கிரக சேர்க்கை வரிசையில் அடுத்த படியாக செவ்வாய் ராகு சேர்க்கையை பார்ப்போம்..
செவ்வாய்க்கு என்று சில தனித்துவம் உள்ளது..வீரம்,ஆற்றல்,ஆவேசம்,உணர்ச்சி பிழம்பு, முன் யோசனையற்ற தன்மை போன்றவை அவரின் காரகத்துவம் ஆகும்...
போர் வீரன் என போற்றப்படும் செவ்வாய் எதிரியின் பலம் பலவீனம் அறியாமல் ஒரு போரில் குதிக்கும் போது வெற்றி பெறுவதில் இங்கே சிக்கல் ஏற்படும்.. ஏனெனில் அவர் இங்கே போட்டியிட்டு வெல்ல துடிப்பது ராகுவை..சூரியனையே சும்மா உட்கார வைத்து விடும் ராகுவுக்கு செவ்வாய் ஒரு பொருட்டாக இருக்க முடியுமா என்ன???செல்லா காசாக்கி விடுவார் அல்லவா???
இந்த சேர்க்கை உள்ளவர்களுக்கு எந்த விஷயத்திலும் தயக்கம் குறைவு..எதிரியின் பலம் பலவீனம் எல்லாம் பற்றி கவலை பட மாட்டார்கள்..இரண்டில் ஒன்று பார்த்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டு தான் செயல் படுவார்கள்...செவ்வாயே சில சமயங்களில் பின்வாங்க நினைத்தாலும் உடன் இருக்கும் ராகு அவரை உற்சாகப்படுத்தி எந்த செயலையும் (சரியா தவறா என்பது வேறொரு விஷயம்) மிக தைரியமாக செய்ய வைப்பார்...
இதில் இரு வேறு நிலைகள் உள்ளன...செயலின் நோக்கம் நல்லது என்றால் பாராட்டலாம்..உதாரணமாக யாருமே போரிட பயந்த கோலியாத் என்னும் மாமிச மலையை தாவீது என்னும் சிறுவன் போரிட்டு வெற்றி பெற்றது போன்ற விஷயங்களில் நன்றாக செயல்படும்..
ஆனால் மண்ணாசை பெண்ணாசை போன்ற விஷயங்களில் நாட்டம் செல்லும் போது பெரும் குழியை தோண்டி வைத்து கனகச்சிதமாக விழ வைத்து விடுவார் ராகு...
இருப்பினும் சுபர் பார்வை இவர்கள் மீது படும் போது மிக மேன்மையான பலன்கள் கிடைக்கும்...
மல்யுத்த வீரர்,விளையாட்டு வீரர்களுக்கு இது போன்ற அமைப்பு சிறந்து விளங்க உதவும்..ஏனெனில் வெற்றிக்காக போராட்டத்தின் உச்சிக்கே செல்வார்கள்...அது எதிரிகளையே நிலை குலைய செய்யும் என்பதில் ஐயமில்லை... வழக்கறிஞர்களுக்கும் இது ஒரு விசேஷமான அமைப்பு தான்...
பொது பரிகாரமாக ஒரு நல்ல துறையை தேர்ந்தெடுத்து அதில் சரியாக போராடி வெற்றி கொடி நாட்ட முயற்சிக்க வேண்டும்.. பிறரை துன்புறுத்தும் நோக்கத்தோடு செயல் படுவதை தவிர்த்து விட்டு நல்ல விஷயங்களை அறிந்து அதன் வழியில் செல்ல வேண்டும்.. மனதை கட்டுப்படுத்தும் பயிற்சிகளும் அவசியம்...
செவ்வாய் கிழமை ராகு காலத்தில்(பகல் 3 முதல் 4.30 வரை) விஷ்ணு துர்க்கை வழிபாடு செய்ய வேண்டும்... துர்க்கை அம்மன் இருவரையும் கட்டுப்படுத்தும் சக்தி படைத்தவர்....அவரின் அருளை பெரும் போது நற்பலன்கள் உண்டாகும்...
நன்றி..