1. முன் அறிவு★
"மற்றவர்களை விடக் குறைந்தது ஐந்து ஆண்டுக்கு பின் நிகழப்போகும் செயல்களை முன்னதாகவே கணித்துக் கூறுபவனே நல்ல மகன்"என்று எடுத்துக்காட்டுகிறான்,
அறிஞன் பாக்.
அறிஞன் பாக்.
"மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல்"
என்று அழகுபடச் சொல்லியிருக்கிறான் அதிவீரராம பாண்டியன் என்ற அருந்தமிழ்ப் புலவன், தனது வெற்றி வேற்கை என்னும் நீதி நூலிலே__முன் அறிவின் தேவையைக் குறித்து.
என்று அழகுபடச் சொல்லியிருக்கிறான் அதிவீரராம பாண்டியன் என்ற அருந்தமிழ்ப் புலவன், தனது வெற்றி வேற்கை என்னும் நீதி நூலிலே__முன் அறிவின் தேவையைக் குறித்து.
2. செய்வதில் உறுதி★★
ஒன்றைத் தொட்டுவிட்டால்,
உயிர் உள்ளளவும் அதைச் செயலில் நடத்தித்தான் ஆகவேண்டும்.
உயிர் உள்ளளவும் அதைச் செயலில் நடத்தித்தான் ஆகவேண்டும்.
தோல்வி ஏற்படுமோ என்று இடையிலே மனங்கலங்கி,
எடுத்த செயலை நாம் உதறி விடக்கூடாது.
எடுத்த செயலை நாம் உதறி விடக்கூடாது.
நாம் உறுதியைத் தளர விடாதிருந்தால்,
முறிவு ஏற்படுவது போலத் தோன்றினாலும்,
முடிவில் வெற்றி மிக உறுதி.
முறிவு ஏற்படுவது போலத் தோன்றினாலும்,
முடிவில் வெற்றி மிக உறுதி.
3.சொல்லில் வல்லமை★★★
சொல்லாடத் தெரிய வேண்டும்.
பிறரை நாம் வெல்ல நினைத்தால்,
பிறரை நாம் வெல்ல நினைத்தால்,
நமக்குச் சொல் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளுவன் சொல்லிக் காட்டுவதைப் பாருங்கள்.
கேட்டவர்களைக் கவரக்கூடியதாய் இருக்க வேண்டுமாம் அந்த நல்ல சொல்.
அதை கேளாதவர்களும் அப்படிப்பட்ட சொல்லா என்று பிறர் வாயிலாகக் கேள்விப்பட்டதும்,
அடுத்தமுறை கேட்கவேண்டும் என்று ஆவலை மிக வெளிப்படுத்தும் தன்மையுடையதாய் இருக்க வேண்டுமாம் அந்தச் சொல்!

4. சொன்னபடி நடக்க வைக்கும்திறமை ★★★
உள்ளத்தில் உண்மையும்,
வாக்கில் ஒளியும்,
செயலில் உறுதியும்,
சுட்டு விரலை அசைத்தால்,
சுற்றியுள்ளவர் ஆடிவிடும் திறமையும் நமக்கு ஒன்று கூடினால்,
நாம் சொன்னபடி நமக்கு எல்லாம் நடக்கும்.
எல்லோரும் நடப்பார்கள்.
வாக்கில் ஒளியும்,
செயலில் உறுதியும்,
சுட்டு விரலை அசைத்தால்,
சுற்றியுள்ளவர் ஆடிவிடும் திறமையும் நமக்கு ஒன்று கூடினால்,
நாம் சொன்னபடி நமக்கு எல்லாம் நடக்கும்.
எல்லோரும் நடப்பார்கள்.
5.தேவை ஏற்படும்பொழுது அடங்கிக் பணிதல்★★★★★
பணிந்து நடக்கத் தெரியாவிட்டால்,
பிறரைப் பணிய வைக்கவும் முடியாது.
