என் மனம் தொடர்ந்து அடுத்தவர்களை எடை போட்டுக் கொண்டே இருக்கிறது.முக்கியமில்லாத சின்னச்சின்ன விஷயங்களையே என் மனம் நாடுகிறது?
அடுத்தவரை எடை போட வேண்டும் என்று தோன்றும்போது நீங்கள் சுவாசிக்கும் முறையை மாற்றுங்கள்.
உடனே உங்களுக்குள் ஒரு மாற்றம் உண்டாகும்.அடுத்தவர்களை மதிப்பீடு செய்வது மறைந்துவிடும்.
மனதில் இருக்கும் பலநாள் பழக்கத்தை மாற்ற விரும்பினால் நன்றாகச் சுவாசிப்பதுதான் சிறந்த வழி.மனதின் எல்லா பழக்கவழக்கங்களும் சுவாசிக்கும் முறையை ஒட்டியே இருக்கிறது.சுவாசிக்கும் முறையை மாற்றுங்கள்.மனம் உடனே மாறிவிடும்.
அடுத்தவரை மதிப்பீடு செய்யும் உந்துதல் வரும்போது உடனே மூச்சை வெளியே விடுங்கள்.
உங்கள் தீர்ப்பையும் அதனுடன் சேர்த்து வெளியே எறிந்து விடுவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
மூச்சுக்காற்றை தீர்க்கமாக வெளியே விடுங்கள்.உங்கள் வயிறை எக்கிக்கொண்டு வேகமாக சுவாசத்தை வெளியே விடுங்கள்.
உங்கள் மதிப்பீடுகளும் அந்தக் காற்றுடன் வெளியே போவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
அதன்பின் நல்ல காற்றை இரண்டு மூன்று முறை தீர்க்கமாக உள்ளே இழுங்கள். என்ன நடக்கிறது என்று பாருங்கள்.
உங்களுக்குள் ஒரு புத்துணர்வு ஏற்படும்.பழைய பழக்கவழக்கங்கள் உங்களை ஆட்கொள்ளாது.
சுவாசத்தை வெளியே விடுவதுதான் இந்தப் பயிற்சியின் ஆரம்பம்.உள்ளே இழுப்பது அல்ல.
ஒரு நல்ல பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்றால் முதலில் சுவாசத்தை உள்ளே இழுத்துப் பயிற்சியை தொடக்க வேண்டும்.
ஒரு கெட்ட பழக்கத்தை விட வேண்டுமென்றால் சுவாசத்தை வெளியே விட்டுப் பயிற்சியைத் தொடக்க வேண்டும்.
இதனால் மனதில் உடனே மாற்றங்கள் வருவதைப் பார்ப்பீர்கள்.இந்தப் பயிற்சியை எல்லாப் பழக்கங்களுக்கும் செய்யலாம்.
ஆன்மீக மாற்றத்திற்கு இது ஒரு வலிமையான கருவி.முயற்சி செய்துதான் பாருங்களேன்.
No comments:
Post a Comment