டீமானிடைசேஷனின் போது செய்யப்பட்ட ஒரு டெபாசிட் தொகை எனது தாயாரின் கணக்கோடு சம்பந்தம் கிடையாது என சொல்ல பாஸ்புக்கை ஆதாரமாக காண்பித்தும் செலான் இருந்தால் மட்டுமே ஒத்துக் கொள்வோம் என கூற பிரசினையாக உருவெடுத்தது. டெபாஸிட் செய்து ஒரு வருடத்திற்கு பிறகு நடந்த விஷயம்.
இதனால் தாயாரின் கணக்கை ஹோல்டில் போட்டதோடு அல்லாமல் அவர்களது FDயையும் எடுக்க அனுமதி மறுத்தனர்.
உண்மையில் டீமானிடைசேஷனின் போது இருந்த அலுவலர் ஒருவரின் குளறுபடியே காரணம் என்றும் அவர் VRSல் சென்று விட்டதால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்பதை கிளை மேலாளரே என்னிடம் கூறினார். அதற்கு பிறகு வந்த கிளை மேலாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கணக்கை விடுவிக்காமல் தாயார்தான் அதை கட்ட வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். பின்பு 5 வருட போராட்டத்திற்கு பிறகு ஹோல்டை எடுத்து FDயை க்ளோஸ் செய்ய அனுமதித்தனர்.
பின்பு நாமினேஷன் செய்யவில்லை என கூறி அகௌண்டை க்ளோஸ் செய்வதற்கு ஒரு ஃபார்மை கொடுத்து டெத் சர்டிபிகேட் இத்யாதி இத்யாதி போன்றவைகளை இணைத்து கொடுக்க சொன்னார்கள்.
சமர்பித்த போது ஸ்டாம்ப் பேப்பரில் நோடரி பப்ளிக் கையெழுத்துடன் கொடுக்க வேண்டும் என்றனர். 300ரூ. கொடுத்து ஸ்டாம்ப் பேப்பர் வாங்கி அதில் ஃபார்மை டைப் செய்தேன்.
இது சம்பந்தமாக கூகிளில் தேடியபோது RBI ரூல் படி 5 லட்சம் அதற்கு மேல் இருந்தால் மட்டுமே நோடரி பப்ளிக் ஷூரிட்டி போன்றவை தேவை என்ற தகவல் கிடைத்தது. அதை பாங்கில் காட்டியபோது... நோடரியோட கையெழுத்து தேவை .. எங்க பாங்க் ரூல் வேறு என்றார்.
ஒரு சிறு தொகைக்காக நோடரியை தேடி அலைந்து பணம் கொடுத்து... வேண்டாம் விட்டு விடலாம் என்று நினைத்தேன்.
இம்முறை கிளை மேலாளரை சந்தித்து விஷயத்தை கூறினேன். அவரும் நோடரியெல்லாம் தேவையில்லை ஃபார்மை மட்டும் சரியாக பூர்த்தி செய்து ஒரு கவரிங் லெட்டருடன் கொடுங்கள் என சொல்லிவிட்டார்.
இதை சம்பந்தப்பட்ட அலுவலரால் ஜீரணம் பண்ண முடியவில்லை... அப்படியா சொன்னார்.... அப்படியா சொன்னார்.. என இரு முறை கேட்டுவிட்டு வாங்கிக் கொண்டார். ஆனால் பல முறை கிளை மேலாளர் பிஸி அ வேறு ஏதாவது காரணம் கூறி இழுத்தடித்து வந்தார்.
மறுபடியும் கிளை மேலாளரிடம் சென்று நீங்க பிஸியாக இருப்பதால்...... அடுத்த நொடி அந்த ஃபார்மை வாங்கி கையெழுத்து போட்டு கொடுத்து விட்டார். அதை கொடுத்த பின் அலுவலர் கொஞ்சம் கடுப்பாகி ... சரி சார்... ஆயிடும்... நீங்க போகலாம் என்றார்.
4 நாட்கள் கழித்து ஒரு வழியாக அகௌண்டை க்ளோஸ் செய்தார். இதற்காக ஆறு வருட போராட்டம்!
இப்படி தேவையில்லாமல் கஸ்டமர்களை அலைய வைப்பதே இவர்களின் வாடிக்கை ஆகிவிட்டது.
விளம்பரம் மட்டும் ....
......... பாங்க் அது உங்களுடைய பாங்க்!
No comments:
Post a Comment