Monday, July 10, 2023

நடிகர் சின்னி ஜெயந்த் நடிகர் திலகம் பற்றி மனம் திறக்கிறார்:

 "ஒரு விஷயத்தை ஃபாலோ பண்ணா, அது நமக்குக் கிடைச்சே தீரும்ங்கிறதுக்கு உதாரணம் இது. சினிமாவுல நடிக்க வந்ததுக்கு அப்புறம் பார்ட் டைமா மிமிக்ரி ஆர்டிஸ்டா வேலை பார்த்தேன்.

ரஜினியுடன் நடிச்சுட்டேன், சிவாஜி சாருடன் நடிக்கணும்னு சான்ஸ் தேடிக்கிட்டே இருந்தேன். 'மலையூர் மம்மட்டியான்' படத்தோட டைரக்டர் ராஜசேகர் அந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தார்.
அவர் சிவாஜி சாரை வெச்சு எடுத்த படம், 'லட்சுமி வந்தாச்சு'. இந்தப் படத்தோட ஷூட்டிங்கின்போது டைரக்டர் என்னை சிவாஜி சாரிடம் அறிமுகப்படுத்தினார்.
மதிய சாப்பாடு முடிஞ்சதும் சிவாஜி சார் சேர்ல உட்கார்ந்துக்கிட்டே தூங்குவார். அப்போது, சிவாஜியின் உதவியாளர் திருக்கோணம் முதுகைப் பிடித்துக்கொடுத்து சிவாஜி சாருக்கு மசாஜ் பண்ணிவிடுவார்.
தொடர்ந்து ரெண்டுநாள் இதைப் பார்த்துக்கிட்டே இருந்தேன். மூணாவது நாள், 'கொஞ்ச நேரம் முதுகைப் பிடிச்சு விடுறியா, நான் பாத்ரூம் போயிட்டு வந்திடுறேன்'னு திருக்கோணம் சார் சொல்ல, 'நல்ல வாய்ப்பு இது!'னு உடனே சரினு சொல்லிட்டேன்.
சிங்கத்துக்கே மசாஜ் பண்ற வாய்ப்பை எப்படி விடமுடியும்... அவ்ளோ சந்தோஷம் எனக்கு.
சிவாஜி சார் நல்லாத் தூங்கிட்டிருந்தார். கொஞ்சநேரத்துல திருக்கோணம் வந்துட்டார். நான் மசாஜ் பண்றதை நிறுத்திட்டு, திருக்கோணம் சாருக்கு வழிவிட்டேன். சிவாஜி சார் கண்ணை மூடியே சொன்னார், 'டேய்... நீயே அமுக்குடா!".
தூக்கத்துல இதை எப்போ கவனிச்சார்னு எனக்கு ஒரே ஆச்சரியம். 'தம்பிக்கு, சொந்த ஊர் குற்றாலமா?'னு கிண்டல் அடிச்சார்.அப்புறம் என்னைப்பத்தி விசாரிச்சார். அன்னைக்கு ஷூட்டிங் முடிஞ்சதும் இயக்குநர்கிட்ட, 'இவனுக்கு எத்தனை நாள் வொர்க்'னு கேட்டார். 'இன்னும் நாலு நாள் இருக்கு'னு அவர் சொல்ல, 'நான் இருக்கிறவரை இவனும் ஷூட்டிங்ல இருக்கட்டும்!'னு சொன்னார் .
சிவாஜி. அதுக்கு அப்புறம் அவர் வீட்டுக்கு என்னைக் கூட்டிக்கிட்டு போய் எல்லோர்கிட்டேயும் அறிமுகப்படுத்தி வெச்சார், சாப்பாடு போட்டார். அவர் மகன் ராம்குமாரும் நானும் நல்ல நண்பர்கள் ஆயிட்டோம்.
சிவாஜி சார் தேர்தலில் நின்னப்போ, அவருக்கு ஆதரவா பிரச்சாரம் பண்னேன். தேர்தல்ல அவர் தோத்துட்டார். 'மக்களுக்குக் கொடுத்து வைக்கலை; அவ்ளோதான்!'னு நினைச்சுக்கிட்டேன்.
- சின்னி ஜெயந்த்
May be an image of 4 people and text that says '6F நடிகர் சின்னி ஜெயந்த்.. நடிகர் திலகம் உட்னான நினைவுகளை பகிர்கிறார்..'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...