Monday, October 10, 2016

பெண் குழந்தைகள், பெண் தெய்வங்கள், சர்வதேச பெண் குழந்தைகள் தினம் இன்று -🚩

( International Day of the Girl Child On - 11.10.2016 )
இன்றைய நவீன உலகிலும் பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுவது அநீதி. பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும், 2011 டிச., 19ம் தேதி ஐ.நா, சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
அதன்படி, அக்., 11ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
"பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல்' என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக்கருத்து.
உலகில் அனைத்து பெண் குழந்தைகளுக்கும் கட்டாயம் கல்வி வழங்கவேண்டும் என ஐ.நா., வலியுறுத்துகிறது.
பெண் குழந்தைகள் கல்வி கற்பதன் மூலம், அவர்கள் மட்டுமல்லாமல் சமூகமும் முன்னேறும். இருபது ஆண்டுகளுக்கு முன், பெண் குழந்தைகளுக்கு கல்வி என்பது மறுக்கப்பட்ட ஒன்றாக இருந்தது.
இன்று ஓரளவுக்கு மாணவிகளும் கல்வி வாய்ப்பு வழங்கப்படுகிறது. இருப்பினும் இன்றும் சில நாடுகளில் பெண் குழந்தைகளுக்கு கல்வி உரிமை மறுக்கப்படுகிறது.
அவர்கள் பள்ளி செல்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு வருமானம், பாதுகாப்பு, கலாசாரம், கல்வி நிறுவனம் ஆகியவை காரணம்.
என்ன செய்வது:
பெண் குழந்தைகள் அதிகளவில் கல்வி பெறுவதற்கு, அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா., வலியுறுத்துகிறது.
* பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு தேவையான, போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துதல். படிக்கும் குழந்தைகளுக்கு வங்கிகள் மூலம் உதவித்தொகை வழங்குதல்.
* பெண் குழந்தைகளுக்கும் தொழில்நுட்ப கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். படிப்பை முடிக்கும் மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளித்தல்.
* பாலின சமத்துவத்தை வலியுறுத்துவது, குழந்தை திருமணத்தை அறவே ஒழிப்பது, குடும்பங்களில் மாணவர்களுக்கு சமமாக மாணவிகளுக்கும் அனைத்து சலுகைகள் வழங்குதல்.
* தொழில்நுட்ப கல்வி , கிராமப்புற மாணவிகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்தல்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...