Saturday, October 22, 2016

பணம், புகழ், அதிகாரம், உறவு தொழில் .....

எந்த ஒன்றினால் மனம் வருத்தப் படுகிறதோ அதில் நாம் சிறை பட்டு உள்ளோம் என்று அர்த்தம். (பணம், புகழ், அதிகாரம், உறவு தொழில் .....)
எதுவும் நமக்கு சிறை இல்லை நம் எண்ணமே தான் நமக்குச் சிறை.
ஒரு பிச்சைக்காரன் ஒரு தகரப்பெடியின் மேல் அமர்ந்து கொண்டு ரொம்ப நாளாக பிச்சை எடுக்கிறான்.

ஒரு நாள் அவன் இறந்து விடுகிறான்.
அப்போ முனிசிபாலிட்டி ஆட்கள் வந்து அவனை தூக்கி செல்லும் போது அவன் அமர்ந்திருந்த பெட்டியை திறந்து பார்கிறார்கள்.
அதில் விலை உயர்ந்த ஆபரணங்கள் இருப்பதாய் கண்டு வியந்து போனார்கள்.
இது தெரியாமல் அவன் வாழ்க்கை முழுவதும் பிச்சை எடுத்தான்.
இது தான் தொழிலில் சிறை.
அவனுடைய தொழில் அவனை அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல், சிந்திக்க முடியாமல் செய்துவிட்டது
இன்னொரு மனிதர் நிறைய பணம் சேர்த்து வீட்டுக்கு கீழ் பாதாளம் அமைத்து அதில் சேர்த்து வைத்திருந்தார்.
ஆனால் அவர் ஒரு நாள் கூட அதை சரி பார்கவே இல்லை.
இதை எப்படியோ தெரிந்து கொண்ட வீட்டின் வேலை ஆள் அந்த அறையின் அடுத்தப் பக்கத்தை ஓட்டை போட்டு எடுத்து செல்கிறார்.
அது இவருக்கு தெரியாமலேயே பணம் பத்திராமாக இருப்பதாக மகிழ்ச்சியாக இருக்கிறார்.
எப்படி இருக்கிறது பாருங்கள் மனிதனின் மனம்.
ஒருவன் இருப்பது தெரியாமல் பிச்சை எடுக்கிறான்.
மற்றொருவன் இல்லாததை இருப்பதாக நினைத்து கொண்டு வாழ்கிறான்.
இப்படித் தான் அனைவரும் ஒவ்வொரு விதத்தில் இருப்பதை இல்லை என்றும், இல்லாததை இருப்பதாகவும் நினைத்து வாழும் கலையை தெரிந்து கொள்ளாமலே வாழ்வின் பயணம் முடிந்து போகும் நிலையும் நிலவுகிறது.
இதுவும் மாயையே
இருப்பது ஆன்மாவில் நிலை கொண்டுள்ள ஆனந்தம் என்னும் இறைநிலை. அந்த ஆனந்தம் நம்மிடம் இல்லை என்று வெளியே தேடி அலைகிறோம்.
இல்லாதது "நான்" என்ற மாயை. அதை இருப்பதாக பாவித்து இன்னலுக்கு ஆட்பட்டு அழிந்து போகிறோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...