"நீதிமன்ற பயங்கரவாதம்" என்ற புதிய கலாச்சாரம் தற்போது இந்திய ஜனநாயகத்திற்கே பெரிய ஆபத்தாக வளர்ந்து வருகிறது! இந்திய நீதிமன்றங்களின் தீர்ப்புகள் பெரும்பாலும் ஊழலுக்கு ஆதரவாகவும், இந்து மதத்திற்கு எதிராகவும், பணக்காரர்களுக்கு ஆதரவாகவும் இருந்திருக்கின்றன!
தற்காலங்களில் "நீதிமன்ற பயங்கரவாதம்" மிக மோசமாக தலைவிரித்தாடுகிறது!
எல்லா டிவி சேனல்களிலும் லைவ்வாக ஓடிக்கொண்டிருந்த செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையில், முட்டாள்தனமான, வழக்கை வேண்டுமென்றே இழுத்தடிக்க, தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு விசாரணைக்கு வருகிறது! நீதிமன்றத்திற்கு செந்தில் பாலாஜி எங்கே இருக்கிறார் எனத் தெரியாதா?
ஊழல் பணக்கார சிறைக்கைதியான செந்தில் பாலாஜிக்கு இஷ்டபட்ட தனது கட்சி தனியார் மருத்துவமனையில் இருந்துகொள்ள நீதிமன்ன பயங்கரவாதம் அனுமதி கொடுக்கிறது! சாமானய கைதிகளுக்கு இது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று!
நீண்ட காலம் நிலுவையில் இருந்த ஆளும்கட்சி அரசியல்வாதிகளின் பெரும்பாலான ஊழல் வழக்குகளில் இருந்து திடீரென விடுவிக்கப்படுகிறார்கள்!
ஜாதீய வெறியில் கொல்லப்பட்டவர்களின் வழக்குகளை ஒரு கண்ணோட்டத்துடனும், மத வெறியில் கொல்லப்பட்டவர்களின் வழக்குகளை ஒரு கண்ணோட்டத்துடனும் நீதிபதிகள் அணுகுகின்றனர்!
உதாரணமாக ஒரு தலித் கொல்லப்பட்டால், சாட்சிகள் பிறழ்சாட்சிகளாக மாறினாலும் உயர்சாதியினருக்கு கட்டாயம் தண்டனை வாங்கித்தர நீதிமன்றம் துடிக்கிறது!
ஆனால் மதவெறியில் இந்து அமைப்பினர் கொல்லப்பட்டால், பெரும்பாலான நீதிபதிகள், ஜாதிய கொலைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல், குற்றவாளிகளை விடுவிக்கின்றனர்!
ஜாதீய, மத கொலைகள் இரண்டும் ஒரே வகையான ஆபத்தானவை என்றாலும் நீதிமன்றங்கள் நடுநிலமை தவறி நடக்கின்றன!
சமீபத்தில் அதிமுக எம்பி ஒருவர் ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளது நகைப்பிற்குறியதாக உள்ளது! தமிழகத்தில் இவர் மட்டும்தான் கொடுத்தாரா? ஈரோடு கிழக்கு தேர்தலில் ஆடுமாடுகள் போல மனித பதர்கள் கொட்டகைகளில் அடைத்து வைக்கப்பட்ட போது இந்த நீதிபதிகள் எங்கே போனார்கள்?
பலநேரங்களில் பத்திரிக்கை டிவி செய்திகளின் அடிப்படையில் தானாக வழக்கு பதிவு செய்யும் நீதிபதிகள், இந்த ஈரோடு இடைத்தேர்தல் செய்தியை பார்க்காமல் எங்கே போனார்கள்?
அதே போல ஊழலுக்கு எதிராக கீழமை நீதிமன்றங்களை விசாரிக்க டெல்லி சுப்ரீம் கோர்ட் அறிவறுத்தினால், அல்லது கீழமை நீதிமன்றங்களுக்கு சுப்ரீம் கோர்ட் ஒரு வழக்கை அனுப்பினால், கீழமை நீதிமன்றங்கள் வழக்கை தங்கள் இஷ்டம்போல் இழுத்தடிக்கின்றன!
பொய்யான தீர்ப்பு எழுதும் நீதிபதி மீது எந்த நடவடிக்கையும் எளிதில் எடுக்க முடியாது என்பதால், பல நீதிபதிகள், தற்காலிக நிவாரணமாக குற்றவாளிகளுக்கு பொய் தீர்ப்பை வழங்குகின்றனர்! தமிழக நீதிமன்றங்களில் இந்த வித நீதிமன்ற பயங்கரவாதம் அதிகமாக நடக்கிறது!
பல நீதிபதிகள் இந்துமதம் மீதான மிக மோசமான மதவெறிப்பேச்சுக்கும், கடவுள் மறுப்பாளர்கள் என்ற போர்வைக்குள் ஒழிந்து கொண்டு இந்து மதம் மீது வன்மத்தை கக்குபவர்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை! ஆனால் அதே அளவு குற்றமான ஜாதிவெறி பேச்சுகளுக்கு மட்டும் நடவடிக்கை எடுக்கிறார்கள்!
எல்லாவற்றிற்கும் மேலாக சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் தமிழக கீழமை நீதிமன்றங்களின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக இருக்கின்றன!
பணக்காரனுக்கு ஒரு நீதி, ஏழைகளுக்கு ஒரு நீதி என செயல்படுகின்றன!
சென்னை உயர்நீதிமன்றம் பல வழக்குகளில் மிக மோசமான தீர்ப்புகளை வழங்கிவருகிறது!
ஊழலுக்கு ஆதரவான பல தீர்ப்புகளின் மூலம் சென்னை உயர்நீதிமன்றம் "நீதிமன்ற பயங்கரவாதம்" என்ற புதிய கருவியை தமிழக மக்கள் மீது ஏவி வருகிறது!
நீட் தேர்வு போல, நீதி பயல்களுக்கும் வருடம்தோறும், ராணுவ மேற்பார்வையில் தகுதி தேர்வு நடத்த வேண்டும்! 50%சதவீதத்திற்கு மேல் தவறான தீர்ப்புகள் சொல்லும் நீதிபதி பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்! அவர்களின் அனைத்து தீர்ப்புகளையும் மறு ஆய்வு செய்ய வேண்டும்!
இந்திய ஜனநாயகத்தின் மீது மிக மோசமான தாக்குதலை ஏற்படுத்திவரும் "நீதிமன்ற பயங்கரவாதம்" ஒழிக்கப்பட வேண்டும்!
No comments:
Post a Comment