Sunday, October 16, 2016

நமது ஏக்கங்களைத் தீர்க்கும் பைரவர் வழிபாடுகள்!!!

பைரவ வழிபாடு செய்ய முடிவெடுத்துவிட்டால்,அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்த வேண்டும்;மேலும் எந்த நோக்கத்துக்காக வழிபாடு செய்கிறோம் என்பதை எவரிடமும் சொல்லாமலிப்பதும் அவசியம் ஆகும்.சொன்னால் அந்த வழிபாட்டு முறையை தொடர்ந்து செய்ய முடியாமல் போய்விடும்.அந்த அளவுக்கு பொறாமை இன்று தமிழ்நாடெங்கும் பரவியிருக்கிறது.குடும்பத்தோடு அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டால்,100% பலன்கள் விரைவாக கிடைக்கும்.யார் வழிபாடு செய்கிறார்களோ,அவர் மட்டும் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினால் 60% பலன்களே கிடைக்கும்.

நமது குழந்தையின் படிப்பில் மந்தத்தன்மை நீங்கிட:

புதன் கிழமை அன்று காலை 6 முதல் 7 மணிக்குள் அல்லது மதியம் 1 முதல் 2 மணிக்குள் அல்லது இரவு 8 முதல் 9 மணிக்குள் நமது ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்துக்கு பின்வரும் பொருட்களோடு செல்ல வேண்டும்.
1.மரிக்கொழுந்து மாலை(வேறு எந்த பூவும் இருக்கக் கூடாது)
2.புனுகு
3.பாசிப்பருப்பு கலந்த சாதம்(வீட்டில் சமைத்திருக்க வேண்டும்)
4.பாசிப்பருப்பு கலந்த பாயாசம்

இவைகளில் பூசாரியிடம் மரிக்கொழுந்து மாலையை பைரவருக்கு அணியச் சொல்லி,கொடுக்க வேண்டும்.நாம் கொண்டு வந்திருக்கும் பாத்திரத்தை பைரவரின் சன்னதியில் வைக்க வேண்டும்.(இவைகளில் பாசிப்பருப்பு சாதமும்,பாசிப்பருப்பு பாயாசமும் தனித்தனி பாத்திரங்களில் இருக்க வேண்டும்)நமது (படிப்பு சுமாராக இருக்கும்) குழந்தையின் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும்.பிறகு,அங்கு வந்திருக்கும் பக்தர்களுக்கு இந்த சாதத்தையும்,பாயாசத்தையும் பாதி விநியோகிக்க வேண்டும்;மீதியை நமது வீட்டுக்கு எடுத்துச் சென்று,நமது குழந்தைக்குத் தர வேண்டும்.நாமும் சாப்பிடலாம்.

வழக்குகளில் வெற்றி பெற:

சனிப்பிரதோஷம் வரும் நாட்களில் பிரதோஷ நேரத்திற்குள் தயிர்ச்சாதம் நமது வீட்டில் தயார் செய்து அருகில் இருக்கும் சிவாலயத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.சனிப்பிரதோஷம் முடிந்ததும் (மாலை 6 மணி முதல் 7 மணிக்குள்) அங்கிருக்கும் காலபைரவருக்கு தயிர்ச்சாதத்தை படைக்க வேண்டும்;பிறகு நம்முடைய பெயருக்கு(யாருக்கு வழக்கு இருக்கிறதோ அவர் பெயருக்கு) அர்ச்சனை செய்ய வேண்டும்.பிறகு அவருடைய சன்னதியில் பைரவர் 108 போற்றியை வடக்கு நோக்கி அமர்ந்து(தரையில் தான்) மனதுக்குள் ஜபிக்க வேண்டும்.பிறகு,அங்கே வந்திருக்கும் பக்தர்களுக்கு தயிர்ச்சாதத்தை விநியோகிக்க வேண்டும்.

கணவன் மனைவி பிரச்னைகள் தீர:

புதன் கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை காலை 6 முதல் 7 மணிக்குள் அல்லது மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள் அல்லது இரவு 8 மணி முதல் 9 மணிக்குள் இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும்.இந்த இரண்டு கிழமைகளும் செய்யக் கூடாது.ஏதாவது ஒரு கிழமையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, 8 வாரங்கள் இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும்.

