Monday, August 1, 2011

மு.க.ஸ்டாலினும் -நானும் ரவுடிதான் வடிவேலுவும்


சமச்சீர் கல்வியை வைத்து அராஜகம் செய்து பள்ளிவேன்கள்,அரசு பஸ்களில் வந்த மாணவர்களையெல்லாம் திருப்பி வீட்டுக்கு அனுப்பிய திருவாரூர் மாவட்ட தி.மு.க செயலாளர் பூண்டி கலைவாணனால் விஜய் என்னும் மாணவன் அநியாயமாக உயிரிழந்தான்.பல சிறுவர்கள் படுகாயம் அடைந்தார்கள்.பள்ளி செல்லும் மாணவர்களை ஏன் மிரட்டி வீட்டுக்கு அனுப்ப வேண்டும்...?ஆட்சி இழந்தும் கொட்டம் அடங்காத தி.மு.க செயலாளரின் கொ... எடுக்க போலீஸ் சென்றது.ஸ்டாலினுடன் இருந்தால் அசுர பலம் என தப்பாக கணக்கிட்டு அவருடன் காரில் பதுங்கியிருந்தவரை கொத்தாக அள்ளியது போலீஸ்.உடனே ஸ்டாலின் ,என் கூட இருக்கும்போதே அரெஸ்ட் பண்ணுவியா நீ என்றிருக்கிறார்.



உடனே போலீஸ்,சார் நீங்க பாட்டுக்கு போங்க...ஆளை அனுப்புங்க என சொல்லிவிட்டு,போலீஸ் வேனில் கலைச்செல்வனை வேனில் ஏற்றிருக்கின்றனர்.உடனே ஸ்டாலின் சாலையில் உட்கார்ந்து வேனை போகவிடாமல் ரகளை செய்ய,வேன் போகணுமே என்பதற்காக தம்பி ஓரமா உட்கார்ந்து போராட்டம் பண்ணுப்பா என்றிருக்கின்றனர்.முடியாதுஎன ஸ்டாலின் அடம் செய்து குடுகுடுவென வேனுக்குள் ஓடிவந்து உட்கார்ந்து கொண்டு என்னையும் அரெஸ்ட் பண்ணு என்றிருக்கிறார்.சார் உங்களுக்கு தனியா வழக்கு பின்னாடி வரும் இப்ப எங்களை விடுங்க என்றிருக்கின்றனர்.முடியாது நானும் ஆர்ப்பாட்டம் பண்ணினேன் என்னையும் அரெஸ்ட் பண்ணுங்க என பிடிவாதம் செய்ய,பிறகு போலீஸாருக்கு வேறு வழி இல்லாமல் சரி...அந்த முட்டு சந்து வரைக்கும்தான் கூட்டிட்டு போவோம் அப்புறம் இறங்கிக்கணும் சரியா..என்றனர் ..அவரும் சரியெங்க..உடனே கலைஞர் டிவிக்கும் சன் டிவிக்கும் ,கலைஞர் தாத்தாவுக்கும் செய்தியை பாஸ் செய்து தமிழகம் முழுவதும் கலாட்டா செய்ய சொல்லிவிட்டனர்...

ஸ்டாலினை பளிச் செய்ய கருணாநிதி எவ்வளவோ செய்திருக்கிறார்.எல்லாவற்றிலும் அவர் ஃபெயில் தான் ஆகியிருக்கிறார்.போலீஸ் தன்னை சனி ஞாயிறு ஜெயிலில் வைத்துவிட்டால் தியாகி ஆகிவிடலாம் என கணக்கு போட.....புள்ள பூச்சியெல்லாம் எதுக்குப்பா அரெஸ்ட் பண்றிங்க...அவர் மேல இனி ஒண்ணுமில்லாத பொட்டி கேஸ் எல்லாம் போடக்கூடாது என ஜெயா கத்தி தீர்க்க,ஸ்டாலின் தன் தந்தை கருணாநிதியின் இரண்டு மணி நேர உண்ணாவிரதம் போல இரண்டு மணி நேர சிறைவாசம் சமச்சீருக்காக அனுபவித்தார் ...இனி அவர் சம்ச்சீர் தியாகி என முரசொலி கொண்டாடும்..

வடிவேலு- அண்ணே வணக்கம்ணே...என்னையே தூக்கி சாப்பிட்டுட்டீங்களே...


 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...