பொதுவாக இதயத்துடிப்பு நின்றுவிட்டால் ஒருவர் இறந்துவிட்டதாகக் கருதுகிறோம். அல்லது இரண்டு விதமான மரணம் குறித்து நாம் அறிவோம்.
1. இதயமும் நுரையீரலும் தத்தம் செயல்பாடுகளை நிறுத்திவிடுவது
2. மூளை தன் செயல்பாடுகளை முற்றிலும் நிறுத்திவிடுவது.
1. இதயமும் நுரையீரலும் தத்தம் செயல்பாடுகளை நிறுத்திவிடுவது
2. மூளை தன் செயல்பாடுகளை முற்றிலும் நிறுத்திவிடுவது.
ஆனால் மருத்துவம் மரணத்தினை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்துகின்றது.
1. Necrobiosis
2. Necrosis
3. Clinical Death
4. Brain Death
5. Somatic Death
2. Necrosis
3. Clinical Death
4. Brain Death
5. Somatic Death
1. Necrobiosis : உண்மையில் நேற்றிருந்த நாம் வேறு, இன்றிருக்கும் நாம் வேறு. ஒவ்வொரு நாளும் நாம் இறந்துகொண்டேயிருக்கின்றோம். ஆனால், பிறந்துகொண்டேயிருக்கின்றோம். எப்படி? தினமும், நமது உடலில் உள்ள செல்கள் (Cell) இறந்து புதிது புதிதான செல்கள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. இந்த Necrobiosis என்பது உயிரினத்தின் வாழ்க்கைச் சுழற்சியில் செல்களின் இறப்பைக் குறிக்கின்றது.
2. Necrosis : சட்டென்று ஒரே நேரத்தில் பல செல்கள் இறந்து விடுவது Necrosis எனப்படும். அதாவது நமது உடலின் ஒரு பகுதியோ அல்லது ஒரு உறுப்போ முற்றிலும் செயலிழந்துவிடுவது. இதனை infarction என்றும் மருத்துவத்தில் கூறுவார்கள். நமக்குத் தெரியும் நமது உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் உயிர்வளி அவசியமென்று. இது ஏதேனும் ஒரு காரணத்தினால் ஒரு பகுதியில் (குருதியோட்டமின்றி) தடைபடுமாயின் அடுத்தபகுதியில் உயிர்வளி கிடைக்காமல் அங்குள்ள திசுக்கள் இறந்துவிடும். மேலும், மருத்துவம் பயின்றோரிடம் மேல்விளக்கம் கேட்டுத் தெளிந்துகொள்வோம்.
3. Clinical Death : சுவாசமில்லை, குருதியோட்டமில்லை, மூளைச்செயல்பாடுகள் இல்லை என்றால் அதனை Clinical Death என்று கூறலாம். ஆனால் இதுவே முழு மரணம் எனக் கூற இயலாது. மரணத்தின் தொடக்க நிலை என்று வேண்டுமானால் கூறலாம். ஏனெனில் இந்நிலைக்குப் பிறகு, நின்றுபோன மேற்சொன்ன நிலைகளனைத்தும் திரும்ப இயங்கக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. நிகழ்ந்த சம்பவங்களும் சான்றுகளோடு உண்டு. உதாரணத்திற்கு Cardiac Arrest (நாம் Heart attack என்று தமிழில் சொல்வோமில்லையா:)) நிலையில் இதயம் தன் செயல்பாடை நிறுத்திக்கொள்ளும். இது ஒரு நான்கு நிமிடங்கள் நீடிக்கலாம். அதற்குள் அதனை Cardiopulmonary Resuscitation (CPR) என்ற முறையில் செயற்கைச் சுவாசமூட்டியும், செயற்கைமுறையில் இதயத்தைச் செயல்படத் தூண்டியும் செயல்படவைக்க வாய்ப்பிருக்கின்றது.
ஆனால், Clinical Death நிகழ்ந்து சிறிது நிமிடங்கள் கழித்து இறப்பு நிலைப்பட்டுவிடும். ஏனெனில், இறப்பு இந்நிலையிலிருந்து அடுத்த நிலையான Brain Deathற்குச் செல்கின்றது.
ஆனால், Clinical Death நிகழ்ந்து சிறிது நிமிடங்கள் கழித்து இறப்பு நிலைப்பட்டுவிடும். ஏனெனில், இறப்பு இந்நிலையிலிருந்து அடுத்த நிலையான Brain Deathற்குச் செல்கின்றது.
4. Brain Death : நமது மூளையானது உயிர்வளியோட்டமின்றி 3லிருந்து 7 நிமிடங்கள் வரை ஓரளவிற்குத் தாக்குப்பிடிக்கும். இன்றிருக்கும் மருத்துவ வளர்ச்சி நிலையில் இதற்குப்பின் ஒருவரை மரணத்திலிருந்து மீட்டு வர இயலாது என்றே தோன்றுகின்றது. ஏனெனில், மூளைச்சாவு ஏற்பட்டவுடன் மற்ற உறுப்புக்களுக்குத் தெரியாது தாம் எப்படி இயங்கவேண்டுமென்று.
5. Somatic Death : இந்நிலையையே நிச்சயமான இறப்புநிலை எனக் கூறலாம். அதாவது Clinical Death மற்றும் Brain Death இரண்டின் கூட்டு. இரண்டும் ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்ந்துவிட்டால் இறப்பு என உறுதிப்படுத்தலாம். இன்றிருக்கும் விஞ்ஞான வளர்ச்சியில், மூளைச்சாவு ஏற்பட்டும் செயற்கை முறையில் சுவாசமும், குருதியோட்டமும் அளித்து உடலுறுப்புக்களைச் செயல்பாட்டில் வைக்க முடிகின்றது. எப்பொழுது இச்செயற்கை முறை நிறுத்தப்படுகின்றதோ அப்பொழுது Somatic Death நிகழ்ந்துவிடும். இந்நிலையே உறுதியான இறப்புநிலை........
No comments:
Post a Comment