நமது ஊரில் இருக்கும் சிவாலயத்தில் உள்ள காலபைரவருக்கு வில்வமாலை அணிவிக்க வேண்டும்.நமது பெயர் மற்றும் நமது வாழ்க்கைத்துணை(கணவன் எனில் மனைவி, மனைவி எனில் கணவன்)பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்;அர்ச்சனை செய்தபின்னர்,பைரவர் 108 போற்றி அல்லது பைரவர் 1008 போற்றியை அவரது சன்னதியில் அமர்ந்து கொண்டு ஜபிக்க வேண்டும்.(வாய்விட்டுச் சொல்லக்கூடாது)



ஸர்ப்ப தோஷம் விலக:

ஒருவருடைய பிறந்த ஜாதகத்தில் லக்னம் அல்லது 2 ஆம் இடத்தில் ராகு அல்லது கேது நின்றால் அது ஸர்ப்ப தோஷம் ஆகும்.வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணிக்குள் நமது ஊரில் இருக்கும் சிவாலயத்தில் கால பைரவருக்கு பாலபிஷேகம் செய்ய வேண்டும்;புனுகு பூச வேண்டும்;நாகலிங்கப்பூமாலை அவருக்கு சார்த்த வேண்டும்;பால் பாயாசம்,பால் சாதம் இவைகளை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும்.நமது பெயருக்கு(யாருக்கு ஸர்ப்ப தோஷம் இருக்கிறதோ,அவர் பெயருக்கு) அர்ச்சனை செய்ய வேண்டும்;அதன்பிறகு,கால பைரவர் சன்னதியின் முன்பாக அமர்ந்து கொண்டு காலபைரவர் 108 போற்றி அல்லது காலபைரவர் 1008 போற்றி அல்லது காலபைரவர் அஷ்டோத்திரத்தை மனதுக்குள் ஒருமுறை ஜபிக்க வேண்டும்.பிறகு நேராக நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இப்படி தொடர்ந்து 8 வெள்ளிக்கிழமைகளுக்கு வழிபாடு செய்ய வேண்டும்.
லக்னம் அல்லது இரண்டாமிடத்தில் ராகு அல்லது கேது இருந்து ராகு மஹாதிசை அல்லது கேது மஹாதிசை வந்தால்,அந்த திசை முழுவதும் வாரம் தவறாமல் இந்த வழிபாட்டைச் செய்து வர வேண்டும்.இந்த திசை முழுவதுமே அசைவம்,மது,போதைப்பொருட்களைகைவிட வேண்டும்.அவ்வாறு கைவிட்டு இந்த வழிபாட்டைச் செய்து வந்தால்,ராகு மற்றும் கேதுவால் ஏற்பட இருக்கும் அவமானங்கள் படிப்படியாக விலகிவிடும்.நிம்மதியும்,சிறந்த வாழ்க்கைத்துணையும் அமைந்துவிடும் என்பது அனுபவ உண்மை ஆகும்.

மனதுக்குப்பிடித்த வாழ்க்கைத் துணை அமையவும்; திருமணத்தடை அகலவும்:

வெள்ளிக்கிழமை ராகு கால நேரமான காலை 10.30 முதல் 12 மணிக்குள் கால பைரவருக்கு சந்தனக்காப்பு பூச ஏற்பாடு செய்ய வேண்டும்;புனுகு பூசச் செய்து,தாமரை மலரை அணிவிக்க வேண்டும்;அவல் கேசரி,பானகம்,சர்க்கரைப்பொங்கல் இவைகளை படையலாக்க வேண்டும்;படைத்து நமது பெயருக்கு அர்ச்சனை செய்து வர வேண்டும்.
மேலும் ஞாயிறு தோறும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரத்தில் காலபைரவருக்கு சந்தனக்காப்பு பூச வைத்து,நமது பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து 8 வெள்ளிக்கிழமைகளுக்கும்,8 ஞாயிற்றுக்கிழமைகளுக்கும் வழிபாடு செய்து வர எப்பேர்ப்பட்ட திருமணத்தடையாக இருந்தாலும் அது நீங்கிவிடும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...