"அதிமுக கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்,
கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்கு முறை குலையும் வகையிலும் நடந்து கொண்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் எஸ்.முரளி (எ) ரகுராமன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்".
அப்படி என்ன சார் குத்தத்த செஞ்சிட்டாரு?
பாஜக நிர்வாகி ஹரிகிருஷ்ணன் குடும்பம்
திண்டிவனத்தில் நிர்வாகிக்கும் ஸ்ரீராம் அறக்கட்டளை சார்பில்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் 39 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை வைத்து நடத்தி வைத்தது.
அதில் அவரது தந்தையும் ஸ்ரீராம் பள்ளியின் தாளாளருமான எஸ்.முரளி (எ) ரகுராமன் அவர்களும் கலந்து கொண்டார்.
அவர் விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளராகவும் பதவி வகித்துக் கொண்டு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்ட விழாவில் இவரும் பங்கேற்றதால்,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மேலே குறிப்பிட்டுள்ள அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
'இதுல கொள்கை கோட்பாடு எந்தப்பக்கம் முரணாக இருக்குன்னு தெரியலை.'
ஏற்கனவே பொது சிவில் சட்டத்தை எதிர்ப்போமுன்னு. முழங்கினாரு, இப்போது அண்ணாமலை கூட இருக்கற கூட்டத்துல நீயும் இருக்கேன்னு சொல்லி ஓரு ஆள கட்சிய விட்டு தூக்கிட்டாரு.
இவரு தான் கூட்டணி தர்மத்தை காப்பாத்துறவராம்.
பாஜக இந்த மாதிரி டெட் வெயிட்டுகளை தூக்கிக்கிட்டு சுமப்பதை விட, ஒழிஞ்சு போன்னு கழற்றி விட்டுட்டு தனி வழியில் போயிட்டே இருக்கனும்.
பாஜக மேலிடம் அண்ணாமலையை அடக்கி வாசிக்க சொல்றத விட்டுட்டு, தட்டிக் கொடுத்து அடிச்சு ஆட அனுமதி கொடுக்கனும்.
No comments:
Post a Comment