Wednesday, October 12, 2016

ஜீரண மண்டல கோளாறுகளுக்கு ஏலக்காய் பலன் தரும்.

சிறுநீரக மண்டலம் செயல்பட :
ஏலக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால், நச்சுக்களை சிறுநீரகம் மூலமாக வெளியேற்றிவிடும். மேலும், உடலில் இருக்கும் அதிகப்படியான உப்பு, நீர், மற்றும் கிருமிகளை வெளியேற்றும். சிறு நீரகப்பை, சிறுநீரகம், சிறுநீரகக் குழாய் ஆகியவற்றை சுத்தமாக்கும்.
மன அழுத்தம் :
ஏலக்காய் கலந்த தேநீர் குடிப்பதால் மன அழுத்தத்திலிருந்து எளிதில் விடுபடலாம் என்று மருத்துவத்துறையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
புற்று நோயை தடுக்கும் :
ஏலக்காயை தொடர்ந்து உட்கொள்ளும்போது புற்று நோய் செல்கள் உடலில் உருவாவது தடுக்கப்படுகிறது.
இரத்த உறைதல் ;
இதயத்தில் ரத்தம் உறையும் அபாயத்தை ஏலக்காய் தடுக்கும் ஆற்றல் கொண்டுள்ளது.
தலைசுற்றல் :
வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு சில ஏலக்காய்களை தட்டி, அரை டம்ளர் நீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சவும். அதில் சிறிது பனை வெல்லம் போட்டு வெதுவெதுப்பாக குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும்.
கால் பாதம்
உலகில் அதிகம் பேரை கொல்லும் நான்கவது வியாதி இதுவாகும். இன்சுலின் ஹோர்மோன் சுரப்பு குறைவாதால் உடம்பின் ஏற்படுத்தும் மாற்றங்களே சர்க்கரை வியாதி. இது பொதுவாகக் கட்டுப்பாடு இல்லாத உணவு பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சியின்மை, மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றம் (life style changes) போன்ற முக்கிய காரணங்களால் மனிதர்களைப் பாதிக்கிறது. சர்க்கரை நோய் மனிதனின் உடல் உறுப்புக்கள் தலை முதல் பாதம் வரை அனைத்துப் பகுதிகளையும் பாதிக்கிறது. இதில் கால் பாதத்தில் ஏற்படுத்தும் பாதிப்புக்கள் கடைசியில் காலை இழக்கும் அளவுக்கு அபாயத்தில் கொண்டு போய் விடுகிறது.
இதைத் தமிழில் சிலர் இனிப்பு நீர் வியாதி என்றும் அழைக்கின்றனர். கால் பாதம் எப்படி பாதிக்கப்படுகிறது என்று இந்தக் கட்டுரையில் சிறிது விரிவாகப் பார்க்கலாம். முன்பு சொன்னது போல உடம்பின் அனைத்துப் பகுதிகளையும் பாதிக்கும் சர்க்கரை நோய் உடம்பில் உள்ள கால் பகுதியில் உள்ள நரம்புகளையும், ரத்தக் குழாய்களையும் மிக மிக மோசமாகத் தாக்குவதால் கால்கள் அதிகமாக பாதிப்படைகிறது.
உடம்பில் உள்ள அனைத்து நரம்புகளும் முக்கியமாக இரண்டு வேலையை செய்ய மூளையால் பணிக்கப்படுகின்றன. இதில் ஒரு முக்கியப் பணி தொடு உணர்வுகளைக் கடத்தும் பணி. இந்த நோய் நரம்புகள் செய்யும் இந்த வேலையை முற்றிலுமாக துண்டிக்கிறது. நரம்புகளின் அன்றாட செய்யும் பணிகளை பாதித்து அதாவது நீங்கள் நடக்கும் போதோ, பேருந்தில் பயணிக்கும் போதோ, கால் உணர்ச்சிகள் இன்றியமையாதது. நரம்புகள் செயல் இழப்பதால், கால் உணர்வுகள் பாதிக்கப்படுவதால் நாம் நடக்கும் போது சாலையிலோ அல்லது வீட்டிலோ கால்கள் உராய்வினால் தோலில் ஏற்படும் சிறு காயங்கள் மிகப் பெரிய புண்ணாக உருமாறி கால்களைத் துண்டிக்கும் நிலைக்குக் கொண்டு செல்கிறது.