உலகத்து தலைமை கொண்டாலும் சிலவேளைகளில் எவருக்கவது பணிய வேண்டியது வரும்.
பிறரைப் பணிய வைக்கவும் முடியாது.
உலகத்து தலைமை கொண்டாலும் சிலவேளைகளில் எவருக்கவது பணிய வேண்டியது வரும்.
"தாயின் பாதத்தடியில் சுவர்க்கம் இருக்கிறது"
என்கிறான் இஸ்லாமிய இறைவன்.
தாயின் பாதத்தில் பணியாத பிள்ளை உண்டா?
அந்தப் பணிவு வந்தவர்களுக்கு சுவர்க்கம் உண்டு என்று அறிவுறுத்துவதற்குத்தான்,
அந்தப் பொன்மொழியைப் பகர்ந்தான் அந்தப் பெரியோன்.
என்கிறான் இஸ்லாமிய இறைவன்.
தாயின் பாதத்தில் பணியாத பிள்ளை உண்டா?
அந்தப் பணிவு வந்தவர்களுக்கு சுவர்க்கம் உண்டு என்று அறிவுறுத்துவதற்குத்தான்,
அந்தப் பொன்மொழியைப் பகர்ந்தான் அந்தப் பெரியோன்.
"நுணுக்கமான கேள்வி அறிவு உடையவர்கள்,
விளங்கிய வாயினராய் பணிந்து புகழ் பெறுவர்"என்று நமக்குப் பணிவு பெறும் பயிற்சியைத் தருகிறான் பைந்தமிழ் வள்ளுவப் பெரியோன்.
விளங்கிய வாயினராய் பணிந்து புகழ் பெறுவர்"என்று நமக்குப் பணிவு பெறும் பயிற்சியைத் தருகிறான் பைந்தமிழ் வள்ளுவப் பெரியோன்.
6, நிருவாகத் திறமை பெறுதல் ★★★★★★
வாழ்வில் நாம் வெற்றி பெற,
நிருவாகத் திறமை பெற வேண்டியதை நாம் நீங்காத பண்பாகக் கொள்ளவேண்டும்.
நிருவாகத் திறமை பெற வேண்டியதை நாம் நீங்காத பண்பாகக் கொள்ளவேண்டும்.
அத்தகைய திறமையைக் பெற்றவர்கள் எத்தகைய எதிர்ப்பையும் கண்டு
ஏமாற மாட்டார்கள்.
இடிந்து போக மாட்டார்கள்,
குழம்ப மாட்டார்கள்,
கொண்ட குறிக்கோளை விடமாட்டார்கள்.
ஏமாற மாட்டார்கள்.
இடிந்து போக மாட்டார்கள்,
குழம்ப மாட்டார்கள்,
கொண்ட குறிக்கோளை விடமாட்டார்கள்.
சர்தார் வல்லபாய் படேல் அத்தகைய நிருவாகத் திறமைக் பெற்றிருந்ததால்தான்
அதிகாரமும்,ஆட்சி பீடமும் அவரை விட்டு அகலவில்லை.
அதிகாரமும்,ஆட்சி பீடமும் அவரை விட்டு அகலவில்லை.
ரஷ்ய நாட்டுத் தலைவர் லெனின்,
பெரும் நிருவாகத்திறமை நிறைந்து விளங்கினார்.
அதனால்தான், அவர் வாழ்நாள் முழுவதும் உலகத்து தலைமையைக் கொண்டு நின்றார்.
நாட்டு மக்களெல்லாம் வியந்து அவரைப் போற்றும்படியான செயல்களை அவர் செய்ததற்கு அவர் கொண்டிருந்த அறிய நிருவாகத் திறமைதானே காரணம்!

அனைவரும் நம்மைப் பாராட்ட இந்த ஆறு வழியைப் பெரியோர்கள் நமக்குச் சொல்லிவிட்டுத்தான் போயிருக்கிறார்கள்.
நாம் அதைக் கண்டுகொள்ளவில்லையே என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.
No comments:
Post a Comment