ஊழலை எதிர்க்கும் இந்தியா
(India Against Corruption)
(India Against Corruption)
அமைப்பின் சென்னை பிரிவால் -
இன்று (சனிக்கிழமை – 06/08/2011)மாலை 5 மணி முதல் 6.30 வரை
சென்னை மெரீனா கடற்கரையில் ஒரு பேரணி
நடத்தப்பட்டது -
மத்திய அரசின் போலி லோக்பாலை
எதிர்த்தும், அண்ணா ஹஜாரேயின்
“ஜன் லோக் பால்” மாதிரி
சட்ட வரைவை ஆதரித்தும் !
பேரணி உணர்ச்சிபூர்வமாக இருந்தது.
கல்லூரி மாணவர்கள் -இளைஞர்கள்,
நடுவயதினர்,
பெண்கள்,
மூத்த குடிமக்கள்,
என்று பல்வேறு தரப்பினரும்
ஆர்வமுடன் பங்கு கொண்டனர்.
இரண்டு சுதந்திரப் போராட்ட தியாகிகளும்
கலந்து கொண்டனர்.
பேரணியை எந்த திரைப்பட நடிகையும்
துவக்கி வைக்கவில்லை.
எந்தவொரு அரசியல் கட்சித்தலைவரும்
கலந்து கொள்ளவில்லை -அழைப்பும்
விடவில்லை !
இந்த பின்னணியை கருத்தில்கொண்டு
பார்க்கும்போது ஓரளவு நல்ல கூட்டம் என்றே
சொல்ல வேண்டும்.
இந்த மக்கள் எந்த ஒரு அரசியல்
கட்சியையும் சேராதவர்கள்.
இவர்களிடையே -
கோபத்தைப் பார்க்க முடிகிறது.
வேகத்தைப் பார்க்க முடிகிறது.
விவேகத்தை பார்க்க முடிகிறது.
சென்னையைப் பொறுத்த வரை இது ஒரு
துவக்கம் தான். இனி இது எப்படி வடிவும்,
வேகமும் கொண்டு முன் செல்லப் போகிறது
என்பதைப் பொறுத்து தான் பார்க்க வேண்டும்.
இத்தகைய முயற்சிகள் தொடர வேண்டும்
என்று மனதார விரும்புகிறேன்.
காந்தி சிலை எதிரில் ஆரம்பித்த பேரணி -
இறுதியில் மீண்டும் காந்தி சிலை எதிரிலேயே
வந்து முடிவுற்றது. இறுதியில் காந்திஜியின்
காலடியில் ஒரு கோரிக்கை மனுவும்
வைக்கப்பட்டது.(மனு படிக்க சுவையாக
இருக்கிறது - கீழே புகைப்படமாக
தந்திருக்கிறேன்).
இந்தப் பேரணியில் நான் எடுத்த சில
புகைப்படங்கள் கீழே -








No comments:
Post a Comment