Thursday, June 6, 2019

அவரது இசையை வைத்து வியாபாரம் பணம் பண்ணுபவர்களிடத்தில்தானே கேட்கிறார் ?

அன்று பல நொடிந்த தயாரிப்பாளர்களை பணம் வாங்காமலேயே வாழ வைத்தவர் #இசைஞானி_இளையராஜா.
‘’என் சம்பளத்தை வேணும்னா குறைச்சிக்கோங்கண்ணே’’ என்று இளையராஜா தெரிவித்ததை, கலைஞானம் பகிர்ந்துகொண்டார்.
கதாசிரியரும் தயாரிப்பாளருமான கலைஞானம் ’பைரவி’ முதலான பல படங்களைத் தயாரித்துள்ளார்.

தனியார் இணையதளச் சேனல் ஒன்றில், கலைஞானம் பேட்டி அளித்ததில் தெரிவித்ததாவது:
‘பைரவி’ படம்தான் நான் முதல்ல தயாரிச்ச படம். ரஜினியை ஹீரோவாக்கி அந்தப் படத்தைப் பண்ணினேன். ‘நான் ஹீரோவா, நான் ஹீரோவா’னு ரஜினி கேட்டுக்கிட்டே இருந்தார்.
இந்தப் படத்துக்கு இளையராஜாதான் இசையமைக்கணும்னு முடிவு பண்ணி, அவர்கிட்டக் கேட்டேன். ரெண்டுபேருமே மதுரைப்பக்கம். அப்பலேருந்தே எங்கிட்ட பிரியமாவும் மரியாதையாயும் அண்ணே அண்ணேனு கூப்பிடுவார் இளையராஜா.
படமெல்லாம் எடுத்து இளையராஜாகிட்ட கொடுத்தாச்சு. அவர் ரீரிக்கார்டிங் பண்ண ஆரம்பிச்சார். ரெண்டு மூணு நாளா ஒர்க் போயிக்கிட்டே இருக்கு. எங்கிட்ட கையிருப்பு குறைஞ்சிகிட்டே இருந்துச்சு. திரும்பவும் வட்டிக்குக் கடன் வாங்கணுமோனு பயந்துக்கிட்டே இருந்தேன்.
ஒருகட்டத்துல, கோபமாயிட்டேன். ‘ராஜா, மியூஸிக்கை நிறுத்துப்பா. எங்கிட்ட பணம் இல்லே’னு கத்திட்டேன். உடனே இளையராஜா, என்னை ரிக்கார்டிங் ரூம்லேருந்து தனியா கூட்டிட்டுப் போனார். ‘அண்ணே, படம் நல்லா வந்திருக்குண்ணே. இன்னும் ரெண்டுநாள் கொடுங்கண்ணே. நல்லாப் போட்டுத்தரேன்’னு சொன்னார். திரும்பவும் என்னைப் பாத்து, ‘நீங்க போட்ட கணக்கைத் தாண்டி செலவாச்சுன்னா, என் சம்பளத்துலேருந்து கழிச்சிக்கோங்கண்ணே. குறைச்சிக்கிட்டு கொடுங்கண்ணே’ன்னு சொன்னார். நெகிழ்ந்து போயிட்டேன்.
சொன்னபடியே இளையராஜா பாடல்களையும் சரி, பின்னணி இசையையும் சரி, பிரமாதப்படுத்தியிருந்தார். படம் பெரிய வெற்றி அடைஞ்சிச்சு. அப்புறமா, இளையராஜாவுக்குத் தரவேண்டிய சம்பள பாக்கியைக் கொடுக்கப் போனேன். ‘குறைச்சிக்கிட்டுக் கொடுங்கண்ணே’ன்னு சொன்னார். அதான் இளையராஜா.’’
இவ்வாறு கலைஞானம் தெரிவித்தார்.
Image may contain: 1 person, smiling, standing and playing a musical instrument
இப்போதும் பெருந்தன்மை கொண்டவர் தான்.
தயாரிப்பாளர்கள் சங்க கட்டிட நிதிக்கு மக்களிடம் வசூலிக்காமல் தனக்கு வரும் ராயல்டி பணத்தில் பெரும்பகுதியை வழங்குகிறார்.
அவர் ஏற்படுத்திய ராயல்டியால் இன்று நலிந்த பாடகர்கள் இசை கலைஞர்களுக்கு வருமானம் வர வழி செய்திருக்கிறார். 

தானும் வாழ்ந்து அடுத்தவரையும் வாழ வைக்கும் குணம்.
வெளிநாடுகளில் இசைக் கச்சேரி star night என்று வைத்து இவரது இசையால் எத்தனை கோடி சம்பாதிக்கிறார்கள் உங்களுக்கு தெரியுமா?
பாரிஸ் லண்டன் என்று இதற்காகவே Event management நிறைய சம்பாதிக்கிறார்கள். தன் இசையை வைத்து வியாபாரம் செய்பவர்களிடம்தான் ராயல்டி கேட்கிறார். அதில் என்ன தவறு ??

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...