இன்றைய இரண்டு தகவலை சேகரிக்க தொடங்கனப்பா... ஒரு பெரிய தகவல் கெடச்சது... அதனால இன்னைக்கு ஒரே தகவல்.....
மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த டி.ஆர் பாலு சுங்க வரி விதிப்பில் தனியார் நிறுவனங்களிடம் கோடிக் கணக்கான ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு அந்நிறுவனங்களுக்கு சாதகமாக சுங்கவரி வசூல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்ததாக லாரி உரிமையாளர்கள் புகார் எழுப்பியுள்ளனர்.இந்த விவகாரத்தில் ரூ.40 ஆயிரம் கோடி வரை ஊழல் நடந்து இருக்கலாம் என்ற பகீர் தகவலையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
பாரத பிரதமராக வாஜ்பாயி இருந்த பொழுது நாட்டின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் தங்க நாற்கரச்சாலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.இந்த திட்டத்திற்கான நிதி டீசல் கொள்முதலில் ஒரு லிட்டருக்கு ரூ.2 என வரி வசூல் செய்யப்பட்டு செலவிடப்பட்டது.இந்நிலையில் பதவியேற்ற காங்கிரஸ் அரசாங்கம் டீசல் மீதான வரிவிதிப்பில் வசூலான ரூ.3 லட்சம் கோடியை இத்திட்டத்திற்கு பயன்படுத்தாமல். தனியார் நிறுவனங்களுக்கு இந்த திட்டத்தை தாரை வார்த்தது. இந்த திட்டத்தில் ரிலையன்ஸ், எல் & டி போன்ற மெஹா நிறுவனங்கள் காலடி பதித்தன. திமுக அமைச்சர் டி.ஆர் பாலு தரை வழி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது 1997 ம் ஆண்டு வகுக்கப்பட்ட சுங்கவரி வசூல் சட்டத்தை 2008 ம் ஆண்டு திருத்தி வெளியிட்டார்.இதனால் தனியார் நிறுவனங்கள் நான் கு வழி சாலை அமைக்கும் பணி முடிவடையாத நிலையில் சுங்கவரியை எண்ணம்போல் வசூலிக்க தொடங்கியுள்ளன.தனியார் நிறுவனங்களின் பகல் கொள்ளையால் அப்பாவி பொதுமக்கள் தான் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர்.கோவை-சென்னை தேசிய நாற்கர சாலை 539 கி.மீ தொலைவு உள்ளது. இந்த சாலையில் உள்ள தனியார் சுங்க சாவடிகளில் தினசரி ரூ.1.50 கோடி வசூல் செய்யப்படுகிறது ( இதுவே இவ்வளவு என்றால் நாடு முழுவதும் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்). மாதம் ரூ.45 கோடியும், வருடத்திற்கு ரூ.540 கோடியும் வசூலாவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தனியார் நிறுவனங்கள் சாலை அமைக்க செய்த முதலீடு வெறும் 200 கோடி மட்டுமே.கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்நிறுவனங்கள் கொள்ளையடித்த தொகை ரூ.2700 கோடி.இது அந்நிறுவனங்கள் முதலீடு செய்த தொகையை விட 15 மடங்கு அதிகம்.2008 ம் ஆண்டு சட்ட திருத்தத்தின் படி தனியார் நிறுவனங்களுக்கு 22 ஆண்டுகள் ஒப்பந்தம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் வாகனங்களின் எண்ணிக்கை 15 சதவீதம் உயரும். அப்படியானால் சுங்கவரி வசூலும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும்.இதனால் தனியார் நிறுவனங்களின் வருமானம். அடுத்த 22 ஆண்டுகளில் எவ்வளவு இருக்கும்..... கால்குலேட்டரில் போடமுடியாது,,,,,,,,,,,
தனியார் நிறுவனங்களின் ஏகபோக சுங்க வரி வசூலால் நேரடியாக பாதிப்படைந்துள்ள லாரி உரிமையாளர்கள் இந்த விவகாரத்தில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தியும் 1997 ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சுங்க வரி வசூல் சட்டத்தை மீண்டும் அமல்படுத்தவும் வலியுறுத்தியும் வரும் 18 ம் தேதி முதல் வேலை நிறுத்தமும் அறிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளதா? அப்படி என்றால் இந்த ஊழலும் வெளிச்சத்திற்கு வருமா?
No comments:
Post a Comment