*G Square என்னும் கோபாலபுரம் ஸ்கொயர் எப்படி கோபலபுர குடும்பத்தின் அரனாக நின்று லஞ்சம் ஊழலில் வரும் கருப்பு பணத்தை இரட்டிப்பாக்குதல் மற்றும் வெள்ளைப்ணமாக மாற்றுகிறது விஞ்ஞான ரீதியாக. வருமாணவரித்துறையால் நெருங்க முடியாத அளவிற்கு திறமையாக, இதனால் மக்கள் எதை இழக்கிறார்கள் என்பதை பற்றிய கட்டுரை இது.*
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Saturday, October 21, 2023
உயர்த்தப்பட G square தான் காரணம்.
இன்று தமிழகத்தில் ஒரு ஏக்கர் அதாவது 100 சென்ட் கிட்டதட்ட 1 கோடி தோராயமாக நிலம் விற்பவரால் விற்கபடுகிறது. அதாவது 1 சென்ட் ( 436 சதுரஅடி) 1 லட்சம். இதை DTCP சைட்டாக மாற்ற இந்த G square மிக குறைந்த செலவு. மற்றவர்களுக்கு பல மடங்கு. லஞ்சம் ,கடும் தாமதம் எல்லாம் உண்டு. ஆனால் இதற்கு அதிகாரிகள் எந்த வித தடையுமின்றி மிக குறைந்த கட்டணத்தில் அனுமதி கொடுப்பார்கள். சைட்டாக பிரிக்கும் போதும் , பூங்க மற்றும் பொது இடம் விடுவதாலும் கிட்டதட்ட 30 சதம் இடம் விரையமாகும். அதாவது 60 சென்ட் மட்டுமே விற்க தகுதியான இடமாகும். இந்த நிறுவணத்திற்கு 60 சென்டின் கையடக்கம் என்ன என்பதை பார்ப்போம்.
இன்று நிலம் விற்பனை மதிப்பு ஒரு கோடி என்றால் அரசாங்க மதிப்பு வெறும் 10 லட்சம் மட்டுமே இருக்கும். அதனால் 10 லட்சம் வெள்ளைப்பணம் மட்டுமே தேவை , 90 லட்சம் கருப்பு பணம் உள் இறக்கபடும், எழுத்து கூலி 12 சதம் அதாவது 1.2 லட்சம். வெள்ளைப்பணம். DTCP யாக மாற்ற வெள்ளைப்பணம் 5 லட்சம் தேவை. இதர செலவுகள் 4 லட்சம் வரை இருக்கும். அதாவது 1 கோடியே பத்து லட்சத்தில் 60 நிலம் DTCP சைட்டுகளாக விற்பனைக்குவந்து விடும். அதாவது 1 சென்ட் தோராயமாக 2 லட்சம் கையடக்க செலவு. இதில் 90 லட்சம் கருப்பு பணம் அதாவது 1.50 லட்சம் ஒரு சென்ட் கருப்பு பணம் , வெள்ளப்ணம் 50000. அதாவது அரசாங்க மதிப்பின் படி மொத்த செலவு 1 சென்ட் 50000 மட்டுமே.
தற்பொழுது விற்கும் விலைக்கு வருவோம். நமக்கு அனைவருக்கும் தெரியும் ஆட்சி மாறிய சில மாதங்களில் ரியல் எஸ்டேட் விலை கிட்ட தட்ட இரண்டு மடங்காக உயர்ந்து விட்டது, 3 லட்சத்திற்கு விற்ற சைட்டுகள் இப்போது 5 முதல் 6 லட்சமாக உயர்ந்தது. இது உயர்த்தப்பட G square தான் காரணம். அவங்க தொழில் வெற்றி கரமாக நடக்க இது ரொம்ப அவசியம்.
விற்பனை விலை 1 சென்ட் 5 லட்சமாக வைத்தாலும், அந்த நிறுவனத்தின் லாபம் 3 லட்சம், அதாவது அரசாங்க மதிப்பு படி லாபம் 4.5 லட்சம். லாபம் 4.5 லட்சம் என்றால் வருமான வரித்துறைக்கு 1.5 கட்டியாக வேண்டும். கையில் மிஞ்சுவது 3.5 லட்சம். அதாவது முதலீடு செய்த 50000 வெள்ளைப்ணம், அதுபோக லாபம் 3 லட்சம் வெள்ளைப்பணம் . அதாவது முதலீடு செய்த கருப்பு பணம் செண்டுக்கு 1.5 லட்சம். இப்பொழுது அது வெள்ளைப்ணமாக இரண்டு மடங்காக உயர்ந்து கோபாலபுரம் செல்கிறது.
