையில் நம்பி விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள முடியும் ? என்று ஒரு கேள்வி கூட கேட்கவில்லையே.
பின் நாளில் அதே நீதிமன்றத்தில் அந்த வழக்குகள் எல்லாம் திட்டமிட்டு காலதாமதம் அலைக்கழிப்பு என்பதற்காகவே வன்மத்தோடு தொடரப்பட்ட வழக்குகள் என்று நிரூபணம் ஆகி அவை தள்ளுபடி ஆகும்போது கூட அவர்களை குறைந்த பட்சம் கண்டிக்காமல் விருந்தாளிகளை போல் அனுப்பி வைத்த நிகழ்வுகளை பார்த்திருக்கிறோம்.
ஆனால் இந்த மண்ணின் பண்பாடு கலை கலாச்சார பொக்கிஷங்களின் இருப்பிடமாகவும் இந்த தேசத்தின் ஆன்மா வான ஆன்மீகத்தின் உறைவிடமாக விளங்கும் திருக்கோவில்களை பாதுகாக்க வேண்டும் என்று தன் உயிருக்கு எத்தனையோ அச்சுறுத்தல்கள் இருக்கும்போதும் எவ்வளவோ வாழ்வாதார நெருக்கடிகளையும் கடந்து வழக்கு தொடுக்கும் ஒரு சாமானியரிடம் நீதிமன்றம் இவ்வளவு கண்டிப்பை காட்டுவது ஏன்? நீதியரசர்களே!
இதன் மூலம் நீதிமன்றம் இனி கோவில்கள் சம்பந்தமாக நீதி கேட்டு யாரும் நீதிமன்றங்கள் வராதீர்கள் ! என்று மறைமுகமாக எச்சரிக்கை செய்கிறதா? அல்லது ஆலயங்கள் ஆகமங்கள் வரை ஆக்கிரமித்து அத்துமீறும் நபர்களுக்கு இனி நீங்கள் உங்கள் விருப்பம் போல என்ன வேண்டுமானாலும் செய்யலாம் . அவர்கள் நீதிமன்றத்திற்கு போக முடியாது என்று எண்ணம் வராதா? வந்தால் இங்குள்ள ஆலயம் மற்றும் அதன் நலன் விரும்பிகள் நிலை என்ன ஆகும் ? என்று நீதிமன்றம் யோசிக்க தவறியது ஏன்?
எல்லை தாண்டி வந்து நம் வீரர்களை கொன்று குவித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தங்கள் உயிரை துச்சமாக்கி அதிரடி நடவடிக்கை எடுத்ததைக் கூட அரசியலாக்கி அதில் கூட ஆதாரம் கேட்டு குளிர் காய்ந்தவர்களை கருத்து சுதந்திரம் என்று பாதுகாக்கும் நீதித்துறை கையறு நிலையில் இருக்கும் இந்து ஆலயங்களை வஞ்சிப்பது ஏன்? .
தனது கண்முன்னே தனது தர்மம் ஆலயம் அவமதிக்கப்படும்போது பதிலடியாக ஒரு கருத்தை முன்வைத்த பெண்ணை உன்னால் தான் தேசம் பற்றி எரிகிறது என்று குற்றவாளியாக்கி வேடிக்கை பார்த்த நீதிமன்றத்தில் ஆலயங்களுக்கும் ஆகமங்களுக்கும் நீதி கிடைக்கும் என்றும் அது சம்பந்தமான வழக்கை தொடுப்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு இருக்குமா? . எங்கள் இறுதி நம்பிக்கை நீதிமன்றம் தானே? அதுவும் தகர்ந்தால் எங்கள் நிலை?.
ஆனால் இது போன்ற உச்சகட்ட நெருக்கடி நிலைகள் தான் நம்மை சூழ்ந்திருக்கும் அபாயம் எத்தகையது என்பதை இங்கு உள்ள பெரும்பான்மை சமூகம் உணர ஒரு வாய்ப்பாகவும் அமையும் . இன்னுமும் நடுநிலை பேசும் நல்லோரும் மதச்சார்பின்மையை கடைபிடிக்கும் மாசிலாமணிகளும் தாங்கள் வணங்கும் ஆலயத்திற்கு கிடைக்காத பாதுகாப்பு தங்களுக்கு மட்டும் எப்படி கிடைக்கும்? என்று சிந்திக்கவும் ஒரு வாய்ப்பாக இருக்கும்.
எது எப்படி இருந்தாலும் நீதிமன்றத்தை இந்துக்கள் மதிப்பதால் கலவரங்கள் செய்வதில்லை. கலவரங்கள் செய்யாததால் இந்துக்களை நீதிமன்றங்கள் மதிப்பதில்லை என்ற வாசகம் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகிறது.
