1.♥படுக்கை அறையில் தலை அருகே நீரை வைத்து உறங்கிவிட்டு அந்த நீரை காலையில் செடிகளுக்கு விட #சுக்ரதோஷம் படி படியாக குறையும் .
இந்த விவரத்தை மாற்றி சொல்லலாம் ,படுக்கைக்கு நாம் எடுத்து செல்லும் குடி நீர் காலையில் மிதம் இருந்தால் செடிகளுக்கு குறிப்பாக துளசி அல்லது தொட்ட சினிக்கி செடிகளுக்கு விட்டு விட வேண்டும் ....
2.♥அடிக்கடி பசுவிற்கு வாழை பழம்,கற்கண்டு பொங்கல் கொடுப்பது #சந்திரனின் ஆசிகளை நமக்கு கொடுத்து புகழை பெற்று தரும் .
3.♥வசதி இல்லாத குடும்பத்தினருக்குப் ஈமச் சடங்குகள் செய்ய
பணம் ,பொருள் கொடுத்து உதவி செய்தல் #சனியின் ஆசிகளை கொடுத்து ஆயுளை விருத்தி செய்யும் .
பணம் ,பொருள் கொடுத்து உதவி செய்தல் #சனியின் ஆசிகளை கொடுத்து ஆயுளை விருத்தி செய்யும் .
4.♥ஆசான் ,வேதம் படித்தவர் ,நம் முன்னோர்கள் மற்றும் சாதுக்களை விழுந்து வணங்கிட, புண்ணிய யாத்திரைக்கு இல்லாதவருக்கு பொருள் கொடுத்து உதவுது ,குழந்தை பெற்ற ஏழை தம்பதியருக்கு பொருள் கொடுத்து உதவுவது , #குருவின் ஆசிகள் கிடைக்கும் .
5.♥சிதலம் அடைந்த கோவில்களுக்கு நீர்நிலை உண்டாக்குதல் /தண்ணீர் தொட்டி /குளம் சரி செய்தல் அல்லது செய்பவருக்கு உதவுதல்.
#தேவதைகளின் ஆசிகளை கொடுத்து நமக்கு வசியமும் கவர்ச்சியும் கொடுத்துவிடும் .
#தேவதைகளின் ஆசிகளை கொடுத்து நமக்கு வசியமும் கவர்ச்சியும் கொடுத்துவிடும் .
6.♥சிவ பெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வதும் பசித்து தவிக்கும் உயிர்களுக்கு உணவு அளிப்பதும்,கோவிலுக்கு சொர்ணத்தை தானமாக அல்லது கலசத்திற்கு தருவது ,தொழு நோய் /குஷ்டம் கண்டவர்களுக்கு வைத்திய செலவு அல்லது அவர்களுக்கு நல்ல உணவு அளிப்பது #சூரியனின் ஆசிகளை கொடுத்து நல்ல ஆரோக்கியம் மற்றும் வம்ச விருத்தி செய்யும் .
7.♥திருமணம் செய்ய ஏழை பெண்களுக்கு பொருள் கொடுத்து உதவுதல் , நம் வாழும் மனை ,தொழில் செய்யும் மனை கைகளால் தொட்டு வணங்குதல் ,மேலும் பூமிக்கு மரியாதை செய்தல்,பல உயிர்களை வளர்த்தல் (விலங்கு ,பறவைகள் ),உயிர் பலிகளை நாம் தவிர்த்தல் ,இல்லாதவர்களுக்கு மருத்துவ செலவிற்கு பணம் கொடுத்தல் #செவ்வாயின் ஆசிகளை கொடுத்து அஷ்ட சுகம்களையும் தரும் .
8.♥ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கு பொருள் உதவி செய்தல் ,புதன் கிழமை தோறும் அன்னதானம் செய்தல் ,புதிய உடைகளை தானம் செய்தல் (குறிப்பாக குளிர் காலத்தில் செய்வது ) #புதனின் ஆசிகளை நமக்கு கொடுத்து சண்டை ,பொறாமையினால் வரும் நோய் (திருஷ்டி ) நீதிமன்ற சோதனை போன்ற தொல்லைகளை விலக்கி நல்ல தொழில் , மென்மையான வாழ்க்கையை கொடுக்கும் .
9.♥நாகம்களை கண்டதும் அடிக்காமல் இருப்பது ,இறந்த நாகத்தின் உடலை கண்டதும் தீயிட்டு கொளுத்துவது , குடி கெடுத்தவன் ,குடிகாரன் ,குரு துரோகி ,பசுவை கொன்றவன் ,சண்டாளன் -- இவர்களிடம் நட்பு கொள்ளாமல் தவிர்ப்பது #ராகு_கேது ஆசிகளை கொடுத்து அதிர்ஷ்டம் ,போகம்,மற்றும் சகல பாக்கியத்தை அனுபவிக்கும் ஆசிகளை தரும் .
( இந்த பஞ்ச மஹா பாவிகளை அடையாளம் கண்டு கொள்வது சற்று சிரமும் தான் ,தெரிந்து சேர்வது நமக்கு தரித்தரம் )
10.♥பாழடைந்த சிவன் கோவிலில் விளக்கு ஏற்றுவது ,பிரதோஷ நாளில் சிவ ஸ்தலங்களுக்கு முடிந்த வரையிலான அபிஷேகத்திற்கு தேவையிலான பொருட்களை வாங்கி கொடுப்பது,
வெல்லள்த்தடன் பச்சரிசி துளை கலந்து அந்த கோவிலின் சுற்று பிரகாரத்தில் தூவி விடுவது #தேவர்களை சாந்தி படுத்திவிடும் ,இவர்கள் நம் முன்னோர்களுக்கு மோட்ச பதவி அளிப்பார்கள் ....
வெல்லள்த்தடன் பச்சரிசி துளை கலந்து அந்த கோவிலின் சுற்று பிரகாரத்தில் தூவி விடுவது #தேவர்களை சாந்தி படுத்திவிடும் ,இவர்கள் நம் முன்னோர்களுக்கு மோட்ச பதவி அளிப்பார்கள் ....
♦இவைகள் பொதுவானவை
♦வழக்கமாக செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை
♦புரிந்து செய்தாலும் ,தெரியாமல் செய்தாலும் பலன் ஒன்று தான் .....
♦வழக்கமாக செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை
♦புரிந்து செய்தாலும் ,தெரியாமல் செய்தாலும் பலன் ஒன்று தான் .....
No comments:
Post a Comment