இரண்டு மூட்டு இணைப்புகளுக்கு இடையில் CARTILAGE எனப்படும் குருத்தெலும்பு ஜவ்வு உள்ளது.இது தேய்ந்து போய் சொரசொரப்பாகி கடினமாகி விடுவதால் மூட்டிற்கு சேதம் உண்டாகிறது.இதனால் வலி தோன்றி, நடந்தால், வேலை செய்தால்,படியேறினால் வலி அதிகரிக்கிறது. காலை மடக்கும் போது கரகரவென எலும்பு முறிவது போல சப்தமும் பின்னர் மூட்டு வீக்கமும் ஏற்படுகிறது.இது மற்ற நோய்கள் ஏதுமின்றி வருமானால் பிரைமரி ஆஸ்டியோ ஆர்த்திரிடிஸ் என்றும்,மற்ற மூட்டு நோய்களுடன் வந்தால் செகண்டரி ஆஸ்டியோ ஆர்த்திரிடிஸ் என்றும் அழைக்கப்படுகின்றது.இதை எக்ஸ்ரே மூலம் எளிதில் கண்டறியலாம்.இந்நோய் கால் மூட்டுகளை மட்டுமின்றி மற்ற மூட்டுகளையும் தாக்கக் கூடும்.மூட்டு நோயுள்ளவர்களது பொதுவான உடல்நலத்தைப் பேணுவதற்கு சமச்சீர் வலுவுள்ள ஆரோக்கிய உணவு முறை உதவும் . எடையைச் சரியான அளவில் பேணுவது மிக முக்கியமாகும்.மதுபானம் கூடாது. இனிப்பு அதிகமுள்ள மென்பானங்களையும் அதிகம் உட்கொள்ளக் கூடாது.கால்சியம் செறிவுள்ள உணவுகள் அவசியம் தேவை. பால், தயிர், கீரை வகைகள், சிறுமீன்கள், பயறு வகை உணவுகளில் கால்சியம் அதிகம் உண்டு.ஹோமியோபதியில் கல்கேரியா கார்ப்,கல்கேரியா பாஸ், பிரையோனியா, டல்கமாரா,ரஸ்டாக்ஸ், லேடம்பால்,ரூடா,பல்சடில்லா... போன்ற பல மருந்துகள் சிறப்பான நிவாரணம் அளிக்கின்றன.

No comments:
Post a Comment