அவ்வகையில் இந்துக்கள் இதையும் சட்டப்படி எதிர் கொள்வோம். நிச்சயம் நரசிம்மன் அவர்கள் இந்த நெருக்கடியையும் கடந்து அவரது பணியை முன்னெடுப்பார் என்று நம்புவோம். இந்த பொருளாதார நெருக்கடியை அவர் பொதுவெளியில் முன்வைத்து இதற்கு தேவையான வைப்புத் தொகையை ஆன்மீகவாதிகளிடமிருந்தும் தேசியவாதிகளிடமிருந்தும் வசூலித்து அந்த தொகையைக் கொண்டு நீதிமன்றத்தில் வைப்புத் தொகையை கட்ட வேண்டும் என்பதையும் கோரிக்கையாக வைப்போம்.
சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல் அவரவரின் வசதிக்கேற்ப ஒரு ரூபாய் கூட கொடுத்து நம் ஆலயங்களின் பாதுகாப்பில் நம்முடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்து கொள்வோம். அயோத்தி ராமனின் ஆலயத்திற்கு தருவது தான் ஆன்மீக கொடை அல்ல. இது போன்ற ஆலய பாதுகாப்பு சட்ட போராட்டத்திற்கு தரும் காணிக்கை கூட இறைவனுக்கான அர்ப்பணம் தான் என்று நாங்கள் அறிவோம். எனது பங்களிப்பாக ரூபாய் 1,001 தர நான் தயாராகிறேன்.
இந்த விஷயத்தில் நாம் காட்டும் உறுதியும் ஒற்றுமையும் பொருளாதார பங்களிப்பும் தான் நீதிமன்றங்களுக்கும் அதை கடந்து நம் ஆலயங்களை ஆக்கிரமிக்க அழிக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் நாம் கொடுக்கும் சரியான பதிலடியாக இருக்கும். எதிர்காலத்தில் இந்து ஆலயங்களை பாதுகாப்பதற்கென்று தேசிய அளவில் ஒரு இந்துத்துவ அமைப்பு தேவை என்பதற்கான வலுவான கருத்தும் உருவாகும் . அதற்கான ஒரு நிரந்தர தீர்வையும் நாம் நமக்கான மத்திய அரசிடம் கோரி பெறுவதற்கு இந்நிகழ்வு ஒரு நல் வாய்ப்பாக அமையும்.

துவரை 63 பொதுநல வழக்குகளை ஶ்ரீரங்கம் ரங்கராஜன் கடந்த எட்டு வருடங்களில் தொடர்ந்திருக்கிறார். அதில் ஒன்றில் கூட நேரத்தை வீண்டிக்க தொடரப்பட்டதாக நீதிமன்றம் அவரை குறை சொல்லியதில்லை. ஆயினும் இப்போது தொடரப்பட்ட ஏழு வழுக்குகளில் வைப்புநிதி கட்ட வேண்டும் என்று கூறியதற்கு அரசின் அழுத்தமோ அல்லது உள்நோக்கம் இருக்கலாமோ என்று எழும் ஐயம் நியாயமானதுதானே?

இதன் தொடர்பாக ஒரு திமுக பிரபலம் ட்விட்டரில் ‘சங்கிக்கு சங்கு’ என்று பதிவிட்டிருப்பது இந்த ஐயத்தை ஊர்ஜிதப்படுத்துகிறது. பலர் அவருடைய பணபலத்தின் பின்புலத்தையும் கொச்சைப்படுத்துவதை கண்டு மனம் கொந்தளிக்கிறது.
ஏன் சமூக ஊடகங்களில் இந்த பித்தலாட்டம் அதிகமாக விமரிசிக்கப்படவில்லை என்பது அவர்கள் விலை போய் விட்டார்கள் என்பதை உறுதியாக்குகிறது!
ட்ராபிக் ராமசாமி மறைந்த பிறகு judicial activismத்துக்கு சங்கு ஊதப்பட்டுவிட்டது என்னவோ உண்மைதான்! நம்மில் பலரும் நாய் இடம் போனால் நல்லதா அல்லது வலம் போனால் நல்லதா என்ற கேள்விக்கு, நமக்கு என்ன விழுந்து பிடுங்காமல் போனால் போதும் வகையை சேர்ந்தவர்கள்! அவர் நம்மிடம் வேண்டுவது எல்லாம் குறைந்த பட்சம் கேள்வி எழுப்புங்கள் என்பதுதான். உங்களிடம் நிதி உதவி எதுவும் கேட்கவில்லை. ஏன் இந்த சின்ன காரியத்தை நாம் ஏன் சமூக பொருப்பாக ஏற்கக்கூடாது?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...