கிருத்துவர்களாக மாறிய பட்டியலினத்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டுமெனும் சட்ட திருத்தம் மத்திய அரசு கொண்டு வரவேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம்....
நல்ல உருட்டு...
இதற்குமுன் பலமுறை மத்திய அரசில் அங்கம் வகித்தபோது , இந்த உருட்டு ஏன் செய்யவில்லை.?
அச்சமயத்தில் , அந்த மத்திய அரசு, இவர்கள் கோரிக்கையை நிறைவேற்றாமலிருந்தால், அந்த ஆட்சி ஆதரவு வாபஸ் செய்திருக்கலாமே..!
மேலும், அக்காலகட்டத்தில் , இப்படிப்பட்ட சட்டதிருத்தம் நிறைவேற்றும் ஆட்சிக்கு தான் ஆதரவு என, இன்னும் ஒரு படி மேலே சென்று உருட்டியிருக்கலாமே...!
சரி., சமுக நீதி என, பேச்சால் இல்லாமல்,
அக்கால கட்டத்தில், அந்த இனத்தவரை பிரதமர், குடியரசு தலைவராக முன்னிறுத்தும் கட்சிக்கு ஆதரவு என உரைட்டியிருக்கலாமே ..!
தங்கள் கட்சியின் தலைவரை , அந்த இனத்தவராக தேர்ந்தெடுத்திருக்கலாமே..!
ஆக, ஏதோ ஒரு விஷயத்தை திசைதிருப்பும் போக்கோ ,எனும் வினா எழுகிறது.
அப்படிச் சட்டம் இயற்றினாலும் அது செல்லுபடியாகாது. நோக்கம் மதமாற்றம் பட்ட ஆதித்திராவிடர்களுக்கு ஆதரவு மேற்போக்கானது. நாங்கள் முயற்சித்தோம் மைனாரிட்டிகளுக்கு எதிரான பாஜக சதி செய்து விட்டது எனப் பழியை பாஜக மீது போட்டு தாம் மட்டுமே மைனாரிட்டிகளுக்கு ஆதரவான கட்சி என பறை சாற்ற - இருக்கலாம்.
எத்தனைக்கு ஆதரவு வாபஸ் செய்வது?
மாநில சுயாட்சி கேட்டு வாபஸ் செய்யணும்.
கவர்னர் பதவியை நீக்க வாபஸ் செய்யணும். இலங்கை தமிழர் விவகாரத்தில் வாபஸ் செய்யணும்
ஹிந்தி திணிப்புக்கு வாபஸ் செய்யணும்.
மொத்தத்தில் திமுக பதவியில் இருக்கக் கூடாதா என்ற உங்க ஆதங்கம் புரிகிறது!
No comments:
Post a Comment