Sunday, October 30, 2016

நரம்புகள்.........................

மனித உடலில் 72,000 நரம்புகள் உள்ளன. அனைத்து நரம்புகளிலும் ரத்த ஓட்டம் சீரான முறையில் இருந்தால் தான் உடல் உறுப்புகளும் சீராக இருக்கும். உடல் நிலையும் ஆரோக்கியமாகவே இருக்கும். எந்த நரம்புகளில் ரத்த ஓட்டம் சீராக இல்லையோ அந்த நரம்பு எந்த உடல் உள் உறுப்புகளுக்கு தொடர்பு உடையதோ அந்த உறுப்புகள் பாதிப்பு அடையும். அந்த உறுப்பு எந்த நோய்க்கு தொடர்பு உடையதோ அதை சார்ந்த நோய்களும் உருவாகும்.
ரத்த அழுத்தம் அதிகம் ஆனால் ரத்த குழாய்கள் சுருங்கி விடுவதோடு ரத்த ஓட்டம் தடைபடவும் செய்யும். இதன்காரணமாக இதயம், சிறுநீரகம் போன்றவைகள் பாதிக்கப்படக் கூடும். பக்கவாதமும் ஏற்படும்.
பக்கவாதம் என்பது மூளைக்குச் செல்லும் ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டாலோ அல்லது ரத்த கசிவு ஏற்பட்டாலோ மூளையில் உள்ள செல்களுக்கு ஆக்சிஜன் செல்வதில் தடை ஏற்படுகிறது.
மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டால் மூளையில் உள்ள செல்கள் பாதிப்பு அடைகிறது. இந்த நிலையில் தான் மயக்கம், தலைவலி போன்ற அறிகுறிகளும் ஏற்படும். எந்த பக்கம் பாதிப்பு அடைகிறதோ அந்த பக்கம் கண் அசைவும் இருக்காது. முக வாதமும் தென்படும். ரத்த கசிவு ஏற்படுவதால் மூளையின் முக்கியமான பாகங்களும் பாதிப்பு அடைகிறது. உடல் உறுப்புகளும் பாதிக்கப்படுகிறது. மூளையின் இடது பக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டால் உடலின் வலது பக்கம் உள்ள வலது கை, கால்களை ஆட்டவும், அசைக்கவும் முடியாது.
அதே போல் மூளையின் வலது பக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டால் உடலில் இடது பக்கம் உள்ள இடது கை, கால்களை ஆட்டவும், அசைக்கவும் முடியாமல் போய் விடுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...