ரத்தக் குழாயில் ஏற்படும் பாதிப்பால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு ரத்தம் தேங்கிப்போய் சிறு புண்கள் பின் புரையோட ஆரம்பித்து செல்களை செயல் இழக்கச் செய்து அதை இறக்கச் செய்கிறது. இந்த நிலையை மருத்துவர்கள் கால்கள் அழுகிய நிலை (நெக்ரோசிஸ்) என்கின்றனர். கடைசியில் வேறுவழி இல்லாமல் மருத்துவர்கள் நோயாளியின் கால்களை எடுக்கும் (amputation) நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதில் இருந்து எப்படி சர்க்கரை வியாதிக்காரர்கள் அழகிய பாதங்களை பாதுகாப்பது என்று சில வழிமுறைகளை மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
நம் கால் பாதம் குட்டியான 5 விரல்களையும் அதனுள் 26 எலும்புகளையும், 33 மூட்டுக்களையும், சுமாராக 100 தசைகளையும், 250,000 வேர்வை சுரப்பிகளையும் உள்ளடிக்கியது. ஒரு மனிதன் சுமாராகத் தன் வாழ்நாளில் 115,000 மைல்கள் நடக்கின்றான். நடப்பது ஒரு மிக சிறந்த உடற்பயிற்சி ஆகும். இது பாதங்களுக்கும், உடம்பிற்கும், ரத்த ஓட்டத்திற்கும் நன்மை பயக்கிறது. உலகில் ஒவ்வொரு வருடமும் சுமார் 56,000 பேர் சரியான பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ளாமல் இந்த நோயால் கால்களை இழக்கின்றனர். இப்படிப்பட்ட உன்னதக் குணங்கள் கொண்ட பாதம் எப்படி பாதுகாக்கப்பட வேண்டும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் அழகிய பாதங்களை எப்படி பாதுகாப்பது என்ற சில வழிமுறைகள் இங்கே தரப்பட்டுள்ளன.
கால் பாதம் காக்கும் பத்து சிறந்த வழி முறைகள்
எங்கு சென்றாலும் செருப்பு அணிவதை கடமையாக கொள்ளலாமே. செருப்பு இல்லாமல் நடப்பதை அறவே தவிருங்கள். அதாவது மிக மிக முக்கியம் கரடு முரடான சாலைகளில் செல்லும் போது காலணி முக்கியம், அப்படி அணியவில்லை என்றால் சாலைகளில் உள்ள ஜல்லி கற்கள், உடைந்த கண்ணாடி துகள்கள், முற்கள் உங்கள் பாதங்களில் எளிதாகக் காயத்தை ஏற்படுத்தும்.
வாராத்திற்கு ஒரு முறை உங்கள் நகங்களை வெட்டிப் பாதங்களை மிகத் தூய்மையாகவும், நகங்களின் கீழ்ப்பகுதியை அழுக்கு அண்டாமலும் பார்த்து கொள்வது உங்களின் ஒரு முக்கியக் கடமையாக கொள்ளுங்கள். அப்படி செய்யவில்லை என்றால் நீங்கள் புண்ணை உருவாகத் துணை செய்கிறீர்கள் எனலாம்.
மிக நீண்டதாக வளரும் நகங்கள் உள்நோக்கி வளரலாம் மற்றும் உங்கள் பாதங்களை பதம் பார்த்துக் காயங்களை ஏற்படுத்தும். நகங்களை வெட்டும் முன் கால்களை சிறிது தண்ணிரில் கழுவி விட்டு சிறுது நேரம் கழித்து வெட்டும் போது நகங்கள் காயங்கள் ஏதும் ஏற்படாமல் எளிதாகத் துண்டிக்கலாம்.
உங்கள் பாதங்களின் பின் பகுதி உங்களால் எளிதாகப் பார்க்க முடியாததால் முகம் பார்க்கும் கண்ணாடி கொண்டு புண்கள், கொப்புளங்கள், தோலின் சிவந்த நிறம் ஏதும் உள்ளதா என்று அடிக்கடி பரிசோதியுங்கள். இது ஒரு வருமுன் காக்கும் முறையாகும்.
படுக்கைக்கு செல்லும் முன்போ அல்லது காலை படுக்கையில் இருந்து எழுந்ததும் சிறிது நேரம் உங்கள் பாதங்களை மிதமான வெந்நீரில் கழுவி உங்களின் பாதத்திற்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துங்கள்.
நீங்கள் நடக்கும் போது பாதம் உங்கள் உடல் எடையின் பெரும் பகுதியை தாங்கிக் கொள்கிறது. அதனால் உங்கள் கால்களுக்கும், பூமிக்கும் இடையே ஏற்படும் உராய்வு விசை உங்கள் பாதங்களில் வெப்பத்தை ஏற்படுத்தும். இதை தவிர்க்க MCR (MICRO CELLULAR RUBBER) என்ற ஒரு வகை ரப்பரால் செய்யப்பட்ட காலணிகளை வாங்கி அணிவது ஒரு நல்ல வழியாகும். இது அனைத்து செருப்புக் கடைகளிலும் விற்பனைக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் காலணி (SHOE) அணிபவரா, அப்படியானால் சாயம் கலந்த செயற்கை நூலினால் செய்யப்பட்ட கால் உறைகளைத் தவிர்த்து, காட்டன் கால் உறைகளை (COTTON SHOCKS) உபயோகியுங்கள். காலனிகளை அணியும் முன் உள்ளே ஏதும் கூரான குப்பைகள் இருக்கிறதா என்று பரிசோதித்த பின் அணியுங்கள்.
நல்ல காற்றோட்டம் உள்ள செருப்புக்களையும், காலணிகளையும் அணியுங்கள், இது உங்களின் கால்களில் புண்களை ஏற்படுத்தாமல் தவிர்க்க ஒரு சிறந்த வழி முறையாகும்.
அப்படி புண்கள் ஏற்பட்டால் உடனே உங்கள் மருத்துவரை கலந்து ஆலோசிப்பதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படும் மோசமான விளைவுகளை தவிர்க்கலாம்.
உங்களின் சர்க்கரை அளவை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது மிக முக்கியம்.
வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்!
வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்!
தேவலோகத்தைச் சேர்ந்த ஐந்து தெய்வீக விருட்சங்களில் ஒன்று வில்வம். பாதிரி, வன்னி, மா, மந்தாரை ஆகிய ஐந்து விருட்சங்களைப் பஞ்ச விருட்சங்கள் என்று போற்றுகின்றன புராணங்கள். இந்த ஐந்து மரங்களில் ஒன்றான வில்வத்தை நாம் தொட்டாலே, அது நம்மைப் புனிதப்படுத்தும் தன்மை கொண்டது. இதை ஸ்பரிசித்து உட்கொண்டாலே மோட்சம் கிட்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
வில்வம் சிவபெருமானின் அம்சம் என்பது மட்டுமல்ல, முருகனுக்கும் மிகவும் பிரியமானது. முருகனின் அர்ச்சனை நாமங்களில், 'வில்வ பிரியா' என்பதும் ஒன்று.
பெரும்பாலான சிவாலயங்களில் வில்வ விருட்சமே தலவிருட்சமாக அமைந்திருக்கிறது. ஒரே ஒரு வில்வ இலையை எடுத்து பக்தி சிரத்தையுடன் உட்கொள்ள, பிறவியின் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகிவிடும்.
திரிதளஞ்ச; திரிகுணாகாரம்;
திரிநேத்ரஞ்ச; திரியாயுதம்;
திரிஜன்ம பாப சம்ஹாரம்
ஏக பில்வம் சிவார்ப்பணம்
என்ற மந்திரத்தை உச்சரித்து உண்பது பெரியோர்களின் வழக்கம்.
வில்வத்தின் விஞ்ஞான குணம்:
ஆங்கிலத்தில் வில்வத்துக்கு ஆங்கில பெயர் Aegle marmelos. ஒரு தேவதையைப் போல் அதீத சக்திகள் வாய்ந்தது இந்த மரம். வில்வ இலைகளில் சுழலும் எலெக்ட்ரான், தீட்சண்யமான அதிர்வலைகளை வெளியிட வல்லவை. வில்வ இலைகளை, குறைந்தது பன்னிரெண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து, அந்த நீரைப் பருகுவதால் உடலின் ஒவ்வோர் அணுவும் புத்துயிரூட்டப்படுகிறது.
வில்வ இலை நீருக்குள் செலுத்திய மின்காந்த அலைகள், நம் உடலுக்குள் புகுந்து செயல்படுவதே இதற்குக் காரணம். செப்புக்குவளையில் வைத்த நீரில் வில்வ இலையை ஊறப் போடும்போது, அதிர்வலைகளின் செயல்வேகம் மேலும் அதிகரிக்கிறது.
நிலத்தில் ஆழமாக வேரோடும் வில்வமரத்தின் வேர்கள், மண்ணைக் கவ்விப் பற்றி நிலச்சரிவு ஏற்படாமல் காக்கின்றன. காலம்காலமாக மண்ணின் இறுக்கத்துக்குப் பெரிதும் உதவி உள்ளன வில்வ வனங்கள்.
மருத்துவ குணம்:
வில்வமரத்தின் வேர் முதல் நுனி வரை அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன் கொண்டவை. வில்வ இலைகள் ஊறவைக்கப்பட்ட நீரில் குளித்து, சோப்பு போடாமல் பாசிப்பருப்புப் பொடி தேய்த்துக் கொண்டால், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாது. வில்வ இலைத் தளிர்களை லேசாக வதக்கி, இமைகளில் ஒத்தடம் கொடுக்க, கண் தொடர்பான நோய்கள் நீங்கும்.
பெண்களுக்கு மாதவிலக்கின்போது அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டால்..வில்வ இலையை அரைத்து சிறிதளவு உண்ணக் கொடுத்தால் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும். வில்வ வேரை இடித்து ஒரு குவளை நீரில் கொதிக்கவைத்து, அதை காய்ச்சிய பசும்பாலில் சேர்த்து தினமும் உண்ணும் ஆண்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...