தி.மு.க முன்னாள் எம்பி கே.பி.கே.குமரன் கரண் டிவி விற்பனை செய்ததில் பங்கு தொகையான ரூ.20 கோடியை தனக்கு கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்து விட்டதாக பங்குதாரர் பரமசிவன் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
திருநெல்வேலியை சேர்ந்த பரமசிவன் என்பவர் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் அளித்துள்ள புகாரில், நான் நெல்லை டிவி என்ற பெயரில் கேபிள் டிவி நடத்தி வருகிறேன். கடந்த 2000ஆம் ஆண்டு நானும் எனது சகோதரர் மாரியப்பனும் முன்னாள் தி.மு.க எம்.பி கே.பி.கே.குமரனுடன் சேர்ந்து கரண் டிவி பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் எம்.எஸ்.ஓ.வை திருநெல்வேலியில் துவக்கினோம். இந்த நிறுவனத்தில் நாங்கள் மூன்று பேரும் இயக்குனர்களாக பொறுப்பேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருந்தோம்.
கரண் டிவி நிறுவனத்தில் எனக்கு 20 சதவிகித பங்கு என்றும், கே.பி.கே.குமரனுக்கு 80 சதவிகித பங்கு என்றும் ஒப்பந்தம் போடப்பட்டது. அப்போது நிறுவனத்தின் இயக்குநர் என்ற முறையில் எனக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியமாக வழங்கப்பட்டது.
கரண் டிவி நிறுவனத்திற்கு விளம்பரம், கேபிள் டிவி ஆபரேட்டர்களின் சந்தா தொகை என வருமானம் அதிகமாக வந்த போதும் நாங்கள் அதன் லாபத்தை பெறாமல் மாத ஊதியம் மட்டுமே பெற்று வந்தோம். நாங்கள் லாப தொகையை குமரனிடம் கேட்டபோது, அவர் நிறுவனத்தில் கிடைக்கும் லாபத்தில் நாம் கம்பெனியை விரிவுபடுத்தலாம் என்று கூறினார். இதையடுத்து கரண் டிவியின் கிளைகள் கோவை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2006ஆம் ஆண்டு எங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் மீறி கே.பி.கே.குமரன் கரண் டிவியை சன் டிவி குழுமத்திற்கு ரூ.100 கோடிக்கு விற்றுவிட்டார். இதை அறிந்த நாங்கள் குமரனிடம் எங்கள் பங்கு தொகையான ரூ.20 கோடியை கேட்ட போது, முதலில் தருகிறேன் என்று கூறியவர் பின்னர் தரமுடியாது என்று கூறிவிட்டார். அந்த நேரத்தில் குமரன் தி.மு.க.வின் எம்.பி.யாக இருந்ததால் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை இருக்காது என்ற காரணத்தால் நாங்கள் புகார் தரவில்லை.
தற்போது தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீராக உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட நாங்கள் புகார் கொடுக்கிறோம். எனக்கு சேரவேண்டிய பங்கு தொகையான ரூ.20 கோடியை தராமல் ஏமாற்றிய கே.பி.கே.குமரன் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு சேர வேண்டிய பணத்தை பெற்று தரும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று புகார் மனுவில் பரமசிவன் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment