இன்று(வியாழக்கிழமை) பகலில் டெல்லி
தொலைக்காட்சிகளில் சிறியதாக ஒரு
செய்தி வந்தது. மருத்துவ சிகிச்சைக்காக
காங்கிரஸ் கட்சியின் தலைவர்
சோனியா காந்தி அமெரிக்காவில்
இருக்கும்போது காங்கிரஸ் கட்சி தொடர்பான
விஷயங்களை ராகுல் காந்தி உள்ளடங்கிய
4 பேர் கொண்ட ஒரு குழு கவனிக்கும்
என்றும் அவர் திரும்ப வர 2-3 வாரங்கள்
ஆகலாம் என்றும் கூறப்பட்டது.
இவ்வளவு செய்தி மட்டுமேதொலைக்காட்சிகளில் சிறியதாக ஒரு
செய்தி வந்தது. மருத்துவ சிகிச்சைக்காக
காங்கிரஸ் கட்சியின் தலைவர்
சோனியா காந்தி அமெரிக்காவில்
இருக்கும்போது காங்கிரஸ் கட்சி தொடர்பான
விஷயங்களை ராகுல் காந்தி உள்ளடங்கிய
4 பேர் கொண்ட ஒரு குழு கவனிக்கும்
என்றும் அவர் திரும்ப வர 2-3 வாரங்கள்
ஆகலாம் என்றும் கூறப்பட்டது.
வெளியிடப்பட்டது.
அவர் எப்போது அமெரிக்கா சென்றார் ?
அவருக்கு என்ன ஆயிற்று ?
எப்போது முதல் பிரச்சினை ?
உடல்நிலையில் என்ன கோளாறு ?
அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு
என்ன தீவிரமான பிரச்சினை ?
இந்தியாவில் சரி செய்ய முடியாத
அளவிற்கு தீவிரமான பிரச்சினையா ?
இவை எதற்கும் விளக்கம் இல்லை.
இவை மீடியாக்களிடையே
பரபரப்பைக் கிளப்பின.
பின்னர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்
ஜனார்த்தன் த்விவேதி இன்னும் கொஞ்சம்
தகவல் கொடுத்தார் -
“அறுவை சிகிச்சை வியாழன் அன்றோ,
வெள்ளி அன்றோ அமெரிக்காவில்
நடைபெறும்.
அறுவை சிகிச்சை -
புற்று நோய்க்கானதல்ல !
(அதற்குள் டெல்லியில் நோய் பற்றி
பலவிதமான யூகங்கள்
வெளியாகி விட்டன போலும் !)
ஆனால் அறுவை சிகிச்சை தேவைப்படும்
ஒரு நோய் – இதற்கு மேல் எதுவும்
சொல்வதற்கில்லை !
அவரது தாயாரும், சகோதரிகளும்
ஏற்கெனவே
அமெரிக்காவில் இருக்கின்றனர்.
அவர் செல்லும்போது கூடவே,
ராகுல் காந்தியும்,
ப்ரியங்கா காந்தியும் சென்றிருக்கின்றனர்.”
இன்று மதியம் ஜனார்த்தன் த்விவேதி
தெரிவிக்கும் வரை இது பற்றி யாரும்
மூச்சு கூட விடவில்லை. அவ்வளவு
ரகசியம் காக்கப்பட்டிருக்கிறது.
அவர் இந்த நிலையில் நாட்டை விட்டு
வெளியேறுவது மீடியாக்களுக்கு
சற்றும் தெரியாதபடி பார்த்துக்கொள்ளப்பட்டு
இருக்கிறது !
இரண்டு விஷயங்கள் தெளிவாகின்றன-
அவரது நோய் பற்றிய விவரங்கள்
வெளிவருவது அவரையோ, கட்சியையோ
பாதிக்கும் என்று தெரிகிறது.
அடுத்த தலைவர் ராகுல் காந்தி தான்
என்பது தெளிவாக்கப்பட்டு விட்டது.
அவர் இல்லாத நேரத்தில் முக்கிய
முடிவுகளை எடுக்கும்
4 பேர் கமிட்டியில் – பிரனாப் முகர்ஜி,
ப.சி. ஆகிய மூத்த தலைவர்கள்
யாரும் இல்லை !
ஒரே ஒரு மூத்த தலைவர்
(ஏ.கே.அந்தோனி) இருக்கிறார் -
ஆனால் அவரால் கட்சித்தலைமைக்கு
எந்த காலத்திலும் போட்டி ஏற்படாது.
அவரது கடந்த கால நடவடிக்கைகள்முடிவுகளை எடுக்கும்
4 பேர் கமிட்டியில் – பிரனாப் முகர்ஜி,
ப.சி. ஆகிய மூத்த தலைவர்கள்
யாரும் இல்லை !
ஒரே ஒரு மூத்த தலைவர்
(ஏ.கே.அந்தோனி) இருக்கிறார் -
ஆனால் அவரால் கட்சித்தலைமைக்கு
எந்த காலத்திலும் போட்டி ஏற்படாது.
நமக்கு ஏற்புடையன அல்ல என்றாலும் -
மனிதாபிமான அடிப்படையில் -
அவர் விரைவில் உடல் நலம் பெற
வாழ்த்துகிறோம்.
No comments:
Post a Comment