Monday, October 10, 2016

#விஜயதசமி


#விஜயதசமியான இன்று அம்பிகையை மனதில் நினைத்து இதை படிப்போருக்கு வாழ்வில் எல்லா நன்மையும் உண்டாகும்.
-
01. #கீழ்வானில் தோன்றும் சூரியனின் சிவந்த ஒளி போன்ற நெற்றித் திலகத்தைச் சூடியிருப்பவளே! நல்லுணர்வு உடைய அன்பர்கள் போற்றுகின்ற மாணிக்கமே! மாதுளம்பூ போலச் சிவந்தவளே! தாமரை மலரில் இருக்கும் திருமகள் துதிக்கின்ற மின்னல் போன்றவளே! குங்குமம் போன்ற சிவந்த மேனி கொண்டவளே! அபிராமி அன்னையே! நீயே எனக்கு உற்றதுணையாக இருக்க வேண்டும்.
---
02. #படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களை நிகழ்த்துபவளே! கொடி போன்ற இடை கொண்டவளே! அடியார்களுக்கு ஞானம் அருளும் மனோன்மணியே! சிவன் பருகிய விஷத்தினை அமுதமாக்கிய பராசக்தித் தாயே! தாமரை மலரை விட, மென்மையான உன் பாதங்களை அடியேனின் தலைமீது வைத்து அருள்புரிவாயாக.

---
03. #பதினான்கு உலகங்களையும் உருவாக்கி, அவற்றையெல்லாம் காத்து, பின் உனக்குள்ளேயே இவ்வுலகங்களை ஒடுக்கிக் கொள்பவளே! நஞ்சை உண்ட நீலகண்டனுக்கும் மூத்தவளே! இளமை பொருந்திய மகாவிஷ்ணுவின் தங்கையே! உன்னைத் தவிர, எனக்கு இவ்வுலகில் வேறு அடைக்கலம் யாருமில்லை.
---
04. #பச்சை வண்ணம் கொண்டவளே! அமுதம் போன்றவளே! உன்னைப் போற்றுபவர்கள் உள்ளத்தில் பிரகாசிக்கும் ஞானச்சுடரே! வான் முதலாகிய உலகின் பஞ்ச பூதங்களாகவும் பரவி விரிந்தவளே! உன்னிடம் அன்பு கொண்ட இந்த எளியவனின் அறிவிற்கு எட்டும் வகையில் நீ அருள் செய்து காக்க வேண்டும்.
---
05. #மங்களத்தின் இருப்பிடமே! மலைமகளே! மணமும், வண்ணமும் மிக்க ஒளிபொருந்திய சிவந்த கரங்களைக் கொண்டவளே! கலை ஞானத்தின் திரளாகத் திகழும் அழகு மயிலே! பொங்கும் கங்கை நதியைத் தலையில் சூடியிருக்கும் சிவனுடன் கூடியிருப்பவளே! குளிர்ச்சி பொருந்திய மெல்லிய கொடி போன்றவளே! அபிராமி அன்னையே! எனக்கு அருள் செய்வாயாக.
-
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...