Sunday, October 30, 2016

கண் திருஷ்டி என்றால் என்ன‍? அதிலிருந்து தப்பிக்க என்னென்ன வழிமுறைகள்?

கண் திருஷ்டி என்றால் என்ன‍? அதிலிருந்து தப்பிக்க என்னென்ன வழிமுறைகள் !
கண் திருஷ்டி என்பது எல்லோரும் தன்னை நோக்குதல் என்பது தான் அதனுடைய அர்த்தம். ஒட்டுமொத்த பார்வையும் தன் மேல் விழுந்திருக்கிறது என்று சொல்வார்களே அதுதான். அந்தத் தெருவிலேயே
பெரிய வீடு கட்டிவிட்டார்கள். அத னால் அந்தத் தெருக்காரர்கள் எல் லாம் போகும் போதெல்லாம் திரும் பித் திரும்பிப் பார்த்துவிட்டுப் போ வார்கள். அப்பொழுது என்ன செய்ய வேண்டு மென்றால், அவர்களுடை ய ஒட்டுமொத்த சிந்தனையும், பார் வையும் எதிலாவது படும்படி ஒரு பொருளை அங்கு வைக்க வேண் டும். இதுதான் முக்கியம்.
சிலரெல்லாம் வாசலில் பெரிய பாத்திரத்தில் நீர் விட்டு மலர்களையெல்லாம் தூவி வைப்பார்கள். பார் ப்பவர்களுக்கு அதிலேயே அவர்க ளுடைய சிந்தனை போய்விடும். அ ந்த வீட்டில் உள்ளவர்களைப் பற்றிய சிந்தனை வராமல்போய்விடும். இது போன்ற எளிமையான சில பரிகார ங்களை மேற்கொள்வது நல்லது. இதில் குறிப்பாக தா வரங்களுக்கு கண் திருஷ்டியை எடுக்கக் கூடிய குணங்கள் நிறைய உண்டு. தொங்கும் தோட்டம் போன்றதெல்லாம் அமைக்கலாம். ரோஜா முட் கள் உள்ள செடி. அது போன்று முள் செடிகள் இருக்கும்படியும் வைக் கலாம். இந்த மாதிரி எ ளிய பரிகாரங்கள் நிறை ய இருக்கிறது.
சிலரெல்லாம் பூசணிக்காயை கட்டித் தொங்க விடுவார்கள். சிலர், நாக்கு வெளியே தொங்கவிட்டுக் கொண்டிருக்கிற பொம்மையை வைத்திருப்பார்கள். சிலர் பிள்ளை யாரை வைத்திருப்பார்கள். இன் னும் சிலர் கற்றாழையைக் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். இது போன்று சிலவற்றை செய்யலாம். இதெல்லாம் பயனுள்ளதாக இரு க்கும். சாதாரணமாகப் பார்த்தீர்க ளென்றால் பிள்ளையார்பட்டி கற் பக விநாயகர் கண் திருஷ்டிக்கு நல்ல பாதுகாப்பாக இருப்பார். சில ரெல்லாம் எல்லைத் தெய்வங்களோட படம், ஆயுதங்களோடு இருக்கக்கூடிய படத்தை வைத்திருப்பார்கள்.
ஒட்டுமொத்த பார்வையையும், சிந்தனையையும் திசை திருப்பு வதற்கு ஏதேனும் ஒரு பொரு ளை வாசலிலேயே தொங்கவி டுவது நல் லது. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலா ம். குறிப்பாக இயற்கைத் தாவர ங்கள், செடிகொடிகள் போன்ற வற்றிற்கு ஆதிக்கம் அதிகமாக இருக்கும். வாழைக்கன்று நடும் அளவிற்கு இடமிருந்தால் அது மிக மிகச்சிறப்பாக இருக்கும். ஏனென்றால் வாழை ஒவ்வொரு விநாடியும் துளிர் த்துக் கொண்டே இருக்கும். எந்ததெந்த திருஷ்டி இருக்கிறதோ அதை அப்பப்ப வே களைந்துவிடும். வாழைக்கு அந்த அருங்குணம் உண்டு. அதை வைத்தா ல் இன்னும் நல்லது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...