காரணம், பிரம்மதேவன் தந்த வரமா? அல்லது இந்திரன் செய்த சூழ்ச்சியா? ஊரறியா ஓரரிய தகவல்
இதற்கு காரணம் பிரம்மதேவன் தந்த வரமா? அல்லது இந்திரன் செய்த சூழ்ச்சியா? ஊரறியா ஓரரிய தகவல்
இராமாயணத்தில் இடம்பெற்ற அதி முக்கிய கதாபாத்திரமாக இந்த கும்ப கர்ணன் இடம்பெற்றுள்ளான். இந்த
கும்பகர்ணன் இராவணனின் இளைய சகோதரர் ஆவார். பிறப்பில் ஒருஅரக்கனாக இருந்தாலும் வாழ்வில் அவன் ஒருதேவர் போல வாழ்வானாம். மேலும் நல்லபுத்தி கூர்மையும், நெறி தவறா வாழ்க்கை முறையையும், இரக்க குணத்தையும் ஒருங்கே கொண்டவனாக திகழ்ந்தான். இராவணன், இராமருடன் போரிடச்சொன்னபோதும் தன் அண்ணனுக்கே புத்திசொன் னவன். இருந்தபோதிலும் செஞ்சோற்று கடனுக்காக இராமருக்கு எதிரான போரில் இறங்கி மரணம் அடைந்தான்.

இந்திரன்தான் தேவர்களின் தலைவனாவான். இவனு க்கு கும்பகர்ணனின் புத்திக்கூர்மையையும் அசாத்திய வீரத்தையும் பார்த்து பொறாமை எனும் தீயை நெஞ்ச த்தில வைத்து, கும்பகர்ணனை பழி தீர்க்க தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருந்தான்.
கும்பகர்ணன் தனது அண்ணன்கள் இராவணன், மற்றும் விபீஷணனுடன்
பிரம்மதேவரிடம் வரம்வேண்டி தீவிர யாகம் செய்தான் . இந்த யாகத்தைக்கண்டு மகிழ்ந்த பிரம்மன், கும்பகர் ணனைப் பார்த்து என்ன வரம் வேண்டும் என கேட்டார். சகோதரர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தநேரத்தில் அவர்கள் எதிர்பார்த்த வரம் இந்திரனின்ஆசனமான ‘இந்திராசனா’ என்ற வரமாகும், ஆனால் கும்பகர்ணன் ‘நித்ராசனா’ என வரத்தைக் கேட் டார்.
இந்திராசனத்திற்கு பதிலாக நித்ராசனாவை கேட்டதை உணர்ந்த கும்ப
கர்ணன் தன் தவறை உணர்ந்தார். இந்த நேரத்தில் பிரம்ம தேவர் ‘தந்தேன்’ என சொல்லிவிட்டார். எனினும், பிரம்ம தேவரிடம் இந்த வரத்தை நீங்கள் கொடுக்க வேண்டாம் என கேட்டார் கும்பகர்ணன், ஆனால் பிரம்மனால் அந்த வரத்தின் வீரியத்தை ஓராண்டில் இருந்து 6 மாதங்களாக குறைக்கத்தான் முடிந்ததே தவிர பிரம்மனால் திரும்ப பெற இயலவில்லை .
இதற்குமுன் கும்பகர்ணன் மேல் பொறாமை கொண்டிருந்த இந்திரன்,
சரஸ்வதியிடம் சென்று கும்பகர்ணனை ‘இந்திராசனத்தி ற்கு பதிலாக நித்ராசனத்தை கேட்கச் செய்யுங்கள்’ என மன்றாடி கேட்டுக்கொண்டான் சரஸ்வதியும் இந்திரன் கோரிக்கைக்கு செவிமடுத்து அவ்வாறே செய்தார்.
இந்நாளிலிருந்து 6 மாதங்கள் தூங்கவும், விழித்திருக்கும் 6 மாதங்களில் எதிர்வரும் அனைத்தையும் சாப்பிடவும் தொடங்கினார் கும்பகர்ணன்! என்று குறிப்புக்கள் காணப் படுகிறது.
இந்திரன்தான் தேவர்களின் தலைவனாவான். இவனு க்கு கும்பகர்ணனின் புத்திக்கூர்மையையும் அசாத்திய வீரத்தையும் பார்த்து பொறாமை எனும் தீயை நெஞ்ச த்தில வைத்து, கும்பகர்ணனை பழி தீர்க்க தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருந்தான்.


No comments:
Post a Comment