Saturday, October 29, 2016

இளம்பெண்களுக்கு வரும் எல்லா நோய்களுக்கும் தீர்வு தரும் ஒரே மாமருந்து

இளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களுக்கும் தீர்வு தரும் ஒரே மாமருந்து

இளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களுக்கும் தீர்வு தரும் ஒரே மாமருந்து
இளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களையும் இது குணப்படுத்து வதால்… பெண்களுக்கு
தானாக கிடைத்த‍ வரம் என்றே சொல்ல‍லாம். அந்த வரம் அல்ல‍து மாமருந்து என்னவென்றால், அது சோற்றுக் கற்றாழைதான். இந்த‌ சோற்றுக் கற்றாழைக்கு குமரி கற்றாழை என வேறு பெயரும் உண்டு. சோற்றுக் கற்றாழையை வெட்டி பச்சை நிறத்தோலை நீக்கி விட்டு, 7 முதல் 8 முறை தண்ணீர் விட்டு நன்கு கழுவி சுத்தம் செய்து, அடுப்பில் ஏற்றி 1 கிலோ கற்றாழைக்கு 1கிலோ கருப்பட்டியைத் தட்டிப் போட்டு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். கருப்பட்டிதூள் கரைந் து பாகு பதத்திற்கு வந்ததும் அதனுடன் 1/4 கிலோ தோல் உரிக்கப்பட்ட பூண்டினை போட்டு மீண்டும் கிளற வேண்டும். பூண்டு வெந்த பதத்திற்கு வந்தவுடன் இறக்கிவிட்டு தயிர்கடையும் மத்தினால் கடைய வேண்டும். அல்வாபதத்திற்கு வந்தவுடன் அதை தனியே எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய 3 வேளைகளும் உணவிற்குப்பின் 1 ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல், நீர்க்கட்டிகள் , நீர் எரிச்சல், மாதவிடாய் கோளாறுகள், பெண் மலடு ஆகியவை உடனே சரியாகும். பெண்கள் மட்டுமின்றி, ஆண் களும் சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து உடல் வலுவாகும்.
மருத்துவரை அணுகி, சோற்றுக் கற்றாழை உங்களது உடல் ஏற்றுக் கொள்ளுமா? என்பதை அறிந்த பிறகே உட்கொள்வதா அல்ல‍து வேண்டாமா என்பது தீர்மானிக்க‍வும்.


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...