தமிழகத்தில் அரசாங்கத்தால் சம்பளம் தவிர்த்த மக்கள் நல பணிகளில் மாதம் 10000 கோடி வரை செலவாகிறது, மேலும் பல வழிகளில் அரசு வேலைக்கு சேர்க்க பணம், மது உற்பத்தி கம்பெனிகளின் கமிஷன் குறைந்தது மாதம் 10000 ஆயிரம் கோடி வரை கருப்பணமாக கோபாலபுரம் வந்தடைகிறது, அவை ஹவாலா ஏஜென்டுகள் மூலம் நிலம் விற்பவருக்கு சென்றடையும், G square அந்த நிலங்களை பெறும். பிறகு அது DTCP சைட்டுகளாக மாறும். அவை விற்பனை செய்யபடும். அதாவது மாதம் 10000 ஆயிரம் ஏக்கர் நிலமாவது கிரையமாகும். பத்திரபதிவு கடந்த ஆண்டு இரண்டு மடங்காக உயர இதுவே காரணம். 10000 கோடி கருப்பு பணம் 20000 கோடி வெள்ளைப்ணமாக மாறும். அத்தனை லாபங்களும் முதலீட்டாளர்களை சேறும். ஆண்டுக்கு 2 லட்சம் கோடி வரை Gsquare லாபம் அடையும். 5 ஆண்டுகளில் 10 லட்சம் கோடி வெள்ளைப்பணம் வருமானம் ஈட்டப்படும். அனைத்து வருமாணத்திற்கும் தெளிவான கணக்கு இருக்கும். செலவுகளை அதிகப்படுத்தி கணக்கு காட்டி லாபக் கணக்கை குறைத்து வரி கட்டுவர். எந்த துறையும் கேள்வி கேட்க முடியாது. கமிஷன் வாங்கியவர்களுக்கு வேண்டுமானால் ஆபத்து இருக்கலாம், ஆனால் அந்த கமிஷனை பெரும்பங்கு பெற்றவர்களுக்கு கொடுத்தவருக்கும் எந்த தொடர்பும் இருக்காது. ஆனால் கோபாலபுரம் குடும்பம் அந்த 10 லட்சம் கோடியை வைத்து பல நிறுவனங்களை வளைத்துப் அவர்கள் சொத்தாக்கும். இந்தியா முழுதும் அதன் சொத்துக்கள் இருக்கும். அனைத்தும் முறைப்படி பெற்றது. அம்பானி அதானி எல்லாம் சொத்து வைத்திருந்தாலும் கடண் பல பல மடங்கு இருக்கும். இங்கு இவர்கள் சொத்து அனைத்தும் கடனற்றவை. பல நிறுவனங்கள் கைவசம் ஆவதால் இனி ஆட்சியை பல மடங்கு விரிவு படுத்தலாம். 2001 2006 காலத்தில் வந்த நில அபகரிப்பு புகார் வராது. அந்த முறை கட்சி தொண்டர்கள் இந்த வேலையை செய்தார்கள். இப்ப கம்பெனி எந்த தொண்டனுக்கும் சம்பந்தம் இல்லை. இந்த நிறுவணம் நல்ல விலை கொடுத்து வாங்கும். ஏனெனில் அனைத்தும் மக்கள் காசு. அதை மக்களிடம் திரும்பி வாங்கவே விலையை இரண்டு மடங்காக மாற்றிவிட்டணர். மற்ற நிறுவனங்கள் சைட் வியாபாரம் செய்தால் இதை விட குறைந்த விலைக்கு கொடுக்க முடியாது. அவர்களுக்கு அனுமதி பெற கால தாமதம் மற்றும் அதிகப்படியான லஞ்சம் என்று இரண்டு மடங்கு செலவு இருக்கும்.
இதனால் மக்களுக்கு என்ன இழப்பு. அனைத்து அரசு துறை வேலைகளிலும் காசு கொடுத்து வேலைக்கு சேர்ந்த தகுதியற்ற நபரே இருப்பார், அவர் செய்த முதலீட்டை எடுக்க மக்களிடம் காசு புடுங்குவார். இதனால் அனைத்து அரசு சேவைகளுக்கும் மக்கள் அதிக செலவு செய்ய வேண்டி வரும். தரமற்ற அதிகாரிகளில் அனைத்து துறைகளும் செயலிலக்கும். கல்வி துறைபோல் ஆசிரியர்களே தேர்வில் வெற்றி பெறாத நிலை வரும். சாலை கேவலமாக பராமரிக்கபடும், குடிநீர் கூட சரியாக வராது . தரமற்ற வாழ்க்கை வாழ வேண்டி வரும், ஆனாலும் அதிக செலவு செய்ய வேண்டிவரும்.
