Tuesday, October 18, 2016

நம்பிக்கையை தளர விடாதே!!!

ஜென் குரு ஒருவர் தன் சீடர்களுக்கு தன்னம்பிக்கை பாடத்தை சொல்லிக் கொடுத்தார். அதனால் அந்த பாடத்தை தன் சீடர்களுக்கு புரியும் படியாக கதையின் வாயிலாக சொல்ல ஆரம்பித்தார். அந்த கதை என்னவென்றால் "வேடன் ஒருவனுக்கு யானை என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் அவன் காட்டில் குழிகள் பலவற்றை வெட்டி, அவற்றில் விழும் குட்டி யானைகளை பிடித்து, இரும்புச்சங்கிலியில் கட்டிவிடுவான். அந்த யானைகளோ அவனிடமிருந்து தப்பிக்க எவ்வளவோ முயற்சிக்கும். இருப்பினும் அவற்றால் முடியாத காரணத்தினால், நாளடைவில் நம்பிக்கையை இழிந்துவிடும். பின் அந்த யானைகள் பெரிதானவுடன், அதனை கயிற்றால் கட்டிவிடுவான். அப்போது ஒரு நாள் வேட்டைக்கு ராஜா அந்த காட்டிற்கு தன் மகனுடன் வந்தார். அப்போது பெரிய யானைகள் கயிற்றிலும், குட்டி யானைகள் இரும்புச்சங்கிலியிலும் கட்டியிருப்பதை பார்த்து, அந்த வேடனிடம் "எதற்கு குட்டி யானைகளை இரும்புச்சங்கிலியிலும், பெரிய யானைகளை கயிற்றிலும் கட்டியுள்ளாய். அவை கயிற்றை அறுத்துக் கொண்டு போய்விடுமல்லவா?" என்று கேட்டார். அதற்கு அந்த வேடன் "மன்னா! பெரிய யானைகள் குட்டியாக இருக்கும் போது இரும்புச்சங்கிலியால் தான் கட்டப்பட்டிருந்தன. இவை பெரிதானதும் வேறு இடத்திற்கு போய் என்ன செய்வது என்று நம்பிக்கையை இழந்துவிட்டன. ஆகவே தான் கயிற்றில் கட்டியுள்ளேன்." என்றான்." என்ற கதையை சொல்லி, எனவே இந்த யானைகளைப் போல் அடைய நினைக்கும் இலக்கை அடையும் வரை நம்பிக்கையை இழக்காமல், ஏற்கனவே மேற்கொள்ளும் முயற்சியை விட அதிக முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று சொல்லி, அன்றைய தன்னம்பிக்கை பாடத்தை முடித்தார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...