எலுமிச்சை சாற்றில் தோய்த்த பீட்ரூட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் . . .
எலுமிச்சை சாற்றில் தோய்த்த பீட்ரூட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் . . .
பீட்ரூட், அதன் நிறமே அடர்த்தியான சிவப்பு நிறம். மேலும் இதன் சாறு பார்ப்பதற்கு
ரத்தம் போன்றே இருக்கும். இந்த பீட்ரூட்டை பச்சையாகவும் சாப்பிடலாம். சமைத்தும் சாப்பிட லாம். எப்படி சாப்பிட்டாலும் அதன் சத்து முழுமை யாக நமது உடலுக்கு கிடைத்து, ஆரோக்கியத் தரும் ஆரோக்கிய காய் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இதில் இருக்கும் மருத்துவக் குணங்களில் ஒன்றினை இங்கு காண்போம்.
இரத்த சிவப்பு அணுக்கள் எனப்படும் ஹீமோகுளோபின் எண்ணிக்கைகுறைவு ஏற்படும் நிலையே இரத்தசோகை ஆகும். நம் இரத்ததில் சிவப்பணுக்கள் உற்பத்தியாவது குறைந்தா லும் அல்லது அதன் அழியும் தன்மை அதிகமாகும் போதும் இரத்த சோகை ஏற்படுகிறது.
இந்த இரத்தசோகையை விரட்டிஅடிக்க இயற்கையான முறையை நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ளனர். இரத்த சோகை யால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு பீட்ரூட்டை பச்சையாக எடுத்து துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டு ம். பின் 2 அல்லது 3 எலுமிச்சைப் பழங்களை எடுத்து பிழி ந்து அதன் சாற்றை ஒரு குவளையில் சேரகரித்து வைத்து க் கொள்ள வேண்டும். அதன்பிறகு இந்த எலுமிச்சை சாற் றில், நறுக்கிய பீட்ரூட் துண்டுகளை தோய்த்து, அப்படி எடுத்து சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற் பத்தியாகும். சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகமாவ தால், இரத்தசோகை காணாமல் போகும். இதனால் நமது உடலும் உள்ளமும் சுறுசுறுப்புடன் இயங்கும்.
மருத்துவரின் ஆலோசனைபெற்று உட்கொள்ளவும்.
No comments:
Post a Comment