Monday, August 8, 2011

அர்த்தம் கெட்டு பேசுவதா..? கலைஞர் இனி பேசாமல் இருப்பதே நல்லது...!


 


முத்தமிழ் அறிஞர்,  மூத்த அரசியல்வாதி என்று அறியப்பட்டிருக்கும் திமுக தலைவர் டாக்டர்  கலைஞர் அவர்கள், ஆரம்பக்கட்ட அரசியலில் பலமான சாணக்கியராக வலம் வந்து 5 முறை ஆட்சியில் அமர்ந்து அனைத்தையும் பார்த்து விட்டார்.

கலைஞர் பேசினால் தெளிவாக இருக்கும், புள்ளி விவரங்களுடன் இருக்கும், அர்த்தமுள்ளதாக இருக்கும், உள்அர்த்தம் உள்ளதாக இருக்கும் என்று தமிழக மக்களுக்கு அனைவருக்கும் தெரிந்த விஷயம். 

ஆனால் தற்போது சில மாதங்களாக கலைஞர் என்ன பேசுகிறார் என்று அவருக்காவது தெரியுமா என்று தெரியவில்லை. ஒரு மூத்த அரசியல்வாதி ஒரு பெரிய கட்சியின் தலைவர், 5 முறை தமிழக முதல்வராக பதவிவகித்தவர். இவ்வளவு இருந்தும் தற்போது யோசித்துபேச தவறிவிடுகிறார்.

நேற்று (07-08-2011) வெளியிட்ட ஒரு அறிக்கையில் “நான் இருக்கும் வரை திமுகவை யாராலும் அழிக்க முடியாது” என்று அறிக்கை விட்டிருக்கிறார். பொதுவாக திமுகவை யாராலும் அழிக்க முடியாது என்று சொல்லியிருக்கலாம். நான் இருக்கும் வரை, அதற்க்குபின்னரும், அழிவு, என்ற வார்த்தைகள் திமுக அழிவு பாதைக்கு சொல்வது போன்று ஒரு மாயையை இவரே ஏற்படுத்திவிடுகிறார். கட்சியின் அழிவுக்கு காரணம் இவரேதான் என்று கூட தெரியாமல்.

தேர்தல் நேரத்தில் வேலுரில் நடைப்பெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை கண்டிக்கும் விதமாக  ”நான் தமிழகத்தின் முதல்வர்தானா, நான் தமிழகத்தில் தான் இருக்கிறேனா... இங்கு நான்திமுகாதான் ஆட்சி செய்கிறதா” என்று பேசுகிறார். இவர் முதல்வராக இருந்துக்கொண்டு தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் எப்படியிருந்தாலும் அதை பாராட்டி சொல்வதை விட்டுவிட்டு அப்படி பேசியது மிகவும் பொருத்தமில்லாதது. 

தற்போதைய அரசு நிலமோசடி குறித்த சட்டம் வெளியிட்டபோது இவராக சொன்று “இது தி.மு.க. வினரை பழிவாங்கவே இச்சட்டம் போடப்பட்டுள்ளது” என்கிறார். “2001 இருந்து இவ்விசாரணை இருக்க வேண்டும் என்றும்” இவரே தாங்கள் தான் குற்றவாளி என்று சொல்வதுபோல் உள்ளது. அவர்கள் குற்றம் செய்திருந்தால் நீங்கள் போய் புகார் கொடுங்கள். தங்கள் மீது குற்றம் இல்லையென்றால் நிறுபித்து விட்டு வெளியில் வாருங்கள்.

இன்னும் திமுக பொதுகுழுவில் என்ன போசுவன்று தெரியாமல் மகன்களின் சண்டையை வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தது. தன்னுடைய முன்னெச்சிரிக்கை தன்னையில்லாததால் ஆட்சியை இழந்தது, அடுத்த திமுக தலைவர் யார் என்பதை அறிவிப்பதில் தயக்கம் காட்டுவது, குடும்பத்தில் நடக்கும் குழப்பத்தைக்கூட தற்போது இவரால் சரிசெய்ய முடியாமல் இருப்பது மிகவும் வே‌தனைக்குறியது.
  • கனிமொழியை ஒரு சர்வதேச தலைவர் போன்று இந்தியா முழுவதும் வலம்வர வைத்தது, 
  • தன்னுடைய கட்சி அமைச்சர்களின் ஊழலை கண்டுக் கொள்ளாதது, 
  • தன்னுடைய பெயரில் முறையில்லாமல் தொலைக்காட்சி ஆரம்பித்தது, 
  • தன்குடும்பத்தினரின் பதிவிக்காக பரிதவிப்பது,
  • தேவையில்லாத திட்டங்களை தீட்டி அதை பிரபலப்படுத்துவது,
  • போன்ற நடவடிக்கைகள் தான் திமுக வை அழிக்க கூடிய வஸ்திரங்கள் அதைவிடுத்து அடுத்த கட்சியை குறைசொல்வது கொஞ்சம் கூட பொருத்தமில்லாது.
ஆகையால் கலைஞர் ஓய்வை அறிவித்துவிட்டு அமைதியாக ஏதும் பேசாமல் இருப்பது சரியாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. வயது அவரை செயலிழக்க செய்துவிட்டது. இனி எது பேசினாலும் அது எடுபடுமா என்று கேள்விக்குறியாகவே இருக்கிறது. 

பலவருடங்களாக அரசியலைப்பார்த்துக் கொண்டுருக்கும் ஒரு சாதாரண காமன் மேனாக (the common man) சில நேரங்களில் கலைஞருக்கு சல்யூட அடித்த அவரது தொண்டர்களின் கைகள் தற்ப்போது அவரைப்பார்த்து கைகொட்டி சிரிக்கிறது. இன்னும் குடும்பத்தையே பார்த்துக் கொண்டு தன் தொண்டர்களை இழக்கும் பட்சத்தில் திமுக அழிவை நோக்கிச் செல்வது மறுக்கமுடியாத உண்மையாகும்....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...