Monday, November 13, 2023

உத்திரபிரதேசத்தின் கொடுமை .

 விளக்கில் எண்ணெய் இருந்தால் என்ன பிரச்சனை? விளக்கில் எரிந்தது போக கொஞ்சம் என்ணெய் மிச்சம் இருக்க தானே செய்யும்.

இலட்சக்கணக்கான விளக்கு களில் ஆயிரக்கணக்கான விளக்குகள் கொஞ்சம் எரிந்து அணைந்து போகக்கூட வாய்ப்பு உள்ளது.
நமது வீடாக இருந்தால் கூட நாம் அந்த எண்ணெயை சேமிக்க தானே செய்வோம்.
24 லட்சம் விளக்குகளில் இருந்த கொஞ்சம் கொஞ்சமாக இருக்கும் எண்ணெயை சேர்த்தெடுத்தாலே... கண்டிப்பாக குறைந்த பட்சம் 50 அல்லது 100 லிட்டராவது கண்டிப்பாக சேர்த்தெடுத்திருக்க முடியும்.
இதை மக்கள் வந்து எடுத்துக் கொண்டு போனால் அதில் என்ன தப்பு இருக்க முடியும். அதை எடுத்துக்கொண்டு போனதினால் அந்த எளிய மக்கள் வறுமை கோட்டுக்கு கீழே இருக்கிறவர்கள் என்று அர்த்தமா என்ன...???
நம்ம ஊரில் அன்னதானம் போட்டாலும் சாப்பாடு மிச்சம் இருக்கிறது என சொல்லி அடிச்சு புடிச்சு வந்து சட்டி பானை எல்லாம் தூக்கிட்டு வந்து அள்ளிக் கொண்டு போகிற மக்கள் இன்னும் இருக்க தானே செய்கிறார்கள் .
ரேஷன் கடைகளில் இலவசமாக தரும் வேட்டி சேலையை வாங்க காரில் ஏறி பறந்து வந்து வரிசையில் நின்று வாங்குகிறவன் எல்லாம் வருமைக் கோட்டுக்கு கீழுள்ளவனா...
விளம்பரத்திற்காக...
5 ரூபாய்க்கு ஒருவன் பிரியாணி போட்டால் முதல்நாளே வரிசையில் போய் நிற்கிறான்களே...
அந்த பயல் கள் எல்லாம் வருமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவனே...
அதை பார்த்து இந்த பதிவை போட்ட அரைமெண்டல் பயல் சமூக நீதியைப் பாரீர் என்று ஓலமிடுவானா...???
இது என்ன முட்டாள் தனமான லாஜிக் இது.
ஒருவேளை அந்த எண்ணெய் எல்லாம் எடுக்காமல் அப்படியே விட்டால்... எவ்வளவு சுற்று சூழல் பாதிப்பு ஏற்படும்.
அந்த எண்ணெயை கீழே எல்லாம் கொட்டி வீணாக தானே போகும்...
அப்போது கூட இந்த கூ முட்டை கள் குறைதான் சொல்ல போறான் கள்.
நீதிநெறி விளக்கம் பாடல் 37.
கூறுவது....
வாங்குங் கவளத் தொருசிறிது வாய்தப்பின்
தூங்குங் களிறோ துயருறா - ஆங்கதுகொண்
டூரும் எறும்பிங் கொருகோடி யுய்யுமால்
ஆருங் கிளையோ டயின்று
பொருள். =
வாங்கும் - தான் எடுத்து உட்கொள்ளும், கவளத்து -ஒருவாய் உணவினின்று, ஒரு சிறிது - ஒரு சிறிது உணவு, வாய் தப்பின் - வாய் தவறிக் கீழேவிழுந்தால், (அதனால்) தூங்கும் - அசையா நிற்கும், களிறோ - யானைகளோ, துயர்உறா -வருத்தமடையா, அதுகொண்டு - தவறிய அவ்வுணவைக்கொண்டு, இங்கு - இவ்வுலகில், ஊரும் எறும்பு ஒருகோடி -ஊருகின்ற எறும்புகள் ஒரு கோடி, ஆரும் கிளையோடு - தங்கள் நிறைந்த சுற்றத்தோடு,அயின்று - உண்டு, உய்யும் - பிழைக்கும்.
விளக்கம். யானைவாயினின்றுந்தவறிய சிற்றுணவால் ஒரு கோடி எறும்புகள் உயிர்வாழும்.
இந்த பதிவைப் போட்ட மனநோயாளி யே இதுதான் அயோத்தி யில் விளக்கின் மீதி எண்ணெய் சேகரித்த செயல் விளக்குவது இதுதான்.
இதைத் தான் வள்ளுவரும் கூறுகிறார்...
"சுற்றத்தாற்சுற்றப்படவொழுகல் செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன்"*
என்பது திருக்குறள்.
பெருஞ்செல்வமுடையவர் அதனில் ஒரு சிறு பகுதியைத் தானமாக வழங்குவராயின் அதனால் எத்தனையோஉயிர்கள் பிழைக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...