Sunday, October 23, 2016

விளக்கேற்றும் சடங்குக்கு பின்னணி ..

நமது இந்து மதத்தில் கடைபிடிக்கப் படும் சடங்குகளுக்கும் அதில் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கும் எதாவது ஒரு தத்துவம் பின்னணியாக இருக்கும் இந்த விளக்கேற்றும் சடங்குக்கு பின்னணி எது என்று மேலே பார்த்தோம் இந்த சடங்கில் பயன் படுத்தப் படும் குத்து விளக்கு என்ற பொருளுக்கும் ஆழ்ந்த கருத்தமைந்த பின்னணி உள்ளது குத்து விளக்கின் அடிப்பாகம் மலர்ந்த தாமரை பூவை போல அகன்று வட்டமாக இருப்பதனால் இது திருப்பாற் கடலில் பாம்பணை மேல் பள்ளிகொண்டுள்ள திருமாலின் திருநாபியில் முளைத்த தாமரை பூவில் அமர்ந்திருக்கும் படைப்பு கடவுளான பிரம்ம தேவனை குறிக்கிறது
அடிப்பாகத்தில் இருந்து மேல் நோக்கி வளருகின்ற தண்டு பாகம் ஓங்கி வளர்ந்து நிற்பதனால் ஈரடியால் பூமியையும் ஆகசத்தையும் அளந்த திருவிக்கிரமனான மகா விஷ்ணுவை குறிக்கிறது அதற்கு மேல் இருக்கின்ற அகல் விளக்கு பாகம் என்ற விளக்கின் மேல் பகுதி குழி விழுந்து எண்ணெயை உள் வாங்கி கொள்வதனால் கங்கையை தலைபாகத்தில் அடக்கிய மகேஸ்வரனை குறிப்பதாகும் மேல் பகுதியில் திரி ஏற்றுவதற்காக உள்ள ஐந்து முகங்களும் சிவ பெருமானையே அடையாளப் படுத்துவதாகும் .குத்து விளக்கின் மேல் பகுதியில் உள்ள காம்பு பகுதி கும்ப கலசம் போல இருக்கும் இது உருவமாகவும் அருவமாகவும் உள்ள சதாசிவ தத்துவத்தை குறிப்பதாகும் இந்த விளக்கில் இடுகின்ற எண்ணெய் அல்லது நெய் உலக முழுவதும் பரவியுள்ள நாத பிரம்மத்தை குறியீடாக காட்ட வல்லதாகும் வெள்ளை நிற பஞ்சு திரி அன்னை சரஸ்வதி தேவியையும் அதில் பிரகாசிக்கும் ஒளி ஞானத்தையும் சுடர் மகா லட்சுமியையும் அதன் சூடு ருத்திரனின் தேவியான பராசக்தியையும் குறிப்பதாகும்
இது தவிர விளக்கில் உள்ள கலை நயம் மிக்க சித்திர வேலைப்பாடுகள் கணபதி முருகன் ராமன் கிருஷ்ணன் போன்றோர்களை குறிப்பதாகும் சுருக்கமாக சொல்வது என்றால் காமதேனு என்ற பசுவின் உடலில் சகல தேவதைகளும் வசிப்பது போல திருவிளக்கான குத்து விளக்கிலும் சர்வ தேவர்களும் தேவதைகளும் காட்சி தந்து தத்துவ வடிவமாக குடி கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்லலாம் . திசையை மட்டும் சாஸ்திரம் தீர்மானிக்க வில்லை திபம் ஏற்றுவதற்கு பயன் படுத்தும் திரியில் கூட கிடைக்கும் பலாபலன்களை சாஸ்திரம் விவரிக்கிறது வெள்ளை நிற துணியை திரியாக போட்டால் கல்வி வளரும் என்றும் மஞ்சள் நிற துணியை திரியாக பயன் படுத்தினால் மங்களம் நிகழும் என்றும் வீட்டிற்குள் தீய சக்திகளின் நடமாட்டம் பேய் பிசாசுகளின் தொல்லை ஏவல் பில்லி சூனியத்தால் பாதிப்பு போன்றவைகள் அண்டாமல் இருக்க எருக்கம் பஞ்சு திரி உதவும் என்றும் பஞ்சு திரி சகல செளபாக்கியம் தரும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது மேலும் செம்மை நிற திரியால் செல்வம் பெருகும் வறுமை ஒழியும் என்றும் அறிவுறுத்தப் படுகிறது
இதே போல மகா லஷ்மியின் அனுக்கிரகம் பெறுவதற்கு நெய் தீபம் ஏற்றினால் சுகத்தோடு அருளும் கிடைக்கும் என்றும் நல்லெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றினால் பீடைகள் அகன்று ஸ்ரீ மத் நாராயணனின் அருள் கிடைக்கும் என்றும் இலுப்பை எண்ணெய் பயன் படுத்தினால் ருத்ராதி தேவதைகளின் அனுக்கிரகம் வாய்க்கும் என்றும் தேங்காய் எண்ணெய் தீபம் கணபதியின் அருளை பெற்று தரும் என்றும் வேப்ப எண்ணெய் தீபம் ஆரோக்கியம் தரும் என்றும் ஜோதிட சாஸ்திரத்தின் பரிகார நூல்கள் தெளிவாக சொல்கிறது
தீபம் ஏற்ற பயன் படுத்தும் விளக்கின் வகையில் கூட பல பலன்கள் இருக்கின்றன மண்ணால் ஆன விளக்கில் தீபம் ஏற்றினால் பீடை விலகும் வெள்ளி விளக்கில் தீபம் ஏற்றினால் திருமகளின் அருள் கிடைக்கும் பஞ்சலோக விளக்கில் தீபம் ஏற்றினால் தேவதை வசியம் ஏற்படும் வெண்கல விளக்கில் தீபம் ஏற்றினால் ஆரோக்கியம் உண்டாகும் இரும்பு விளக்கில் தீபம் ஏற்றினால் சனிகிரக தோஷம் விலகும் என்றும் மகிழ்ச்சியுடன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...