
"தளபதி" படத்துல ,14 வயதே ஆன கல்யாணி தாயாகிடுவாள்.வேறு வழியில்லாமல் கனத்த இதயத்துடன் தொடர் வண்டியில் பிறந்த குழந்தையை ஏற்றி அனுப்புவிடுவாள்.
வாலி அவர்களின் வரிகளில் ,ஜானகி அம்மா தேன் குரலில்,இசைஞானி இளையராஜா இசையில்,ஒரு அழகான பாடல் வரும்.

இந்த வரியை கேட்டதும் ,நாம் புரிந்து கொள்வது, 14 வயதே ஆன தாய் ,ஈன்றெடுத்த ராசாவாகிய கதாநாயகன் என்று தானே ,
ஆனால் ,இந்த வரிகளில் வேறொரு அர்த்தமும் ஒளிந்துள்ளது.
இளையராஜாவின் தாயின் பெயர் "சின்னத்தாய் "...இப்போ மறுபடியும் அந்த வரிய படிச்சு பாருங்க குறியீடு புரியும்
"சின்னதாய்" அவள் தந்த ராசாவே(இளையராஜா).... ஜஸ்ட் வாவ் ..
No comments:
Post a Comment