நீ இரைக் கண்டு சப்தமிட்டாயோ
அல்லது இணைக் கண்டு சப்தமிட்டாயோ நாங்களறியோம்.. ஆனால்..
நீயிடும் சப்தம் தான்
அது கடவுளின் அசிரீரியும் கூட...
மனதில் நல்லவை எண்ணியபோது
நீ சப்தமிட்டாலோ
இறைவனின் ஆசி என்று
அகம் மகிழ்வோம்...
தீய எண்ணங்கள் திரையிடும்போது
நீ சப்தமிட்டாலோ
நெஞ்சமதில் அச்சமது கவ்விக்கொள்ளும்..
எங்கள் வீட்டில் கடவுளின்
இருப்பைக் கூட
உந்தன் குரல்தான் தீர்மானிக்கிறது..
ஆம்..
உந்தன் உத்தரவின் பேரில்தான்
கடவுளும் வாசம் செய்ய
வருகை புரிகிறார்...
வழிதவறித் தடுமாறி
எங்களின் மீது விழுந்தாலும்
விழுந்த இடத்திற்கேற்றப்
பலன்களைப் பஞ்சாங்கம் பார்த்து
பளிச்சென்று கூறிவிடுவோம் நாங்கள்...
விஞ்ஞான வளர்ச்சியில்
இதெல்லாம் மூடநம்பிக்கையாக தெரிந்தாலும்
மூத்தோரின் வாக்கு என்பதால்
ஆராய்ச்சி செய்ய விருப்பமின்றி
அப்படியே ஏற்றுக் கொண்டோம்
உன்னை நாங்கள்...
எங்கள் வீட்டில் ஒருவராக..

No comments:
Post a Comment