இந்த பொது சிவில் சட்டம் என்பது ஒரு ஆச்சரியமான விஷயம். ஆங்கிலத்தில் "Heads, i win, tails you lose" என்று ஒரு பழமொழி உண்டு.
அது போல இதை பிஜேபி அரசு கொண்டு வந்தாலும் கொண்டு வரா விட்டாலும் இந்த ஒரு விஷயத்தினால் 2024ல் மத்தியில் பிஜேபி ஜெயிப்பது உறுதியாகி விட்டது. எப்படி என்று பார்ப்போம்.
என் புரிதல்படி பொது சிவில் சட்டம் என்பதில் சொத்துரிமை, விவாகம் மற்றும் விவாகரத்து பற்றிய சட்டங்கள் இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவாகும்.
இதில் விவாக ரத்து சட்டங்கள் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதங்களில் பெரும்பாலும் பெண்களுக்கு எதிராகவே அமைந்துள்ளன. அதுவும் சில பிரிவுகளில் விவாகரத்து என்பது பற்பல வருடங்கள் எடுக்கக் கூடியவை.
ஆகவே இந்த சட்டங்கள் அனைவருக்கும் பொதுவானால் அளவற்ற மகிழ்ச்சி அடைவது இந்த மற்ற மதப் பெண்களே ஆகும். ஆகவே இந்த சட்டம் நிறைவேறினால், இந்தப் பெண்கள் கட்டாயம் பிஜேபிக்கு ஓட்டுப் போடுவார்கள்.
ஒரு வேளை சட்டம் அமலுக்கு வராவிட்டால் கூட, பிஜேபிக்கு இன்னும் வெற்றியைக் கொடுத்தால் அடுத்த ஐந்து வருடங்களில் கட்டாயம் கொண்டு வந்து விடுவார்கள் என்று திண்ணமாக நம்புவார்கள். ஏனென்றால் மோடி அரசு சொன்னதைச் செய்யும் அரசு என்று ஏற்கெனவே பல விஷயங்களில் நிரூபித்து இருக்கிறார்கள்.
எனவே சர்ச்சுகளிலும் மசூதிகளிலும் பிஜேபியைத் தோற்கடிக்க எத்தனை தீர்மானங்கள் போட்டாலும் பெண்கள் ஓட்டு பிஜேபிக்கு விழுவதை யாராலும் தடுக்க முடியாது. சென்ற முறை, அதாவது 2019ல் 2014ஐ விட அதிக வெற்றி பெற்றதற்கு முத்தலாக் தடைச் சட்டம் ஒரு காரணம் என்பது என் நம்பிக்கை.
அது போல் இந்த முறை எத்தனை கட்சிகள் எதிர்த்தாலும், பொது சிவில் சட்டம் வந்தாலும் விட்டாலும் பிஜேபிக்கு மற்ற மத பெண்கள் ஓட்டு கிடைப்பது நிச்சயம்.
No comments:
Post a Comment