Tuesday, July 4, 2023

அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட படம்.

 ஒரே ஒரு கிராமத்திலே(1989)

இந்த படத்தை பற்றி கேள்விபட்டது கூட இல்லை தற்செயலாக தடைசெய்யப்பட்ட(banned) படங்களின் லிஸ்டை பார்த்து கொண்டு இருக்கும் போது இந்த படத்தின் பெயர் வந்தது எனக்கு படம் பார்க்க ஆர்வம் ஏற்பட்டது.
இந்த படம் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டு பின் உச்சநீதிமன்றம் வரை சென்று படத்தின் தடையை நீக்கி வெளிவந்த படம், படத்திற்கு கதை,திரைக்கதை, வசனம், பாடல்கள் கவிஞர் வாலி அவர்கள் .
படத்தின் முதல் காட்சி : மழை வெள்ளத்தில் ஊர் கிராமத்தில் இருக்கும் குடிசை வீடுகள் தண்ணீரில் மூழ்கி இருக்கும் கட் செய்தால் ஒரு பிராமணர் தண்ணீரில் நின்று கொண்டு பாடி கொண்டு இருப்பார், ஏற்ற தாழ்வை அந்த ஒரு காட்சியில் சொல்லி இருப்பார்கள்.
இதன் தொடர்ச்சியாக அந்த ஊருக்கு வரும் IAS அதிகாரி கலெக்டர் கருப்பாயி(கதாநாயகி) ஆதி திராவிடர் வகுப்பை சார்ந்தவர் என்று அறிமுகம் செய்கிறார்கள் அந்த அதிகாரிக்கு P. A வாக சங்கர் சாஸ்திரி என்று படம் துவங்குகிறது.
படம் எதை பற்றி பேச போகிறது என்று ஆவலாக இருந்தேன், படத்தில் படிச்சு என்ன கிழிக்க போற பாடலில் இடையில் ஒரு வரி கொஞ்சம் உறுத்தியது- பாட்டாளி மேல வந்தா பாட்டாளிக்கே தாங்கதே என்று பாடல் வரிகள்.
படம் எதை நோக்கி போக போகிறது என்று பார்த்தால் ரிசர்வேஷன்( இடஒதுக்கீடு பற்றி பேச போகிற படம் இதனால் தான் அன்று படத்தை தடை செய்துள்ளனர், தடை நீங்கி இந்த படம் தேசிய விருது பெற்றுள்ளது.
Spoiler alert
காயத்ரி என்ற பெண் நன்றாக படிப்பதால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பிராமண வகுப்பை சார்ந்த பெண் தன் தந்தை சங்கர் சாஸ்திரி மற்றும் தாசில்தார் துணையுடன் தன் பிறப்பு சான்றிதழைப் மாற்றி அமைக்க படுகிறது காய்த்ரி கருப்பாயியாக மாறுகிறார் ஆதி திராவிடர் என்ற சான்றிதழ் பெற்று சலுகைகள் பெற்று IAS( கலெக்டர் ஆகிறார்.
இதை மறைத்து வாழ்ந்து வருகின்றனர் ஒரு கட்டத்தில் உண்மை வெளி உலகுக்கு தெரிய வருகிறது.
படத்தின் இறுதி காட்சி court room drama.
தான் செய்தது நியாயம் என்று சொல்வதற்கு பல காட்சிகளை கொண்டு தன் தேவைக்கு வளைத்து இருக்கிறார் இயக்குனர் மற்றும் வசனகர்த்தா.
படத்தின் இறுதி காட்சியில் வக்கில் ஒரு கேள்வி கேட்பார் - ஒருவருடைய வேலையை தட்டி பறித்து இருக்கிறீர்கள் உங்களுக்கு மனசாட்சி இல்லையா என்று கேட்பார், அதற்கு பதிலாக இதோ தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த பிள்ளையை தத்தெடுத்து இருக்கிறேன் அந்த குற்றத்தில் இருந்து மனசாட்சிக்கு பயந்து என்று பதில் சொல்லுவார்.
அந்த தத்து பையன் அம்மா உயிருடன் தான் இருப்பார் அந்த அம்மா ஒரு படி மேலே சென்று சாட்சி கூண்டில் ஏறி நான் சொத்துக்காக தத்து தர வில்லை அந்த அம்மா குணத்திற்காக என்று சொல்லி விட்டு இறங்கி இருந்தால் கூட நான் கைதட்டி இருப்பேன் .
அதன் பின் அந்த கலெக்டர் வீட்டில் வேலை செய்யும் பணி பெண் தான் அந்த அம்மா அவர்கள் சொல்கிறார்கள்-மொழி போராட்டத்தில் கணவன் இறந்து விட்டார், சுதந்திர போராட்டத்தில் என் அப்பா செத்து விட்டார், சிப்பாய் கலகத்தில் என் பாட்டன் செத்து விட்டார் என்று சொல்லும் போது, பின்பு ஏன் அரசாங்கம் இவர்களை அம்போ என்று விட்டுவிட்டது யாரோ ஒருவர் சான்றிதழ் மாற்றி கலெக்டராக வந்து இவர்களுக்கு உதவ வேண்டுமா?
இந்த படம் பிராமணர்கள் பார்வையில் அவர்களுக்கான படமாக இருக்கும், இட ஒதுக்கீடு மூலமாக வருபவர்கள் இந்த படத்தை பார்க்கும் போது அதில் வரும் வசனங்கள் இவர்களுக்கு எதிரான படமாக இருக்கும் அதனால் தான் படம் தடைசெய்யப்பட்டது, இந்த படத்திற்கு எதற்காக தேசிய விருது வழங்கப்பட்டது என்று தெரியவில்லை மொத்த அரசாங்கத்தின் நடைமுறையை கேள்வி கேட்ட படம்.
இது என்ன சுண்டலா, குப்பு சாமி, ராமசாமி நடுவுல வந்து கை நீட்டினா தர என்று வசனங்கள் வேறு இதை எப்படி சென்சார் அனுமதி தந்தது என்று தெரியவில்லை.
இந்த படம் கடைசியாக சொல்ல வரும் செய்தி இட ஒதுக்கீடு என்பது பொருளாதார அடிப்படையில் தர வேண்டும், சாதிய அடிப்படையில் தர கூடாது என்று சொல்லி முடிக்கிறார்கள்.
இன்னும் இட ஒதுக்கீடு பற்றிய வாதங்கள் , விவாதமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது( current situation)
அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்
You tube ல் படம் உள்ளது.
May be an image of 2 people, musical instrument and text that says 'agi|music music Ore Oru Giraamathula ஒரே ஒரு கிராமத்திலே...'
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...