Wednesday, July 5, 2023

முக்கியமான விஷயம் அந்த நபரை கைது செய்யும் போது அவருக்கு நெஞ்சு வலி வரவில்லை.

 இன்று CNN IBNல் சரவணன் என்ற கழக வக்கீல் UCC க்கு எதிராக விளாசி தள்ளினார். அவர் விளாசும்போது நேற்று மத்திய பிரதேசத்தில் நடந்த அநாகரீக செயலை (ஒரு பாஜக எம்.எல்.ஏ வின் உறவினர் ஒரு Tribal மனிதனின் மேல் மூத்திரம் போன அநாகரீக செயலை) கண்டித்து, முதலில் இது போன்ற செயலை கண்டித்து பின் UCC பற்றி பேசலாம் என்றும் விளாசி தள்ளினார்.

நன்றி சரவணன். உங்களின் இந்த செயல் பாராட்டுக்குரியது. ஆனால் உங்களுக்கு தெரியுமா, அந்த அநாகரீக
செயலை செய்தவனை 15 மணி நேரத்தில் NSA சட்டத்தின்படி குற்றம் பதிவு செய்யப்பட்டு விசாரணை மிக தீவிரமாக முடக்கி விடப்பட்டுள்ளது. அவனின் unauthorized extension of house ஒரு புல்டோசரால் தகர்த்து எறியப்பட்டும் உள்ளது. இதற்கு பெயர்தான் Swift Action and give justice.
கொஞ்சம் வேங்கை வயல் நிகழ்வை நினைத்து அதற்காகவும் பொங்கி எழுந்திருந்தால் உங்களை நமஸ்கரித்திருப்பேன் சரவணன். அந்த ஈன காரியத்தை செய்த தங்கள் கட்சி காரனின் மீது வழக்கு பதிவு நடவடிக்கை எடுக்க சொல்லுங்கள், சரவணன். உங்கள் முகத்தை ஒரு முறை கண்ணாடியில் பார்த்து விட்டு பிறகு விளாசுங்கள். வேங்கைவயல் நிகழ்வு நடந்து மாதங்கள் ஆகிவிட்டன. இன்னும் அரசு இயந்திரம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அதற்காகவும் கொஞ்சம் பொங்குங்கள். மத்திய பிரதேச அரசு எடுத்த விரைவு, 15 மணி நேரத்தில், எடுத்த நடவடிக்கையை கொஞ்சமாவது உணருங்கள்.
அந்த டிவி நெறியாளர் இந்த வேங்கைவயல் கேள்வியை ஏன் கேட்கவில்லை என்பது புதிராகவே உள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...