மேலும் ஒரு வீடு கட்ட 3 சென்ட் வாங்க அன்றைய செலவு 9 லட்சம் இன்று 18 லட்சம், வீடு கட்ட 1000 சதுரஅடி அன்று 14 லட்சம் இன்று 22 லட்சம். அதாவது அன்று hமொத்த செலவு 23 லட்சம் இன்று 40 லட்சம்.
அதாவது மாதம் 20000 சம்பளம் வாங்கும் நபர் 10 வருடத்தில் கட்டிய வீடு இனி கட்ட 20 வருடமாகும். 5 வருட ஆட்சி நடந்தால் போதும் ஓட்டு மொத்த தமிழக மக்களின் உழைப்பின் மதிப்பு பாதியாகிவிடும். நடுத்தர மக்கள் அன்று இடம் வாங்கி வீடு கட்டுவதற்கு ஒரு தலைமுறை சென்றது அன்று , இனி இடம் ஒரு தலைமுறை வாங்கும் அடுத்த தலைமுறையில்தான் வீடு கட்ட முடியும். நம் அத்தனை உழைப்பின் பலனிலும் கோபாலபுரம் குடும்பம் பாதியை நிரந்தரமாக எடுக்க திட்டம் போட்டாகி விட்டது. தரமற்ற கல்வி , தரமற்ற சாலைகள் , தரமற்ற குடிநீர் , தரமற்ற கழிவு நீர் காலவாய்கள்,தரமற்ற மருத்துவம், கொசுக்கள் நிறைந்த தெருக்கள், காலம் முழுதும் சிறிய வாடகை வீடு , அரசு ஊழியர்களின் அடிமையாக வாழும் நிலை உறுதியாகும்நோயாலும் குடும்ப பணச்சுமயாலும் பல நாட்கள் நிம்மதி இருக்காது. கடன் வாங்குவது அதிகரிக்கும்,தற்கொலைகள் அதிகமாகும்.
ஒரு குடும்பம் வளம்பெறவே பல குடும்பங்கள் நொந்து சாகும் காலம் இது. இதை எந்த மத்திய அரசாங்கம் வந்தாலும் கேள்வி கேட்க முடியாது. விஞ்ஞான ரீதியான ஊழல். இங்கு ஒரு குடும்பம் வளம் பெற பல குடும்பங்கள் நொந்து சாகும் நிலை வந்து விட்டது. இனி இதற்கு விடுதலை கிடையாது. நிரந்தர கொத்தடிமை வாழ்க்கை வாழ தமிழன் தயாராக வேண்டும். G SQUARE எனும் கருவி மூலம் மக்களிடம் திருடுவது எளிதாகி விட்டது.
பாவம் தமிழன், செய்த பாவம் அப்படி அரசாங்கமே மக்களிடம் பணத்தை திருடும் இயந்திரமாக மாறினால் இதை யார் தடுப்பது. காமராஜரை தோற்கடித்த பாவத்திறகான தண்டனை இவ்வளவு கொடியதாக இருக்குமென்று யாரும் நினைத்து கூட பார்க்க முடியாது.
மக்கள் மன மாற்றம் நடந்தால் மட்டுமே அதுவும் தேர்தல் வழி புரட்சிக்கான காலம் கடந்து விட்டது. அவர்களிடம் இருக்கும் பணம் அவர்களை வெல்லச்செய்யும் என்றும். கடவுளும் வரக்கூடாது என்பதற்காக நம்மை கடவுளை பழிக்க பழக்கிவிட்டணர்.
அந்த மக்கள் புரட்சி கூட நடக்க வாய்பில்லை அனைத்து ஊடகங்களும் அவர்கள் கையில் , அப்படி புரட்சி செய்தாலும் அதை அடக்க அவர்களிடம் பல கொலை வீரர்கள் வைத்துள்ளனர். இனி ஒடுங்கி நடுங்கி வாழ்வதே தமிழருக்கு சால சிறந்தது. இத்தனை பிரச்சினைக்கும் மோடி தான் காரணம் என்று கதைகட்டி அதை மக்களை நம்ப வைத்து அவர்கள் பெறும் வேதனைக்கு மோடியை தீட்டி தீர்க்கவும் வைக்க பல ஊடகங்கள். பிரச்சினைக்கு தீர்வு இந்தியாவில் இருந்து பிரிவதே என்று கூட போராட வைப்பார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment