நல்ல ஆழ்ந்த நிம்மதியான உறக்கம் நம்மை மிக சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் தெளிவாகவும் செயல்படவைக்கும்....
ஒருநாள் உறக்கம் பாதித்தாலும்..சரிவர உறங்காமல் போனாலும்உடலும் மனமும் சோர்வடைந்து போகும்.. அதுமட்டுமல்ல அன்றைய தினம் செய்யவேண்டிய கடமைகள் அனைத்தும் பாதிக்கப்படும்... கோபம்..எரிச்சல் உணர்வு.. பிறர் மீது எரிந்து விழுதல்..ஒருவித மயக்க நிலை ஏற்பட்டு நிம்மதி இழக்கச்செய்யும்...
காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித காரணம் உறக்கம் பாதித்ததற்கு...
சிலருக்கோ எந்தவித காரணமுமே இல்லை ஆனா உறங்க முடியவில்லை என்று கருத்து இருக்கும்...அது அப்படி அல்ல.. கட்டாயம் காரணமிருக்கும் ஆழ்மனதில் பதிந்த சில காரணங்கள் உங்களை உறங்கவிடாமல் செய்யும்...
சில சமயங்களில் சரிவர உணவு உட்கொள்ளாமை... ஒவ்வாமையான உணவுகள்... அதிகபடியான ஓய்வு... எந்த வேலையும் செய்யாமல் சோம்பி இருத்தல்.. சில சமயங்களில் உடலை பாதித்திருக்கும் சிலவகையான நோய்கள்...
பெரும்பாலும் உறக்கத்தை தொலைப்பவர்கள்.. நிகழ்காலத்த்தில் அவர்கள் அறிந்த பாதிப்புகள்.. ஏமாற்றங்கள்.. குற்றம் ..குறைகள் பய உணர்வு... எதிர்காலம் குடும்பம் பற்றிய பயம்... அதிகபடியான மனஉளைச்சல் இவைகள்தாம்...
இங்கே பிரச்சனைகள் இன்றி இருப்பவர் என்று எவரையும் கைகாட்டிவிடமுடியாது.. யாருமே எதாவது ஒரு பிரச்சனையோடுதான் இருக்கின்றனர்
காரணம் எதுவாக இருப்பினும்.... நிம்மதியான உறக்கம் கொண்டுவிட்டால்போதும்... கொஞ்சம் புத்துணர்வோடு எதனையும் எதிர்கொள்ளமுடியும்.... சமாளிக்கமுடியும்.. சிறந்த சிந்தனைகள் தோன்றும்...
அந்த உறக்கம் நம் கையிலேயேதான் இருக்கின்றது... சில பராமரிப்பு முறைகள்... மனதை ஒருமுகபடுத்துதல்... உடலையும் மனதையும் புத்துணர்வாக்கிகொள்ளல் மூலம் நன்றாக உறங்கிவிட்டோமானால்..போதும்
வாழ்வில் எல்லாவற்றையுமே சமாளித்து வெற்றியடையலாம்
முயற்சித்து பாருங்களேன்....
No comments:
Post a Comment